மணிப்பூரின் உக்ரூல் மாவட்டத்துக்கு உள்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் கச்சாய் கிராமத்தில் எலுமிச்சை சாகுபடி பிரபலம். இதனை 'சிட்ரஸ் ஜம்பேரிலஷ்' என அழைக்கின்றனர். வட கிழக்கு இந்தியாவிலிருந்து அயல்நாட்டு தோட்டக்கலை பழம். இது புளிப்பு, அளவுக்காக புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
இங்கு வசிக்கும் தங்கல் நாகா பழங்குடியினர் எலுமிச்சையை பயிரிடுகின்றனர். இங்கு விளையும் எலுமிச்சையில் 51 சதவீதம் அஸ்கார்பிக் அமிலம் உள்ளது.
பிரகாசமான பெரிய மஞ்சள் நிற எலுமிச்சம் பழங்களுடன் பச்சை மரங்களில் இதனை பார்ப்பது அழகோ அழகு. வேளாண்மை, கூட்டுறவு நிறுவனம் 50 ஏக்கரில் 10 ஆயிரம் எலுமிச்சை கன்றுகளை நட்டு, நல்ல மகசூல் கண்டுள்ளது.
இந்த எலுமிச்சையை வெளியில் வைத்தால் பல நாள்களும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் பல வாரங்களும் நன்றாக இருக்கும். பழங்கள் ஜனவரி-மார்ச் வரையான மூன்று மாதங்கள் மட்டுமே கிடைக்கும்.
பழத்திலிருந்து சாறு, ஸ்குவாஷ், ஊறுகாய் தயாரிக்கின்றனர். சாறை பொடியாக்கி விற்பனை செய்யவும் முயற்சி நடக்கிறது. கச்சாய் தலைநகர் இம்பாலிலிருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.