சிரி... சிரி...

எனக்குள்ள புத்திசாலித்தனம் என் மகளுக்கும் அதே அளவுக்கு இருக்குங்க..?
சிரி... சிரி...
Updated on
1 min read

எனக்குள்ள புத்திசாலித்தனம் என் மகளுக்கும் அதே அளவுக்கு இருக்குங்க..?

'இதை வெளியே சொல்லாதே.. அவளுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது...''

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.



'சத்தியமா.. நாளையில் இருந்து குடிப்பதை நிறுத்திடறேன்... சரசு...''

'இதுபோதாதுங்க.. சைடு டிஷ்ஷும் சாப்பிடுறதை நிறுத்திடறேன்னு சத்தியம் பண்ணுங்க..?''

-ஈனோஸ் இப்ராஹீம், சென்னை.



'நடுராத்திரியில் உங்க கணவர் சிரிக்கிறது உங்களுக்கு எப்படிம்மா தெரியும்.''

'அக்கம்பக்கத்துல உள்ளவங்களே கதவைத் தட்டி, 'என்னாச்சு உன் புருஷனுக்கு'ன்னு கேக்கறாங்களே...''

-வி.ரேவதி, தஞ்சாவூர்.



'கல்யாணப் பொண்ணுக்கிட்ட எல்லோரும் என்ன சொல்றாங்க..?''

'மாமியாரை 'கண் கலங்காமல் பார்த்துக்கோ'ன்னு சொல்றாங்களாம்...''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.



'குழந்தைக்கு செல்லம் கொடுக்கலாமுன்னு டாக்டரை கேளுங்க..?''

'அவரை எதுக்கு கேட்கணும்...''

'டாக்டரை கேட்காமல் குழந்தைக்கு எதுவும் கொடுக்கக் கூடாதுன்னு உங்க அம்மா சொல்லி இருக்காங்களே...''



'நேத்து ராத்திரி கனவுல நீங்க எனக்கு நிறைய நகைகள் வாங்கித் தந்தீங்க..?''

'ஓ.. ஞாபகம் இருக்கே... உங்க அப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே...?''



'எதுக்கு விமலா.. பத்து டீ ஸ்பூனு வாங்குறே..''

'சாம்பாருக்கு பத்து டீ ஸ்பூனு மிளகாய்த் தூள் போடணும்னு போட்டிருக்கே... அதான்...''



'சம்பந்திக்கிட்ட நிச்சயதார்த்தத்தை எளிமையா செய்யணும்னு சொன்னது தப்பா போச்சு...''

'ஏன்...''

'தட்டு மாத்தும்போது அவர் கொடுத்தது பேப்பர் தட்டு.. நாம கொடுத்தது வெள்ளித் தட்டாச்சே...?''



'15 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தியோ அப்படியேதான் இப்போதும் இருக்கே...?''

'இருக்காதா பின்னே... அந்தக் காலத்துல எடுத்துக் கொடுத்த அதே புடவைகள்தானே இப்பவும் கட்டிக்கிட்டு இருக்கேன்...''



'என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்திருக்கே...?''

'கட்டிக்கப் போறது நான்தானே...?''

'துவைக்கறவனுக்குதானே கஷ்டம் தெரியும்...''



'நீயும் நானும் சுவிட்சர்லாந்து, அமெரிக்காவெல்லாம் சுத்திப் பார்க்குற மாதிரி நேத்து கனவு கண்டேன்...?''

'அப்படியாங்க.. எந்தெந்த இடத்துக்கெல்லாம் போனோம்...?''

'நீயும்தான் வந்தே.. அப்புறம் என்கிட்டே கேக்குறே...?''



'அடியே.. இத்தனை நாளா எனக்கு ஃபோன் பண்ணி கன்னாபின்னான்னு திட்டிட்டு சாரி... ராங் நம்பருன்னு வைக்கிறது நீதானே...?''

'அதெப்படி உங்களுக்குத் தெரியும்...?''

'அதான் பின்னாடி மாப்பிள்ளை பாவமுன்னு உங்க அப்பா சொல்லி சிரிக்கிறது காதுல விழுந்துச்சே...?''

-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com