பசுமை நகரங்கள்..

ஆரோக்கியமான வாழ்வுக்கு சுத்தமான, பசுமையான நகரங்கள் மிக அவசியம்.
பசுமை நகரங்கள்..
Published on
Updated on
2 min read

ஆரோக்கியமான வாழ்வுக்கு சுத்தமான, பசுமையான நகரங்கள் மிக அவசியம். பல இந்திய நகரங்கள் அதிக மரங்கள் நடுவதின் மூலமாக காற்றைச் சுத்தமாக வைத்திருக்கவும், இயற்கையைப் பாதுகாக்கவும் முயலுகின்றன. அந்த வகையில், ஐந்து பசுமை நகரங்கள்.

மைசூரு:

'பாரம்பரிய நகரம்', 'கலாசார நகரம்' என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. பசுமை நகர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், மரங்கள் நிறைந்த சாலைகள் பாதுகாக்கப்பட்டு, பல்லுயிர் பாதுகாப்புக்கும் வழிவகை செய்யப்படுகிறது.

பெங்களுரு:

பெங்களுரில் பல இடங்களில் மரம் நடும் திட்டங்கள் செயல்படுகின்றன. ஏராளமான பூங்காக்கள் , ஏரிகள், தோட்டக்கலைக் கொண்ட நகரம்.

இங்கு ஐந்து பூங்காக்கள் மிகவும் பிரபலம். ஹைதர் அலி , அவருடைய மகன் திப்பு சுல்தானால் லால்பாக் அமைக்கப்பட்டது. இன்றுவரை சுதந்திரத் தின விழா, குடியரசு தின விழாக்கள் நடைபெறும்போது மலர் கண்காட்சிகள் பிரபலம்.

கப்பன் பூங்கா 300 ஏக்கரில் அமைந்துள்ளது. 6 ஆயிரம் மரங்களைக் கொண்டது. பூங்காவின் நடைபாதை சுற்றுச் சூழலை அனுபவிக்க மனம் விரும்பும்.

புத்தர் சாந்தி பூங்காவில் புத்தர் சிலையுடன் அழகிய பசுமையான பூங்காவையும் ரசிக்கலாம்.

பன்னேர்கட்டா தேசிய பூங்காவில் பட்டாம் பூச்சிகள், பூங்கா மரங்கள் சூழ ரம்யமாய் அமைந்திருக்கும்.

'ப்ரீடம் பார்க்' என்ற பூங்கா மாலை 5 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். சற்று ஒதுங்கியுள்ளதால் போராட்டங்களும் இங்கு நடத்த அனுமதி.

சண்டிகர்
சண்டிகர்Navneet Kaur

சண்டிகர்:

'சூரிய நகரம்' என அழைப்பர். சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க, சூரியச் சக்தியானது அதிகம் பயன்படுத்துகிறது. பல பூங்காக்கள் பசுமையான நீண்ட இடங்கள், மரங்களைக் கொண்டது.202021இல் மட்டும் இந்த நகரில் 7,164 மரங்கள், 52,901 புதர் மரக் கன்றுகள் நடப்பட்டன. அரசே மரக்கன்றுகளையும், புதர்கன்றுகளையும் இலவசமாக அன்பளிப்பாகத் தருகின்றது.இதனால் நகரமே சுத்தமாகவும் பசுமையாகவும் உள்ளது.

காந்தி நகரம் (குஜராத்):

சபர்மதி ஆற்றின் கரையில் உள்ள இந்த நகரை 'அழகான நகரம்' என அழைப்பர். திட்டமிட்ட அமைப்பு, நவீன உள்கட்டமைப்புக்கு பிரபலம். தூய்மையான பசுமை நகரம். இயற்கை அழகை அனுபவிக்க ஏதுவாய் ஏராளமான பூங்காக்கள், தோட்டங்களைக் கொண்டுள்ளது.

சரிதா உதயன் பூங்காவில் பல்வேறு வகையான மரங்கள், புதர்கள் பூக்கும் தாவரங்கள் உள்ளிட்டவை உள்ளன. இந்த்ரோடா இயற்கை பூங்காவும் சிறப்பு.

இந்தூர் (மத்திய பிரதேசம்):

30 டன் பச்சைக் கழிவுகளை மதிப்புமிக்க உரங்களாக மாற்றும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவ மழையிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரக் கன்றுகளை நட்டு இயற்கை நிலப் பரப்பை மீட்டெடுக்கின்றனர். 'பசுமை நுரையீரல் திட்டம்' எனும் பாரத் வான்க 36 ஏக்கரில் உருவாக்கப்பட்டு, பல்லுயிர் பெருக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் செயல்பாடு நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com