பஹாரி புல்லாஸ்

குளிர்காலங்களில் நடப்பதால் வரும் சங்கடங்களை தவிர்க்கும் வகையில், வாராணசி விசுவநாதர் கோயிலின் அர்ச்சகர்களுக்கு பஹாரி புல்லாஸ் காலணிகளை பிரதமர் நரேந்திர மோடி அன்பளிப்பாக வழங்கினார்.
பஹாரி புல்லாஸ்
Updated on
1 min read

ஜில் தரையில் வெறும் காலில் குளிர்காலங்களில் நடப்பதால் வரும் சங்கடங்களை தவிர்க்கும் வகையில், வாராணசி விசுவநாதர் கோயிலின் அர்ச்சகர்களுக்கு பஹாரி புல்லாஸ் காலணிகளை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அன்பளிப்பாக வழங்கினார். கோயிலுக்குள் இதனை அணியலாம்.

பிரதமரின் அன்பளிப்புக்குப் பின்னர், ஹிமாசலப் பிரதேசத்தின் குளிர்கால காலணிகள் அகில இந்திய அளவில் பிரபலமாகியுள்ளது.

இதன் தயாரிப்பு எப்படி?

பெண்கள் இதனை வீட்டினுள் பயன்படுத்தலாம். சணல் நார், செம்மறிக் கம்பளியால் ஆனது. ஹிமாசலத்தில் குலு பகுதியில் கைவினைக் கலைஞர்களால் செய்யப்படுகிறது.

இதனை கையால் செய்யப்பட்ட 'பாரம்பரிய புல் காலணி' என அழைக்கின்றனர்.

ஒவ்வொரு ஜோடியும் சணல் இழைகளை பயன்படுத்தி 'பாங்' என அழைக்கப்படுகிறது. கவனமாக நெய்யப்பட்டு நீடிக்கும் கயிறு உள்ளங்காலாக முறுக்கப்படுகிறது.

மேல்பகுதி, கையால் நூற்கப்பட்ட செம்மறிக் கம்பளியால் வடிவமைக்கப்படுகிறது. வண்ணமயமான நூல் எம்பிராய்டரியால் அலங்கரிக்கப்பட்ட இது இமயமலையின் துடிப்பான கைத்திறனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது இயற்கை சணல், கம்பளியால் கையால் நெய்யப்பட்டது. இயற்கை அக்குபிரஷர், பாக்டீரியா எதிர்ப்புத் தன்மைகள் கொண்டது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, மக்கும் பொருள்கள் துர்நாற்றம் வீசாது. பனிச்சூழலுக்கு உகந்துள்ளதால் பாராட்டப்படுகிறது.

புல்லா பல்லே, பெரு, பாங்கி சப்பல், பஹாடி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

பெங்களூரு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com