வியக்க வைக்கும் 'ஸ்பிட்ஸ்பெர்கன்'

நார்வேயின் வடக்குக் கடற்கரைக்கும், வட துருவத்துக்கும் இடையில், அதாவது ஆர்டிக் பெருங்கடலும் அட்லாண்டிக் பெருங்கடலும் சங்கமிக்கும் இடத்தில் 9 பெரிய தீவுகளும், நிறைய குட்டித் தீவுகளும் உள்ளன.
வியக்க வைக்கும் 'ஸ்பிட்ஸ்பெர்கன்'
Published on
Updated on
1 min read

நார்வேயின் வடக்குக் கடற்கரைக்கும், வட துருவத்துக்கும் இடையில், அதாவது ஆர்டிக் பெருங்கடலும் அட்லாண்டிக் பெருங்கடலும் சங்கமிக்கும் இடத்தில் 9 பெரிய தீவுகளும், நிறைய குட்டித் தீவுகளும் உள்ளன. அவற்றில் மிகப் பெரிய தீவு 'ஸ்பிட்ஸ்பெர்கன்'. 'ஸ்வால்பார்ட்' என முன்பு அழைக்கப்பட்டது. இதன் பொருள் 'குளிர்ந்த கரைகள்'.

திமிங்கில வேட்டையாளர்கள் தங்கி வேட்டையாடிய இந்த இடத்தில், நிலக்கரி சுரங்கங்கள் நிறைந்திருந்தன. இங்குள்ள நடைமுறைகள் வியக்க வைக்கும்.

எந்தக் குற்றமும் நடைபெறுவதில்லை. குடியுரிமைப் பிரச்னையில்லை என்பதால், காலவரையின்றி வாழலாம். வேலை செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. இங்கு பெண்கள் பிரசவிக்க அனுமதியில்லை. ஆனால், நார்வே சென்று குழந்தை பெறலாம். இறந்தவர்களின் உடல் சிதைவடைவதில்லை என்பதால், இங்கு அடக்கம் செய்ய இயலாது. 1918-இல் புதைத்த ஒரு உடல் அப்படியே இருக்கிறது. கட்டடங்கள்கூட சிதையாமல் உள்ளன.

தங்கியிருக்கும் இடத்திலிருந்து வெளியே துப்பாக்கி எடுத்துச் சென்றால் குற்றம் இல்லை. இது பனிக் கரடிகளைச் சமாளிக்கத் தேவைப்படும்.

கிரீன்லாந்தின் வட பகுதியில் இருந்தாலும் இதன் தெற்கு, மேற்குத் திசைகளில் நீர் உள்ளதால் இது பனியிலிருந்து விடுபட்டுள்ளது. ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் சூரியன் மறைவதில்லை. குளிர்காலத்தில் 24 மணி நேரமும் இருள் சூழ்ந்து இருக்கும். ஒரு இரவானது மூன்று மாதங்கள் நீடிக்கும். வடக்குப் பகுதி விளக்குகளைப் பார்க்க மிக சிறந்த இடம்.

சில ஆயிரம் பேர்தான் இங்கு வசிக்கின்றனர். ஹோட்டல்கள், கடைகள், சர்வதேச விமான நிலையம் உள்ளிட்டவை உள்ளன. இங்கு ஓர் அறிவியல் ஆய்வுக் கூடமும் உள்ளது. இங்கிருந்து 814 மைல் தூரத்தில் உள்ள பகுதி வட துருவத்தை ஆராய்வதற்கான சிறந்த இடமாகும். 25 மைல் சாலை மட்டுமே உள்ளது.

உலகளாவிய விதை பெட்டகமானது 2008-இல் திறக்கப்பட்டது. இங்குள்ள மொத்த நிலத்தில் 60% பாதுகாக்கப்படுகிறது. இங்கு 7 தேசிய பூங்காக்கள், 29 பாதுகாக்கப்பட்ட பகுதிகள், 15 பறவைகள்

சரணாலயங்கள், 6 இயற்கை இருப்பிடங்கள் உள்ளன. இங்கு இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமான பனிப் பாறைகள் உள்ளன. 60 சதவீத நிலம் பனியால் மூடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை 'ஆர்டிக் பாலைவனம்' என அழைக்கின்றனர். அதற்கேற்ப காற்று வறண்டிருக்கும்.

மொத்த பரப்பில் 10 சதவீத இடத்தில் மட்டுமே தாவரங்கள் உள்ளன. அதுவும் நூற்றுக்கணக்கில்தான். மரங்கள் இல்லை. குறுகிய கோடை, நீண்ட குளிர் காலமே இதற்குக் காரணம். 1971-இல் இருந்ததைவிட இன்று ஏழு டிகிரி வெப்பம் கூடுதலாகியுள்ளது.

துருவக் கரடிகளின் எண்ணிக்கை அதிகம். பூனை அறவே கிடையாது. 'பல்லால் நடக்கும் கடற்குதிரை' என்று அழைக்கப்படும் சீல்கள் மூன்றாயிரத்துக்கும் மேலும், 18 ஆயிரம் சிறிய அளவிலான கலைமான்களும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com