'புறமுதுகிட்டு ஓடி வந்ததுக்கு சக்சஸ் மீட் தேவையா, மன்னா?'
'முதுகில் சிறு கீறல் கூட விழவில்லை, அமைச்சரே!'
'டாக்டர்! உங்க நாய் என்னைக் கடிக்க வருது!'
'சீட்டுல போட்டிருக்கிற மெடிக்கலை விட்டு வேற கடைக்கு ஏன் போறீங்க!'
-அ.ரியாஸ், சேலம்.
'புது நம்பர்லேர்ந்து கால் வந்தால் நான் எடுக்கவே மாட்டேன்!'
'ஏன், அப்படி?'
'கடன்காரனுங்க வேற வேற நம்பர்லேர்ந்து டிரை பண்ணுவானுங்க!'
'டாக்டர், என் மனைவிக்கு நீங்க சொன்ன பத்திய சாப்பாட்டையே நானும் சாப்பிடுறேன்!'
'தாம்'பத்தியம்'னா இதுதாங்க!'
'ஐம்பது கிலோ வெய்ட்டைக் கூட தூக்கிட்டு நடக்க முடியலை, டாக்டர்!'
'வெய்ட்டை இறக்கி வச்சிட்டு நடக்க முடியிதுல்ல?'
'பாடி வெய்ட்டை எப்படி டாக்டர் இறக்கி வைக்க முடியும்?'
'நாக்குல முள் குத்துன மாதிரி வலிக்குதா... என்ன சாப்பிட்டீங்க?'
'உப்புமா டாக்டர்!'
'அடடா... 'ஊசி'ப்போன உப்புமாவா?!'
'நண்பர்களோடு ஹோட்டலுக்குப் போனப்ப... சாப்பிடுறதுக்கு முன்னாடியே சர்வருக்கு இருபது ரூபாய் டிப்ஸ் கொடுத்தீயே, ஏன்?'
'இல்லாட்டி பில்லை நம்ம கையில கொடுத்துட்டுப் போயிருப்பாரே!'
'போரில் தோற்றுவிடுவதாக கனாக் கண்டேன் சோதிடரே?'
'கனவில்கூட தோல்வி தானா மன்னா?!'
'பூரி ஏன் சப்பையா இருக்கு?'
'நேற்று வரைக்கும் உப்பலாத்தான் இருந்துச்சு, சார்!'
- வி.ரேவதி, தஞ்சை.
'எதிர்த்தவீட்டுப் பொண்ணு கணக்குப் பாடத்துல 99 மார்க் வாங்கி இருக்காங்க!'
'மீதி ஒரு மார்க் என்ன ஆச்சு?'
'அதை நம்ம பையன் வாங்கி இருக்கான்!'
'எந்த வாகனமா இருந்தாலும் கண்டிப்பாக லைசன்ஸ் எடுக்கணும்!'
'என் பெயர் மயில்வாகனம்... நான் லைசென்ஸ் எடுக்கணுமா, சார்?'
-நடேஷ் கன்னா
'அந்த கால்நடை டாக்டர்கிட்ட மட்டும் ஏன்
அவ்வளவு கூட்டம் வருது?'
'அவரு நாய் வாலைகூட நிமிர்த்துவாராம்!'
'டாக்டர்கிட்ட வேலைக்குப் போனது தப்பாப்போச்சு!'
'ஏன்?'
'லீவு கேட்டா 'டோஸ்' கொடுக்கறாரு!'
-தீபிகா சாரதி, சென்னை -5.
'கல்யாண வீட்டுக்காரங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு ஏன் சொல்றே?'
'மொய் வைக்காதவர்கள் இலையில் கை வைக்கக் கூடாதுன்னு மைக்ல சொல்றாங்களே!'
'போர் முடியப் போகிறது என்று எதை வைத்துச் சொல்கிறாய்?'
'கூகுள் மேப்பில் புறமுதுகுப் பாதையைத் தேடுங்கள் என்று தளபதிக்கு மன்னர் உத்தரவிடுகிறாரே!'
-பேகம்பூர் ஷம்மு,
திண்டுக்கல்.
'என்ன சிஸ்டர்... ஸ்பெஷல் வார்டுன்னு சொன்னீங்க, கொசு கடிக்குதே?'
'சாதா வார்டுல எலி கடிக்கும், சார்!'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'பரோட்டோ மாஸ்டர் வேலை பார்த்த அனுபவம் இருக்கா?'
'பிசியோ தெரபிஸ்டா வேலை பார்த்த அனுபவம் இருக்கு, சார்!'
-க.நாகமுத்து, திண்டுக்கல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.