சிலிர்ப்பூட்டும் ஹீரோ...

சுமார் 2,500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் 'மிஷன் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங்' திரைப்படத்தின் வாயிலாக, ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் சிலிர்ப்பூட்டும் ஹீரோவாக வெளிவந்துள்ளார்.
சிலிர்ப்பூட்டும் ஹீரோ...
Updated on
2 min read

சக்கரவர்த்தி

சுமார் 2,500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் 'மிஷன் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங்' திரைப்படத்தின் வாயிலாக, ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் சிலிர்ப்பூட்டும் ஹீரோவாக வெளிவந்துள்ளார். பெரும் பரபரப்பு, அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்தப் படம் மே 17-இல் இந்தியாவிலும், 23-இல் அமெரிக்காவில் வெளியாகியுள்ளது.

ஏறக்குறைய 44 ஆண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்துவரும் டாம் குரூஸ்ஸூக்கு தற்போது அறுபத்து இரண்டு வயதாகிறது. மூன்று திருமணங்கள். பதினெட்டு வயதாகும் ஒரே மகள் சுரியோ டாம் மிடமிருந்து விலகியே இருக்கிறார்.

தற்போது டாம் குரூஸ், நடிகை அனா டே ஆர்மாஸ்ஸூடன் நட்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. டாம்மின் சொத்தின் மதிப்பு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய். 'ஜேம்ஸ் பாண்ட்' என்ற பிராண்ட் பிரசித்தம். இதற்குப் போட்டியாக தனக்கென்று உருவாக்கிக் கொள்ள, 'மிஷன் இம்பாசிபிள்' தொடர் திரைப்படங்களை அவர் உருவாக்கினார்.

எரிக் ஜென்ட்ரெசனுடன் இணைந்து கிறிஸ்டோபர் மெக்குவாரி எழுதி இயக்கிய 'மிஷன்: இம்பாசிபிள் - 2025', 2023-இல் வெளியான 'மிஷன்: இம்பாசிபிள்- டெட் ரெக்கனிங் பார்ட் ஒன்' கதையைத் தொடர்கிறது. 'மிஷன் இம்பாசிபிள்' தொடரின் எட்டாவது பாகமாகவும், இறுதி பாகமாகவும், 'தி ஃபைனல் ரெக்கனிங்' அமைந்துள்ளது. படத்தின் இரண்டு தயாரிப்பாளர்களில் ஒருவர் டாம் குரூஸ்.

முந்தைய படங்களில் நடித்த நடிகர்கள், நடிகைகளை மீண்டும் தொடர்ச்சிக்காக நடிக்க வைத்துள்ளனர். அசத்தும் படப்பிடிப்பு, அட்டகாச சண்டைக் காட்சிகள், அதிரடி போன்றவையே படத்தின் பிளஸ் பாயிண்ட்டுகள். 'ஈதன் ஹன்ட்' கதாபாத்திரத்தை இந்தப் படத்திலும் டாம் தொடர்கிறார்.

உலகளாவிய சக்திகளைக் கையாளும் திறன் கொண்ட சக்தி வாய்ந்த 'செயற்கை நுண்ணறிவான 'தி என்டிட்டி'யை' ஈதன் எதிர்கொள்கிறார். கடந்த கால வில்லன்களைப் போல 'தி என்டிட்டி' மனிதன் அல்ல; 'தி என்டிட்டி'யத் தோற்கடிக்க, 'ஈதன்' 2023' படத்தில் பார்த்த ஒரு மர்மமான சிலுவை வடிவ சாவியை மீட்டெடுத்து அதை 'போட்கோவா' என்ற மூழ்கிய ரஷிய நீர்மூழ்கிக் கப்பலுக்குள் ஆழமாக மறைந்திருக்கும் ஒரு கருவியைத் திறக்க வேண்டும். இந்தக் கருவியும் சாவியும் சேர்ந்து, 'தி என்டிட்டி'யை என்றென்றும் அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் 'விஷ மாத்திரையை' பயன்படுத்த வேண்டும்.

அணுசக்தி பதற்றம் அதிகரிக்கும் சூழலில், ஈதனின் காக்கும் பணி உலகளாவிய பேரழிவை எதிர்த்துப் போராடும் ஒரு பந்தயமாக மாறுகிறது. டாம் குரூúஸா 'ஈதன் ஹன்ட்'டாக நடித்துள்ளார். ரசிகர்களின் விருப்பமான ஹேலி அட்வெல், விங் ரேம்ஸ், சைமன் பெக், எசாய் மோரல்ஸ் வலுவான நடிப்பை அளிக்கின்றனர்.

கடலின் அடியில் கிடக்கும் ரஷிய நீர்மூழ்கிக் கப்பல் உருளும் காட்சிகள், நீர்மூழ்கிக்குள்ளே எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் மிரள வைக்கின்றன. மற்றபடி ஜேம்ஸ்பாண்ட் படம் இதைவிட ஆக்ஷன், அதிரடி, அதகளமாக இருக்கும். படம் முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வர்ணனை வேறு சோதிக்கிறது. 'மிஷன் இம்பாசிபிள்' இறுதி பாகம், மிக விரைவில் 'ஜியோ ஹாட்ஸ்டார்' தளத்தில் வெளியாகலாம்.

பொதுவாகப் படத்தின் ப்ரோமோஷனுக்கு நடிகைகளை அழைப்பார்கள். ஆனால், டாம் லண்டனில் வித்தியாசம் காட்டினார். விராட் கோலியின் ஒரே ஒரு 'லைக்'கில் புகழின் உச்சிக்குச் சென்ற மாடல் அவ்னீத் கௌர், நிஹாரிகா என்எம் போன்ற இன்ஃப்ளுயன்ஸர்களை டாம் இணைத்துகொண்டார். இவர்கள் டாம்முடன் எடுத்துகொண்ட படங்களை வெளியிட்டு 'டாம்மை சந்தித்தது உண்மையா? என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டோம்' என்று பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com