வெறுத்தார்... ஏற்றார்

பள்ளியிலும் அக்கம்பக்கத்திலும் சிறார்கள் ஹிரணை வேடன்' என்று அழைத்து கேலி செய்வார்கள். இந்தச் சொல்லை வெறுத்தவர், ராப் பாடகர்' ஆனதும் தனது பெயராக ஏற்றுகொண்டார்.
ராப் பாடகர்
ராப் பாடகர்
Published on
Updated on
2 min read

பள்ளியிலும் அக்கம்பக்கத்திலும் சிறார்கள் ஹிரணை வேடன்' என்று அழைத்து கேலி செய்வார்கள். இந்தச் சொல்லை வெறுத்தவர், ராப் பாடகர்' ஆனதும் தனது பெயராக ஏற்றுகொண்டார்.

.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வேடனின் தாய் திருச்சி, மதுரை.. என்று வாழ்ந்து கேரளத்தின் திருச்சூரில் ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் குடிசைப் பகுதியில் குடும்பத்துடன் வசித்தார். பெற்றோர் கிடைக்கும் வேலைகளைச் செய்ய காலையில் குடிசையைவிட்டு கிளம்பிவிடுவார்கள். வீட்டில் இரண்டு மகன்கள், ஒரு மகள் என மூவரும் இருப்பதைச் சாப்பிட்டு பொழுதைக் கழிப்பார்கள்.

கேரளம் கொண்டாடும் வேடனுக்கு இருபத்து ஐந்து வயதாகிறது. இவரது பனியன்களில் அ', க' எழுத்துகள் அடிக்கடி இடம் பெறும். நெஞ்சில் அ' வை பச்சை குத்தியுள்ளார். அ' என்றால் அம்மா, அப்பா, அன்பு, அறிவு, அழகு, அரசியல், அஞ்சாமை' என்கிறார்.

இவரது பாட்டுகளில் தமிழ் சொற்களும் இடம் பெற்றிருக்கும். வேடனின் அணுகுமுறையும் கருப்பு நிறமும் லட்சக்கணக்கான ரசிகர்களை அந்நியப்படுத்தவில்லை. இலங்கைத் தமிழர்களிடத்திலும், தமிழ்நாட்டிலும்கூட வேடன் பிரபலமாகியிருக்கிறார். காரணம் சுடும் சொற்களால் வேடனால் எழுதப்பட்ட பாடல்களும், ராப் இசையும்தான்!

வியர்ப்பு துன்னியிட்ட குப்பாயம்' (வியர்வையால் பின்னப்பட்ட சட்டை) கேரளத்தவர்களிடையே மிகப் பிரபலமான பாடல் வரியாகும். தொடக்கப் பள்ளி படிப்புடன் நின்று விட்ட வேடனிடம் எப்படி இசை, பாடல் வரிகள் பிறக்கின்றன என்று கேட்டால் அவை எனது ரத்தத்தில் இருக்கின்றன' என்கிறார்.

வேடன் காதலிக்கு கிறங்கடிக்கும் பாடலை எழுதிப் பாடி, சமர்ப்பணம் செய்துள்ளார் . அது பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வேடனின் ரசிகர்களாகியிருக்கும் மூளை வளர்ச்சியற்ற சிறார்கள் வீடுகளுக்குச் சென்று கண்டு பேசி பாடல்களைப் பாடி மகிழ்விக்கிறார். இசை நிகழ்ச்சி மேடைக்கும் அவர்களை அழைத்து கெளரவிக்கிறார்.

லஜ்ஜாவதியே' பாடல் புகழ் ஜெஸ்ஸி கிப்ட் உள்பட இதர கேரள முன்னணி ராப் பாடகர்களுக்கு இல்லாத ரசிகர்கள் கூட்டம் வேடனுக்கு உருவாகியுள்ளது.

வேடனைச் சுற்றி பவுன்சர்கள், காவலர்கள். சுமார் இருபதாயிரம் ரசிகர்கள் எளிதாகக் கூடிவிடுவதால், கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் சில பாடல்களை வேடன் பாடியதும் நிகழ்ச்சி நிறுத்தப்படுகிறது. நிகழ்ச்சியை கடைசி வரிசையில் நின்று காண கட்டணம் 299 ரூபாய். முன்வரிசையில் நிற்க 499 ரூபாய்.

ஹிப்-ஹாப்' கலைஞர்களை மட்டுமே ஒப்பந்தம் செய்யும் இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் ராப் இசைக்குழுவான மாஸ் அப்பீல்' ராப்பர் - பாடலாசிரியர் வேடனை ஒப்பந்தம் செய்துள்ளது. நியூயார்க்கின் புகழ்பெற்ற இசைக்குழு நாஸின் ஆதரவுடன், இன்னொரு மும்பையைச் சேர்ந்த தென்னிந்திய இசைக்குழு வேடனுடன் இணைந்துள்ளது. வேடனின் இறுக்கமான பாதிப்பை ஏற்படுத்தும் இசையானது அண்மையில் வெளியாகியிருக்கும் நரிவேட்ட' மலையாளப் படத்தில் ப்ரமோ' பாடலைப் பாடி நடிக்கச் செய்துள்ளது.

நான் புதிய மனிதனாகத் திரும்புவேன். கஞ்சா, புகை, மது பழக்கத்தை விலக்குங்கள். அது தீய பழக்கங்கள்' என்று ரசிகர்களிடம் வேடன் கேட்டுக் கொண்டுள்ளார். போதை, மது, புகை பிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரங்களுக்கு வேடனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்ற குரல்கள் உயர்ந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com