இளவரசியின் காதல்...

மகாராஜா சாயாஜி ராவ் கெய்க்வாட்3, பரோடா மகாராணி சிம்னா பாய்க்கு 1892ஆம் ஆண்டில் மகளாகப் பிறந்தவர் இந்திரா தேவி.
இளவரசியின் காதல்...
Published on
Updated on
1 min read

மகாராஜா சாயாஜி ராவ் கெய்க்வாட்3, பரோடா மகாராணி சிம்னா பாய்க்கு 1892ஆம் ஆண்டில் மகளாகப் பிறந்தவர் இந்திரா தேவி. இவர் மேற்கத்தியப் பாணியில் கல்வி கற்றவர். புத்திசாலித்தனம், அமைதி, செயல்பாட்டுக்காகப் புகழ் பெற்றவர். இவருக்கு பதினெட்டு வயதாகும்போது, குவாலியர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த (அப்போது பாப்புலர் அரசு) மாதோவ் ராவ் சிந்தியாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்திரா தேவி டிசம்பர் 1911இல் தில்லி தர்பாரில் கலந்துகொண்டார். அங்கு 'கூச் பீஹார்' (தற்போது மேற்கு வங்கத்தின் ஒரு மாவட்டம்) சமஸ்தான இளவரசர் ஜிதேந்திர

நாராயணனைச் சந்தித்தார். நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன்பின்னரே காதல் மலர்ந்தது. மன்னர் திருபேந்திர நாராயணனின் மகனான ஜிதேந்திரா 1886இல் பிறந்தவர். இங்கிலாந்தில் படித்தவர்.

குவாலியர் மகாராஜாவுக்கு இந்திரா எழுதிய கடிதத்தில், 'நமது நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விடலாம்'' என்று கூறியிருந்தார். இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனால், இந்திராவை அவரது பெற்றோர் ஐரோப்பாவுக்கு அனுப்பி வைத்தனர். 1913இல் லண்டன், பாடிங்டன் பதிவு அலுவலகத்தில் ஜிதேந்திராவை மணந்து கொண்டார். குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.

இதனிடையே ஜிதேந்திராவின் மூத்த சகோதரர் மரணம் அடைய, ஜிதேந்திரா அரசரானார். இந்திரா தேவி ராணியானார். ஐந்து குழந்தைகள் பிறந்தன. இந்திரா தேவிக்கு திருமணமாகி, பத்து வருடங்கள் கழிந்த பிறகு ஜிதேந்திரா இறந்து போனார். இளம் விதவையானாலும், அவர் ராணியாக இருந்து 192236 வரை ஆண்டார். தனது மகன் ஜெக தீபேந்திராவை மைனர் மன்னராக்கி, பின்னாலிருந்து இயங்கினார். ஆட்சியைத் திறமையாகவும், நவீன முறையிலும் நடத்தி நற்காரியங்களைச் செய்தார். பெண் கல்வி, முற்போக்கு சீர்திருத்தங்களை ஆதரித்தார். கூச் பீகார் நிதி நிலைமையை மேம்படுத்தினார்.

கடன்களை அடைக்க ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தார். நிர்வாகிகளிடம் பேசி, செயல்திறனை அதிகரிக்க வைத்து நன்கு வேலை வாங்கினார். அரசுத் துறைகளை நேரடியாக மேற்பார்வை செய்தார்.

கூச் பீகார் அரசு குறித்து உயர்ந்த எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். அவரது அழகு, நிர்வாகத் திறமை இன்று வரை பேசப்படுகிறது.

இவருடைய ஐந்து குழந்தைகளில் கடைக்குட்டிதான் ஜெய்பூர் ராணி காயத்ரி தேவி. மகாராணி காயத்ரி தேவி 'ஜெய்பூர் ராஜமாதா' என அழைக்கப்பட்டவர். மூன்று முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர்.

நெருக்கடி நிலைப் பிரகடனத்தின்போது, காங்கிரஸையும் இந்திரா காந்தியையும் எதிர்த்தார். இதற்காக, ஐந்து மாதங்கள் சிறையில் இருந்தார். 1962-இல் மக்களவைத் தேர்தலில் மிக அதிக வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்று கின்னஸ் சாதனை புரிந்தார். இவரைப் பற்றி ஒரு திரைப்படமே வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com