'என்னங்க.. உப்புமாவில் உப்பு போட மறந்துட்டேன்...''
'பரவாயில்லை.. அப்படியே சமைக்கிறதை மறந்துவிடு.. நல்லா இருக்கும்...''
-நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
'நீங்க சினிமாவில் பாடறவங்களாச்சே... உங்க உடம்புக்கு என்ன?''
'சக்கரே... எனக்கு சக்கரே...''
-பண்ருட்டி பரமசிவம்
'ஏம்பா சர்வர்... உங்க ஹோட்டலில் வீட்டுமுறை சமையல் தானே..?''
'ஆமா சார்.. திட்டாம பரிமாறுவோம்..''
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'ஆனியன் கலரில் பட்டுப்புடவை வேணும்...''
'தெளிவாகச் சொல்லுங்கம்மா... சின்ன வெங்காயம் கலரிலா?, பெரிய வெங்காயம் கலரிலா..?''
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
'பேப்பர் ரோஸ்ட் ஏன் உடைஞ்சி போயிருக்கு...?''
'சார்..பிரேக்கிங் நியூஸ் நிறைய போட்டிருக்கோம்.. அதான்...''
-ஈனோஸ் இப்ராஹீம், சென்னை.
'இது என்ன தோசையை நான்கு பேர் தூக்கி வர்றாங்களே...''
'ஆம் மன்னா... இது பல்லக்கு தோசை...''
-மஞ்சுதேவன், பெங்களூரு.
'செங்கல்பட்டு ஸ்டேஷனில் வடை வாங்கிட்டு, காக்காய்க்கு போடாம வந்துட்டேன்..''
'அதனால் என்ன ஆச்சு...''
'மதுராந்தகம் வரை பறந்துவந்து ரயிலில் எட்டிப் பார்க்குது...''
'இட்லியைவிட ஒரு வடை கம்பி.. வடையைவிட ஒரு இட்லி கூட வேண்டும்...''
'புதிர் போடாமல் சொல்லுங்க... ரெண்டு இட்லி ஒரு வடையா..?''
'ஆறு இட்லி, அஞ்சு வடை,....''
-பர்வதவர்த்தினி, பம்மல்.
'பொண்ணு பிடிக்கலைன்னு சொன்னதும் அருவாளை தூக்கிட்டு வெட்ட வர்றாங்க அய்யா...?''
'நீங்க சொஜ்ஜி, பஜ்ஜியை வெட்டறதுக்கு முன்னாலே அதை சொல்லியிருக்கணும் சார்...''
-வி.ரேவதி, தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.