சிரி... சிரி...

'ஒரு வாரம் லீவ் வேணும்னு கேட்டே... ரெண்டே நாளில் வந்துட்டயே..?'
சிரி... சிரி...
Published on
Updated on
1 min read

'ஒரு வாரம் லீவ் வேணும்னு கேட்டே... ரெண்டே நாளில் வந்துட்டயே..?'

'கம்பெனி வேலையைவிட வீட்டு வேலை அதிகமாக இருக்கு சார்...'

தி.ரமேஷ், அரியலூர்.

---------------------------------------------------------------------------------------------------------

'உங்க பேங்கில் கார் வாங்க லோன் தருவீங்களா?'

'உங்களுக்கு கார் ஓட்ட தெரியுமா?'

'கொஞ்ச நேரத்துக்கு முன்ன வந்தவருக்கு வீடு கட்ட லோன் தரும்போது, வீடு கட்ட தெரியாமுன்னு கேட்கலையே..?'

-தீபிகா சாரதி, சென்னை - 5.

---------------------------------------------------------------------------------------------------------

'உன் கணவர் ஏன் உட்கார்ந்தபடியே தூங்குகிறார்..?'

'ஓ... அதுவா.. அவர் ஆபிஸில் அப்படியே தூங்கிப் பழக்கப்பட்டுட்டார்...?'

பர்வீன் யூனூஸ், சென்னை.

---------------------------------------------------------------------------------------------------------

'அந்த பேங்கில் லோன் தருவோமுன்னு சொல்லியும் நீங்க ஏன் வேண்டாமுன்னு சொல்லிட்டீங்க?'

'அவங்க 'இன்ட்ரஸ்ட்' இல்லாமல் தருவதாகச் சொன்னாங்க.. அதான் வேண்டாமுன்னு சொல்லிட்டேன்...'

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

---------------------------------------------------------------------------------------------------------

'இன்று கனமழை பெய்யப் போகுதுன்னு எப்படி சொல்றீங்க..?'

'மேம்பாலத்துல வரிசையா கார்களை நிறுத்தி வைச்சிருக்காங்களே.. அதை வச்சிதான் சார்...'

-இமாரா ஷான்úஸ, சென்னை.

---------------------------------------------------------------------------------------------------------

'என்னது காருக்கான இன்சூரன்ஸ் பாலிசியில் இயற்கை பேரிடர் ரிஸ்க்கை சேர்க்க வேண்டாமா? ஏன் சார்..?'

'காரை நான் மேம்பாலத்துல நிறுத்திடுவேன்... அதான்...'

ஈனோஸ் இப்ராஹீம், சென்னை.

---------------------------------------------------------------------------------------------------------

'என்னங்க இன்னிக்கு ஆபிஸ் போகலையா..?'

'இன்னிக்கு வேலைக்காரி இன்டர்வியூ இருக்குதுடி...?'

'இதுக்கு எதுக்குங்க இன்டர்வியூ..?'

'நீ வேற.. அவ...... என்னை கேள்விகள் கேட்டு அதுல நான் சரியா சொன்னால்தான் வேலைக்குச் சேர்வாளாம்...'

---------------------------------------------------------------------------------------------------------

'சரியாக விசாரிக்காமல் ஒருத்தனுக்கு ஜே.சி.பி. வாங்க லோன் கொடுத்தது தப்பா போச்சு...?'

'ஏன் சார்.. இ.எம்.ஐ. சரியா கட்டறதில்லையா..?'

'நீங்க வேற.. நைட்டோட நைட்டா ஜே.சி.பி.யை வைச்சு பாங்க் பக்கத்துல இருந்த ஏ.டி.எம். மிஷினை பெயர்த்து எடுத்துட்டு போயிட்டான்...'

---------------------------------------------------------------------------------------------------------

'எங்க எதிர்வீட்டுக்காரர் இருபது வருஷமா பென்ஷன் வாங்கிட்டு இருக்காரு...?'

'அவருக்கு 4045 வயதுதானே இருக்கும்.. அதுக்குள்ளே ரிடையர் ஆகிட்டாரா..?'

'சர்வீஸ்ல தான் இருக்காரு.. வேலை செய்யாமல் சம்பளம் வாங்கினால் அது பென்ஷன்தானே...'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com