சிரி... சிரி...

'கல்யாணப் பொண்ணுக்கிட்டே தனியா பேசினீயே..? என்ன சொன்னா?'
சிரி... சிரி...
Published on
Updated on
1 min read

'ஒரு பன் விலை எவ்ளோங்க..'

'எட்டு ரூபாய்... '

'பீட்சா விலை...'

'75 ரூபாய் இருக்கும்...'

'கொஞ்சுண்டு முட்டைக்கோஸ், வெங்காயம் எவ்ளோ...'

'பத்து ரூபாய்ங்க..?'

'நீங்களே சொல்லுங்க.. ஒரு பர்கர் ஏன் நூறு ரூபாய்க்கு விற்கிறீங்க.. அநியாயம்தானே..'

அ.சுஹைல்ரஹ்மான், திருச்சி.



'கல்யாணப் பொண்ணுக்கிட்டே தனியா பேசினீயே..? என்ன சொன்னா?'

'கல்யாணத்துக்குப் பிறகு விதவிதமாகச் சமைச்சு தருவியான்னு சொன்னா?'

ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.



'அமைச்சரே... பதுங்கு குழிகளை காண யார் வந்துள்ளார்கள்...?'

'போர் இல்லாத நேரத்தில் மாம்பழம், பலாப்பழங்களைப் பழுக்க வைக்க வாடகைக்கு விட சொல்லி காய் விற்பனையாளர் வந்தார். வாடகைக்கு விட்டு விட்டேன்.. மன்னா..?'

ரமா ராமசுவாமி, அய்யம்பேட்டை.



'சாப்பிட்ட பில்லில் ஐம்பத்தைந்து ரூபாய்தான் போட்டிருக்கு.. பாக்கி ஐந்து ரூபாய் கேட்டா முறைக்கறீங்க?'

'உங்களுக்கு 'பார்' பக்கம் போற பழக்கம் இல்லைப் போல.. சரி இந்தாங்க?'

ரத்னம் மரகதம், கோவை.



'பொங்கலுக்கும் தீபாவளிக்கும் பெரிய ஒற்றுமை இருக்கு?'

'என்ன அது..?'

'தீபாவளிக்கு முறுக்கு தீராது. பொங்கலுக்கோ பொங்கலே தீராது...?'

கி.சரஸ்வதி, ஈரோடு.



'என்னடா ரொம்ப யோசனையா இருக்கே..?'

'என் பெண்டாட்டி ஏதாவது சமையல் பண்ணி வச்சு.. இது என்னன்னு கண்டுபிடிக்கச் சொல்லி விளையாடறா?'

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'பதுங்குக் குழியிலிருந்த மன்னர் எதிரிகிட்ட எப்படி மாட்டினார்...?'

'மகாராணி மிக்ஸியை அங்கேயே கொண்டு போய் ஜூஸ் போட்டிருக்காங்க.. சத்தம் கேட்டு கண்டுபிடிச்சிட்டான்..'

அ.ரியாஸ், சேலம்.



'மருமகளே.. ரசத்தைக் கொஞ்சம் பெருக்கணும்மா..?'

'கொட்டிட்டிங்களா அத்தே...'



வி.ரேவதி, தஞ்சாவூர்.

'இவ்ளோ பேப்பர் ரோஸ்ட் சுட்டு வைச்சிருக்கீங்களே.. விக்கலைன்னா என்ன பண்ணுவீங்க?'

'ஹோட்டலை மூடுறதுக்கு முன்னாடி போன் போடுவோம்.. பழைய பேப்பர்காரர் வந்து எடைக்கு எடுத்துட்டு போயிடுவார்...'

ஈனோஸ் இப்ராஹீம், சென்னை.



'பெட் காபி கொடு..'

'எதுக்கு பெட்காபி..'

'நான் இன்னும் தூங்கப் போறேன்..'



'சாப்பாடு செலவு பிள்ளை வீட்டுதா?. பெண் வீட்டுதா?'

'மொய் எழுதும் நம்முடையது...'



'கோயிலில் பொங்கல் பிரசாதம் வாங்கினேன்...?'

'அப்ப ஏன் ஓட்டலுக்கு வேற போறே..?'

'சட்னி, சாம்பார் வாங்கப் போறேன்..'

பர்வதவர்த்தினி, பம்மல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com