பேல் பூரி

பெரிய இலை
பேல் பூரி
Published on
Updated on
2 min read

கண்டது

(சென்னை வள்ளலார் நகர் அரசு அச்சகக் கூட்டுறவு பண்டகச் சாலையில் எழுதியிருந்தது)

நீர் மேலாண்மை ஆத்திச்சூடி

அகலத் தூறிடு

ஆழ்துளை நீக்கு

இருகரை சமன் செய்

ஈராறு இமை

உப்புநீர் வடி

ஊற்றுநீர் பெருக்கு

எரிபொருள் சேமி

ஏரியை காத்தல் செய்

ஐம்பொறி அழுக்கறு

ஒன்றாக்கு நீர்நிலை

ஓங்கிடும் உலகெல்லாம்

ஒளடதம் நீர்

-ஏ.வி.சேகர், சென்னை.

(முதுகுளத்தூர் அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)

பெரிய இலை

(சிவகங்கைக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

மாடு மறித்தான்

-தே.சந்தியா, விருதுநகர்.

கேட்டது

(பல்லாவரம் கண்டோன்மென்ட் பார்க்கிங்கில் இருவர்..)

தள்ளுபடி விலையில் வாங்கின கார் எப்படி இருக்கு...?

அடிக்கடி தள்ளும்படி' இருக்கு...!

-நெ.இராமகிரு,ஷ்ணன், சென்னை-74.

(திருச்சி தமிழ்ச் சங்கக் கூட்டத்தில் பேச்சாளர்..)

மக்கள் எல்லோரும் விளக்கேற்றும் எண்ணெய் திரி தீ போல் இருக்கணும். இந்த மூன்றையும் வேகமாகச் சொல்லிப் பாருங்க? எண்ணெய் திரி தீ' என்பது என்னை திருத்தி என' வரும். முதலில் நாம திருந்தணும். அப்பத்தான் உலகம் திருந்தும்...

-கோ.ராஜேஷ்கோபால், மணவாளக்குறிச்சி.

(திருச்சியில் உள்ள டிபன் கடையில் இருவர் பேசியது)

என்னண்ணே? இப்படி திடீர், திடீர்ன்னு விலையை ஏத்திடறீங்க?

ஒண்ணு சொல்லட்டுமா?

சொல்லுங்க..

தினம் - தினம் தங்கம் விலை ஏறிட்டே இருக்கே.. யாராச்சும் ஏன்னு கேட்கறீங்களா? சொல்லுங்க..?

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

யோசிக்கிறாங்கப்பா!

என்ன சொல்றாங்க என்பதைவிட எந்த நோக்கத்தோடு எப்படி சொல்றாங்கன்னு யோசிப்பதே உசிதம்.

-என்.கோமதி, திருநெல்வேலி-7.

மைக்ரோ கதை

வீட்டில் வாய் திறந்தாலே பொய்யே பேசும் தன் மகனை திருத்த பொய் பேசினால், அடி கொடுக்கும் ஒரு ரோபோட்டை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தார் தந்தை. இரவு தாமதமாக வந்த மகனிடம், ஏன் இவ்வளவு லேட் என்று தந்தை கேட்டார். பிரெண்ட்ஸ் கூட பேசிக்கிட்டு இருந்தேன் என்று மகன் சொல்ல, அவனை ரோபோட் தாக்கத் தொடங்கியது. ஐயோ சாரி... நான் சினிமாவுக்கு போயிட்டேன்... என்று மகன் உண்மையைச் சொன்னார்.

பார்த்தியா பையன் எப்படி பொய் சொல்றான். நான் எல்லாம் சின்ன வயசுல அப்பாக்கு முன்னாடி பொய் பேச மாட்டேன் என்று தந்தை சொல்ல, அவரை ரோபோட் அடித்தது.

ரெண்டு பேருமே பொய் பேசுறீங்க? அப்பாவுக்கு மகன் தப்பாம பிறந்திருக்கீங்க? என்று தாய் சொல்ல, அவரை அடிக்க ரோபோட் நெருங்கியது.

-எம்.பி.தினேஷ், கோவை-25.

எஸ்.எம்.எஸ்.

சில மனிதர்கள் கற்று தரும் பாடங்கள் எந்தப் புத்தகத்திலும் இருப்பதில்லை.

-குலசை நஜ்முதீன், மாம்பாக்கம்.

அப்படீங்களா!

ஏஐ.' எனும் செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகள் மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. கட்டளைக்கேற்ப தேவையான தகவல்களை ஒருங்கிணைத்து தேவையான அளவுக்கு வழங்கும் சாட் ஜி,பி.டி,' போன்ற சாட்பாட்களைப் பார்த்தோம். அதில், எந்தத் துறையாக இருந்தாலும் எந்தத் தகவலாக இருந்தாலும், செயற்கை நுண்ணறிவு நொடிப் பொழுதில் தொகுத்து வழங்கியது. பின்பு ஏ.ஐ.' புகைப்படங்கள் கட்டளைக்கேற்ப பிறப்பித்தது. இந்தப் புகைப்படங்களில் எது உண்மை, போலி என்பதைப் தேடிக் கண்டுபிடிப்பது கடினம்.

பின்னர் பிரபலங்களின் விடியோக்கள் ஏ.ஐ.'யில் உருவாக்கம் செய்யப்பட்டு டீப் ஃபேக்'காக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இதேபோல், ஒரு திரைப்படத்துக்கு தேவையான திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றுக்கான ஸ்கிரிப்டை ஏஐ சாட் பாட்கள் வழங்கின.

தற்போது அந்த ஸ்கிரிப்டைப் பயன்படுத்தி, ஆடியோவையும், அதற்கு ஏற்ப விடியோவையும் உருவாக்கும் வியோ-3 என்ற இதுவரையில்லாத அதிநவீன ஏ.ஐ. விடியோ செயலியை கூகுள் வெளியிட்டுள்ளது. சாதாரண எழுத்துவடிய ஸ்கிரிப்டை ஆடியோ, விடியோ, பின்னணி இசை என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி ஏ.ஐ. திரைப்படத்தைத் தயாரித்து அளித்து விடுகிறது. திரைத்துறையினரின் கேமரா, விடியோ, லைட்டிங், எடிட்டிங், ஆடியோ ரெக்கார்டிங், இசை என பல்வேறு கடின உழைப்பை ஏ.ஐ. கணினிக்குள் எளிதாக்கி திரைப்படத்தையே வெளியிட்டுவிடுகிறது.

தற்போது இந்த வியோ-3 அமெரிக்காவில் மட்டும் கூகுள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 250 டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் அறிமுகமாகும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com