ஸ்காட்டிஷ் தீவுகள் மொத்தம் 850 உள்ளன. இவற்றில் அவுட்டர் ஹெப்ரீட்ஸ் கூட்டத்தில் உள்ள ஒரு தீவு பாரா அல்லது பர்ரா. இங்கு வெண்கலயுகம், இரும்பு யுகம், கற்காலம் இவற்றில் வாழ்ந்த மக்களின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஊரை சற்றி ஏராளமான ஒற்றை கற்கள் நிற்கின்றன. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.இந்த ஊரின் ஸ்பெஷல், விமான ஓடு பாதையாகும்.
பாராவின் விமான நிலையம் மூன்று கி. மீ. நீளமுள்ள காகிள் ஷெல் கடற்கரைதான். அலைகள் தான் இதன் ஓடு பாதை. விமானங்கள் குறைந்த அலையில் மட்டுமே தரை இறங்கவும் புறப்படவும் முடியும். அதற்கேற்ப நேர அட்டவணையும் மாறும். இதற்காக திட்டமிட்ட விமானத்தை மட்டுமே இங்கு பயன் படுத்துகின்றனர்.
இதனால் உலகின் மிக அழகிய தரையிறங்கு இடமாக இந்தப் பாதை தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊரே கடல் சார்ந்த வெப்ப நிலை கொண்டது. இதனால் ஆண்டு முழுவதும் லேசான வெப்பம்தான் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.