பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பறக்கும் டாக்சி

உலகில் வியக்க வைக்கும் வகையில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளும், ருசிகரமான தகவல்களும் உள்ளன.

News image
Updated On :29 நவம்பர் 2025, 7:51 pm IST

உலகில் வியக்க வைக்கும் வகையில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளும், ருசிகரமான தகவல்களும் உள்ளன. அவற்றில் சில:

இந்தியாவில் பிரபலமாக உள்ள கசகசாவை அரபு நாடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது. அதை அங்கு வைத்திருப்பதே தண்டனைக்குரியதாகும். சில நாடுகளில் தலைவலி, வயிற்றுவலிக்கான மாத்திரைகளைக் கூட வைத்திருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன.

இந்தியாவின் முதல் சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான பார்லே 1929இல் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் இங்கு பிஸ்கட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

சிங்கப்பூரில் யாருக்கும் கடிகாரத்தை அன்பளிப்பாக வழங்கக் கூடாது. இது மரணத்தை நினைவுபடுத்துவதாக அவர்கள் கருதுகின்றனர்.

உலகின் மிக நீளமான இயற்கைக் கடற்கரையாக வங்கதேசத்தின் 'காக்ஸ் பஜார் கடற்கரை'யானது அறியப்படுகிறது. இங்குள்ள ஸ்போனி பாயின்ட் என்ற இடம் கடற்கரையின் மற்றொரு பிரபலமான பகுதியாகும். இங்கு குதிரைச் சவாரி, படகுச் சவாரிகள் பிரபலம்.

பிரிட்டனில் தேசியக் கொடியை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அது அவமதிப்பாகவோ, குற்றமாகவோ கருதப்பட மாட்டாது. அந்த நாட்டு மக்கள் தேசியக் கொடியால் மேலாடைகள், நீச்சல் உடைகளைக் கூட தைத்துக் கொள்கின்றனர்.

ரஷியாவுக்கு அடுத்தபடியாக வைர உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கிறது போட்ஸ்வானா. இங்குள்ள ஜ்வானெங், ஒராபா ஆகிய வைரச் சுரங்கங்களில் உயர்தரத்திலான வைரங்கள் உள்ளன.

இயற்கை வளங்களைக் கொண்ட 'காங்கோ' நாட்டில், கசாய் பகுதியில் உள்ள சுரங்கம் வைர உற்பத்தியில் முக்கியப் பங்கை வகிக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் 1850இல் 'ஹார்ப்பர்ஸ் மாகஸின்' என்ற பெயரில் அறுவடையாளர்களுக்காகத் தொடங்கப்பட்ட பத்திரிகை இன்றும் வெளிவருகிறது. 3.44 லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது.

தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள 'நவ்ரூ' எனும் தீவு நாட்டுக்கு அதிகாரபூர்வமான தலைநகரமே இல்லை. 21 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட இந்த நாடு உலகில் தலைநகரமே இல்லாத ஒரே குடியரசு நாடாகும். இங்கு பவளப் பாறைகள், வெள்ளை மணல் கடற்கரைகள் உள்ளன.

 நியூசிலாந்தில் வெறுங்கையில் புதிய காய்கறிகள், பழங்கள், தேன், இறைச்சி ஆகியவற்றை எடுத்துச் சென்றால் குற்றமாகும். அதையும் மீறி எடுத்துச் சென்றால், காவல் துறையினரால் அவை பறிமுதல் செய்யப்படுகின்றன.

 'பறக்கும் டாக்சி' எனும் புதிய தொழில் நுட்பம் சிங்கப்பூர், துபை போன்ற நாடுகளில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கோட்டாறு ஆ.கோலப்பன்

அண்டோரா நாட்டில் அரசியல் கட்சிகளோ, பத்திரிகைகளோ கிடையாது. கடிதங்களுக்கும் அஞ்சல் தலை ஒட்ட வேண்டியதில்லை. வருமான வரியும் கிடையாது. நீதிமன்றங்கள் இல்லை. படிப்பறிவு இல்லாதவர்களும் மிகவும் குறைவு.

ஒவ்வொரு மனிதனும் தினமும் சராசரியாக 30 ஆயிரம் வார்த்தைகள் பேசுகிறான். நிமிடத்துக்கு 15 சொற்களையும், மணிக்கு 900 சொற்களையும் பேசுகிறான். மொத்தமாகப் பார்த்தால் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் பேசுகிறான் என்று ஆய்வு ஒன்றின் முலம் தெரியவந்துள்ளது.

நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.