கோலிவுட் ஸ்டூடியோ!

இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.
கோலிவுட் ஸ்டூடியோ!
NSP
Published on
Updated on
2 min read

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தேவா!

இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அதற்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு ஆஸ்திரேலியா தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையத்தினால் அவர் கெளரவிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் தேவாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, அவைத் தலைவர் இருக்கையில் அமர வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பெருமதி

புயுடைய செங்கோலும் அவருக்கு வழங்கப்பட்டது. தேவாவுக்கு இப்படியான மரியாதைக் கொடுக்கப்பட்டதை அவருடைய இசைக் குழுவினர் ஆர்ப்பரித்துக் கொண்டாடியதுடன், அங்கு அவருடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தேவா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்கு தேவா பேசுகையில், 'இந்தத் தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பயணிக்கும் தெற்காசியக் கலைஞர்களின் இசை மற்றும் கலாசாரத்திற்கும் உரியது.

கடந்த 36 ஆண்டுகளாக எனது இசைப் பயணத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் எனது உண்மையான பலமாக இருந்து வந்துள்ளது. இந்த அங்கீகாரம் உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது'' என நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.

கார்மேனி செல்வம்
கார்மேனி செல்வம்

சமுத்திரக்கனி, கௌதம்மேனன் இணையும் 'கார்மேனி செல்வம்'!

ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கெளதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கார்மேனி செல்வம்' . தீபாவளிப் பண்டிகைக்கு வெளிவரவுள்ள இப்படத்தின் பாடல் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. 'பேராசை பட்டா தான் இறைவன் தருவான்' என்ற வரி இந்தப் படத்தின் மையக் கருவோடு ஒன்றியுள்ளது.

தனது கொள்கைகளைக் கைவிட்டு, மாற்றுப் பாதையில் செல்லத் தூண்டும் ஒருவரின் தார்மிகச் சங்கடத்தை படம் பிடிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமெளலியும், கெளதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுதல்களைப் பெற்றது.

இயக்குநர் ராம் சக்ரி கூறுகையில், 'நேர்மையான, உண்மையான மற்றும் உலகளவில் தொடர்புபடுத்தக்கூடிய ஒரு கதையை 'கார்மேனி செல்வம்' படத்தின் மூலமாகச் சொல்வதே எங்கள் நோக்கம் ஆகும். சாதாரண மக்களின் ஆசைகள் மற்றும் போராட்டங்களைப் பிரதிபலிக்கும் வகையில் டீசரில் உள்ள ஒவ்வொரு ஃப்ரேமும், ஒவ்வொரு வசனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

'கார்மேனி' பாடல் படத்தின் ஆன்மாவாக அமைந்துள்ளது. பார்வையாளர்கள் இதை வரவேற்பார்கள் என நம்புகிறோம்'' என்றார். பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

ஸ்வேதா மோகன்
ஸ்வேதா மோகன்

இசைக்கு நேர்மையாக இருந்திருக்கிறேன் ஸ்வேதா மோகன்!

சினிமா துறையில் 2021ஆம் ஆண்டுக்கு நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் ஆகியோருக்கும், 2022ஆம் ஆண்டுக்கு நடிகர்கள் விக்ரம் பிரபு, வி.சி. குகநாதன், பாடலாசிரியர் விவேகா ஆகியோருக்கும், 2023ஆம் ஆண்டுக்கு நடிகர்கள் மணிகண்டன், மரியம் ஜார்ஜ், நடன இயக்குநர் சாண்டி, பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கலைமாமணி விருது அறிவிக்கப்பட்ட பிறகு பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகன் செய்தியாளர்களிடையே பேசியிருக்கிறார். அவர், 'அனைவருக்கும் நன்றி. நான் எல்லோருக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கேன். தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அடையாளம்.

சொல்லப்போனால், ஆசைப்படாத ஒரு அடையாளம். அம்மாவுக்கு 4 வருஷத்துக்கு முன்பு கலைமாமணி விருது கிடைத்தது. இப்போது எனக்கு கிடைத்த இந்த விருது இன்னும் நான் பல தூரங்களுக்கு ஓடணும்கிற ஊக்கத்தைத் தந்திருக்கு. ஸ்வேதா மோகன்னு சொல்றது நான் மட்டும் கிடையாது.

எனக்குப் பின்னாடி இவங்க இருந்ததுனாலதான் இந்தப் பயணத்தை என்னால தொடர முடிஞ்சது. எனக்குச் சிறந்த பாடல்களைத் தந்த இசையமைப்பாளர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். முக்கியமாக, என்னுடைய குருமார்களுக்கும் நன்றி சொல்லியாகணும். நேற்று ஜி.வி. சார் 'வாத்தி' படத்தின் பாடல்களுக்காக விருது வாங்கியிருந்தது நானே வாங்கின மாதிரியான உணர்வைத் தந்தது. நான் விருதுகளுக்கும், அடையாளங்களுக்கும் பின்னாடி போகாத ஒரு நபர்.

15 வருஷத்துக்கு முன்னாடி, நான் கரியரைத் தொடங்கினப்போ நம்பர் 1 பாடகராகணும்னு, ஹிட் பாடல்கள் பாடணும்னு எந்த டார்கெட்டும் வச்சு வரல. மியூசிக் என்னுடைய வாழ்க்கை என்பதை மட்டும்தான் யோசித்து வந்தேன். விருதுகள் இரண்டாவது விஷயம்தான். இசைக்கு நான் நேர்மையாக இருந்திருக்கேன். என்னுடைய பெஸ்டை கொடுக்கத்தான் நான் எப்போதும் முயற்சி பண்ணுவேன்.'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com