பூகம்பம் வந்தால், பெருவில் உள்ள ஆண்டடெஸ் மலைகள்தாளம் போடும்.
'மலைகளில் ஆழமான ஹம்மிங் அதிர்வு கேட்கிறது' என நீண்ட காலமாக கிராமவாசிகள் கூறுகின்றனர். இது உள்ளிருந்து பாடுவது போல் அருகில் உள்ள பள்ளத்தாக்குகள் வழியாக எதிரொலிக்கும். இதனை விஞ்ஞானிகள் புறக்கணித்தனர். ஆனால் இன்று மலைகள் உண்மையில் 'ஹம்மிங் செய்யும்' என்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அவை 20 டெசிபலுக்குக் கீழே உள்ளதால் மனிதர்களின் காதில் கேட்பதில்லை. பூகம்பம் ஏற்படும்போது அதிர்ச்சி அலைகள் தரை வழியாக மலைத் தொடர்களுக்குள் பயணிக்கிறது. சில மலைகள் திடமான கிரானைட் அல்லது சுண்ணாம்புக் கல்லால் ஆனவை. அவை அதிர்வுகளைப் பிடித்து, பெருக்கி மனிதன் கேட்கும் வரம்புக்குள் அதிர்வு ஒலியை உருவாக்குகின்றன.
பெருவின் ஆண்டிஸில் இந்த விளைவு மிக வலுவாக உள்ளது. அந்தப் பகுதியின் புவியியல் சிக்கலானது. கடினமான பாறை அடுக்குகள், ஆழமான பள்ளத்தாக்குகள், காலிக் குகைகள் ஆகியவை சரியான இயற்கைப் பெருக்கிகளை உருவாக்குகின்றன.
நில அதிர்வு அலைகள் தாக்கும்போது, ஆற்றல் எதிரொலிக்கிறது.
நில நடுக்கம் முடிந்தவுடன் பல நிமிடங்களுக்கு ஹம்மிங் தொடருகிறது. வர, வர குறைந்து காதில் விழாத நிலையை எட்டுகிறது. இமயமலை, கல் மலைகள் உள்பட உலகில் உள்ள அனைத்து மலைகளிலும் இந்த ஒலி உண்டு. இந்த ஒலி ஆபத்தானவை அல்ல. பூமியின் இயற்கை தாளங்கள்தான். உலகம் உயிருடன் இருக்கிறது. எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பதையே இது நினைவூட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.