உலகின் மிகப் பெரிய தட்டையான உப்புத்தளம் சலார் டி உயுனி ஆகும். பொலிவியாவின் உயர்ந்த மலைகளில் உள்ள இந்த இடத்தில் பூமியானது மேகங்களுக்குள் மறையும்.
இதன் பரப்பளவு 10,582 சதுர கி.மீ. ஆகும். தென் மேற்கு பொலிவியாவில் ஆண்டிஸ் மலைகளுக்கு இடையே உள்ள ஆல்டிபிளானோ பீட பூமியில் உள்ளது.
மழைக்குப் பின்னர், அதன் மேற்பரப்பு முழு வானத்தையும் பிரதிபலித்து, கண்ணாடியாக மாறுகிறது. அப்போது, சொர்க்கத்தின் வழியாக நடப்பதுபோல் தெரியும்.
இந்தத் திகைக்க வைக்கும் காட்சி இயற்பியலின் எளிய தந்திரத்தால் உருவாக்கப் பட்டது.
'சலார் டி உயுனி' இறுக்கமான உப்புக் கற்களால் ஆனவை. இந்த உப்பானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வறண்டஏரியால் விட்டுச் செல்லப்பட்டது. மழைநீர் அதன் முழுமையான தட்டையான மேற்பரப்பில் சேகரிக்கப்படும்போது, அது சில செ.மீ. ஆழத்தில் ஒரு மெல்லிய, மென்மையான அடுக்கை உருவாக்குகிறது. அடுக்கு மிகவும் ஆழமற்றதாகவும் சமமாகவும் இருப்பதால் வானத்தை அப்படியே மிக அழகாகப் பிரதிபலிக்கிறது.
உப்பு மிகவும் வெண்மையாகவும் சமமாகவும் இருப்பதால் நாசா அதை செயற்கைக்கோள்களை அளவீடு செய்யப் பயன்படுத்தி வருகிறது. வறண்ட காலங்களில் கண்ணாடி மறைந்து உப்புப் படிகங்கள் முழு பரப்பளவும் பரவி உள்ளது. அப்போது சுற்றுலாப் பயணிகள் 'செல்பி' எடுக்கின்றனர். அதன் மீது வாகனங்களை ஓட்டுகின்றனர். மழைக்காலத்தில் மாயை திரும்புகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.