சிரி... சிரி...

சிரித்து மகிழும் ஜோக்ஸ் குறித்து...
சிரி... சிரி...
Updated on
1 min read

என்னய்யா... பேப்பர் ரோஸ்ட் அங்கங்கே கிழிஞ்சி இருக்கே...?''

''இது பழைய பேப்பர் ரோஸ்ட் சார்...''

-பண்ருட்டி பரமசிவம்

''ஹலோ.. யாரு சமையல் ராணி சங்கீதா மேடமா.. தயிர் வடை செய்வதில் எனக்கு ஒரு சந்தேகம்...''

''கொஞ்சம் இருங்க.. என்னங்க.. தயிர் வடை செய்வதில் யாரோ சந்தேகம் கேட்கறாங்க... வாங்க அப்புறமா பைக்கை கழுவுங்க..?''

-என்.எஸ்.வி.குருமூர்த்தி, கும்பகோணம்.

''டாடி.. இந்த ஹோட்டலில் நாம் சாப்பிடவே இல்லை.. அப்புறம் ஏன் டிப்ஸ் தர்றீங்க..?''

''இந்த ஊரில் நல்ல ஹோட்டல் பேரை சொன்னாரே.. அதுக்குதான்..''

-விமலா சடையப்பன், காளனம்பட்டி.

''கப்பல்ல ரசம் வேணுமா? என்ன சார் கேக்கறீங்க?''

''கப்புல ரசம் கேட்டேன்...''

-பர்வதவர்த்தினி, பம்மல்.

''அநியாயத்துக்கு குழைகிறாரே மனைவியிடம்...''

''அவர் வடித்த சாதம் அதிகமாகக் குழைந்துவிட்டதாம்...''

-மஞ்சுதேவன், பெங்களூரு.

''மைசூரு பாவா? மைசூரு பாக்கா.. எது சரி...''

''சாஃப்டா இருந்தா மைசூருபா, கல்லு மாதிரி இருந்தா மைசூரு பாக்கு...''

''சார்.. சபோட்டா பழம் வாங்கிட்டு போங்க.. சீப்பா தர்றேன்...''

''வாழைப்பழம்தானே சீப்பா இருக்கும். நீ என்ன சபோட்டா பழத்தை சீப்பா தர்றேன்னு சொல்றே...''

-வி.ரேவதி தஞ்சாவூர்.

''இட்லி சூடா கிடைக்குமா?''

''இங்கே இல்லை.. ஆர்டர் பண்ணுங்க.. உங்க வீட்டுக்கே வந்து சூடா சுட்டு தர்றோம்....''

-ஏ.நாகராஜன், பம்மல்.

''பஜ்ஜியும் பேப்பர் ரோஸ்டும் ஒரே சமயத்துல ஆர்டர் பண்றீயே ஏன்..?''

''பஜ்ஜியில் இருக்கிற எண்ணெயை பேப்பரால உறிஞ்சி எடுக்க...?''

''பரோட்டாவை பேக்கரியில் வச்சி விக்கிறாங்களே...''

''இது பன் பரோட்டாவாம்...''

-ஈனோஸ் இப்ராஹீம், சென்னை.

''சர்வர்.. வெங்காய பஜ்ஜியை சின்ன தட்டுல கொண்டு வர்றீங்க?''

''சார்... இது சின்ன வெங்காய பஜ்ஜி...''

''உன் கணவர் தினமும் தியேட்டருக்கு போயிடுவாரா.. அவ்ளோ சினிமா பைத்தியமா...?''

''இல்லடி.. அவர் அங்கே ஸ்டாலில் பாப்கார்ன் விக்கிறார்...''

''சர்வர்.. ஆமை வடை சாப்பிட்டா சோம்பேறித்தனம் வருது...''

''அப்போ.. முயல் வடை சாப்பிடுங்க...?''

-இமாரா ஷான்ஸே, சென்னை.

''இனிக்கு அவியல், கூட்டு, பச்சடி எல்லாம் பிரமாதமா இருக்கே...?''

''போதும்.. போதும்... தற்பெருமை.. பேசாமல் சாப்பிடுங்க...?''

''ஏன்டா.. சும்மா தானே இருக்கே.. அம்மாவுக்கு ஏதாவது உதவி செய்யேன்..''

''என்ன செய்யணும்... டீ குடிக்கணுமா..?, காஃபி குடிக்கணுமா...?''

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com