ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நச்சுத்தன்மை குணமாக...

என் வயது 51. என் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு பொறாமையினால் சிலர் எனக்கு இடுவிஷம் வைத்து விட்டதாகக் கருதுகிறேன்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:32 pm

எஸ். சுவாமிநாதன்

என் வயது 51. என் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு பொறாமையினால் சிலர் எனக்கு இடுவிஷம் வைத்து விட்டதாகக் கருதுகிறேன். வாந்தி, வயிற்று வலி, உணவு செரியாமை போன்ற உபாதைகளால் அவதியுறுகிறேன். எதைச் சாப்பிட்டால், இது குணமாகும்?

ரவீந்திரன், பாலக்காடு.

இடுமருந்து என்றொரு விஷம். இது விஷத்தைப் போல் திடீரெனக் கொல்லாமல், நாளாவட்டத்தில் சிறிது சிறிதாக உடலைத் தேய்த்துக் கொல்லும். இதை உணவில், பானத்தில் சேர்த்தும், வசிய மருந்தாக்கியும் கொடுப்பர். இதனால் நீங்கள் குறிப்பிடுவது போல் வாந்தி, வயிற்று வலி, உணவு செரியாமை முதலியவை வேறு எந்த சிகிச்சையாலும் குண

மடையாது. அந்த இடுவிஷம் வெளியேற்றப்பட்டாலன்றி குணம் ஏற்படாது. அந்த இடுவிஷத்தைப் போக்கத் தக்கதொரு விஷ முறிப்புப் பச்சிலை அகத்திக் கீரையாகும். உணவுப் பண்டமாக அடிக்கடி இதைச் சேர்த்துவர வயிற்றிலுள்ள விஷம் நீங்கிவிடும்.

ஏகாதசி போன்ற உபவாச விரதம் இருப்பவர்களுக்கு வயிற்றில் சரியான நேரத்தில் உணவு வந்து சேராமையால், அந்தந்த நேரத்துக்குத் தயாராகக் காத்து நிற்கும் ஜீரண நீர் சேர்ந்து, இரைப்பையில் கொதிப்பு மிகுந்து காணப்படும். அந்நிலையில் காலம் தவறி மறுபடி உண்ணும்போது, அவ்வுணவு பித்த மிகுதியால் ஜீரணமாகாமல் பருக்கை பருக்கையாக விரைத்துப் பொருமல், வாந்தி, தலைவலி, வயிற்று வலி முதலியவை உண்டாகலாம்.

அதுபோன்ற செரிமானக் கெடுதி ஏற்படாமல் இருக்கவே, நெல்லிக்கனி, அகத்திக்கீரை இவ்விரண்டு துவர்ப்பு, கசப்பு மிக்க உணவுப் பொருள்கள் உபயோகிக்கப் பெறுகின்றன. பித்தத்தின் கெடுதியை மாற்றித் தெளிவுறச் செய்து, இரைப்பை குடல் வேக்காளத்தைக் குறைத்து உணவைச் செரிக்க இவை உதவுகின்றன.

அகத்திக் கீரையின் இலையை ஆய்ந்து, ஒரு பிடியளவு எடுத்து எட்டு அவுன்ஸ் (ஒரு அவுன்ஸ் 30 மில்லி) தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து, நான்கு அவுன்ஸ் மீதமாகுமளவு காய்ச்சி வடிகட்டி சிறிது சர்க்கரை சேர்த்துத் தினமும் காலையில் சாப்பிட்டுவர, இடு விஷத்தினால் ஏற்படும் பித்தம் மிகுந்து வலியுடன் சாப்பிட்ட சாதம் ஜீரணமாகாமல் விதை விதையாக விரைத்து வாந்தியாகி உண்டாகும் வயிற்று வலி நிற்கும். ஜீரணம் நன்கு ஆகும். பசி சரியாகும். பித்தத்தினால் ஏற்படும் வயிற்று வலியில் பித்தத்தை வெளியாக்கி, இரைப்பையின் வேக்காளத்தைக் குறைக்க வல்லது.

இடுவிஷத்தில் ஏற்படும் குடல் வேக்காளத்தைப் போக்கவும், வெயிலில் அதிகம் அலைவது, அடுப்படியில் அதிக வேலை, புகையிலை சுருட்டு மிதமிஞ்சி ஏற்பது, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை விழுதலையைப் போக்கவும், இவற்றால் ஏற்படும் குடல் வெப்பம் தணிய, அகத்தியின் வெண்ணிறப் பூவையும் சமைத்துண்பது வழக்கம். பூவும் இலையும் கஷாயமிட்டுச் சாப்பிட, வயிற்றிலுள்ள கிருமிகள் வெளியாகும்.

இரைப்பையிலுள்ள அதிக பித்த சுரப்பைத் தன்பால் ஈர்த்து அப்படியே வெளியாக்கிவிடும். அதனால் பசி உபவாசமிருந்தவர்கள் பிறகு முதல் உணவின்போது இதை முக்கியமாகச் சேர்த்துக் கொள்வர்.

ஆயுர்வேத மருந்தாகிய 'கைவிஷபரிஹாரீ' என்ற மாத்திரை உங்களுக்குப் பயன் தரும். உடலில் மெதுவாகச் சேரும் நச்சுத்தன்மை, அன்றாடம் நம் உணவில், நீரில், காற்றில், மருந்துகளில், மாற்றமடைந்த உணவு முறைகளில் சேரும் நச்சுக்கூறுகள் நீண்ட காலத்தில் உடல் நலத்தில் குறைபாடுகளை ஏற்படுத்தலாம். இதைத் தணிக்க, இந்த மாத்திரையை காலை, மாலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன் வெந்நீரில் சாப்பிடுவது நல்லது. இது ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை ஆதரிக்கும். சோர்வு, உடல் கனத்த உணர்வு, செரிமானக் குறைவு ஆகியவற்றைக் குணப்படுத்த உதவும். ஒவ்வாமை, சளி அதிகம் வரும் நபர்களும் எடுத்துக் கொள்ளலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.