ரோடேமாக் பாழடைந்த கட்டடங்கள்...

லக்சம்பர்க் நகரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் ரோடேமாக் என்ற பாழடைந்த கிராமம் உள்ளது.
ரோடேமாக் பாழடைந்த கட்டடங்கள்...
Published on
Updated on
1 min read

லக்சம்பர்க் நகரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் ரோடேமாக் என்ற பாழடைந்த கிராமம் உள்ளது. இங்கு 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை, தேவாலயம், பல கட்டடங்கள் உள்ளன. இவை இன்று கைவிடப்பட்ட நினைவுச் சின்னங்களாக மாறிவிட்டன. இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் இந்த நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக மதில் சுவர் கட்டி அழகான நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டது. இந்தப் பகுதி ஒரு இடைக்காலப் பொறியியலுக்குச் சான்றாக உள்ளது.

பண்டைய பிரபுக்களின் ரகசியங்களை கிசுகிசுக்கும் வளைந்த கூரைகளுடன் கூடிய மறுமலர்ச்சி கால பாதாள அறைகள் உள்ளன. 22 மீட்டர் ஆழமுள்ள கிணறு கூட உள்ளது.

ரோடேமாக்கின் கோட்டை கோபுரங்களுக்கு கீழே நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட தோட்டம் உள்ளது. மருத்துவ மூலிகைகள், உண்ணக் கூடிய தாவரங்கள்,காய்கறிகள், அலங்காரப் பூக்கள் என அனைத்தும் இன்றும் பொலிவுடன் உள்ளன. ஜூன் மாதத்தில் லாவென்டர், கெமோமில் பூக்கள் அற்புத நறுமனத்தை கோட்டைக்குள் எங்கும் பரப்புகின்றன.

கார்கோசோன் ஒரு பிரம்மாண்ட பழைய நினைவுச் சின்னப் பகுதியாகும், ரோடாமேக்கை 'சின்ன கார்கோசோன்' என அழைக்கின்றனர். இந்தக் கோட்டையும் நினைவுச் சின்னங்களும் மே முதல் செப்டம்பர் வரை மட்டுமே திறந்திருக்கும். அப்போது வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில், அவர்களுக்கு 12-ஆம் நூற்றாண்டின் நாகரிகத்தைப் பிரதி

பலிக்கும் ஆடைகளை அணிவித்து, நிகழ்ச்சிகளையும் நடனங்களையும் நடத்துகின்றனர்.இந்த இடத்திலிருந்து 21 கி.மீட்டரில் ஜெர்மன் எல்லை உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com