ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீரில் மாவுப் பிரச்னை தீர வழி என்ன?

என் வயது 62. சிறுநீரில் மாவு கரைத்து விட்டது போல் ஒரு வகை வண்டல் தங்குகிறது. 'அல்புமின்யூரியா' என்று மருத்துவர் கூறுகிறார். இதைக் குணப்படுத்த ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீரில் மாவுப் பிரச்னை தீர வழி என்ன?
Published on
Updated on
2 min read

என் வயது 62. சிறுநீரில் மாவு கரைத்து விட்டது போல் ஒரு வகை வண்டல் தங்குகிறது. 'அல்புமின்யூரியா' என்று மருத்துவர் கூறுகிறார். இதைக் குணப்படுத்த ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?

சோமசுந்தரம், மதுரை.

உடலில் சிறுநீரகம் (கிட்னி) முக்கிய பங்கு வகிக்கிறது. அது நம்முடைய இரத்தத்தை வடி கட்டி தேவையற்ற கழிவுகளை மட்டும் சிறுநீராக வெளியேற்றுகிறது. ஆனால் சில சமயங்களில் 'அல்புமின்' என்ற புரதச்சத்து, சிறுநீருடன் வெளியேறுகிறது. இதையே அல்புமினுôரியா என்கிறார்கள்.

பொதுவாக சிறுநீரில் புரதம் இருக்கக்கூடாது. இருந்தாலும், சிறிய அளவில் சில நேரங்களில் (உடற்பயிற்சி, காய்ச்சல், மன அழுத்தம் ஆகிய காரணங்களால்) தற்காலிகமாகத் தோன்றலாம். ஆனால், தொடர்ந்து அல்புமின் வெளியேறினால், அது சிறுநீரக நோயின் ஆரம்ப எச்சரிக்கைச் சின்னமாகக் கருதப்படுகிறது.

அல்புமினூரியா ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக...

1. சர்க்கரை நோய் நீண்ட காலமாக சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தாமல் வைத்திருப்பது சிறுநீரகத்தைப் பாதிக்கிறது.

நீரிழிவு நெஃப்ரோபதி எனும் சிறுநீரகங்களில் உள்ள சிறிய இரத்த நாளங்களின் சிதைவு சிறுநீரகங்களை சரியாக வடிகட்ட முடியாமல் செய்கின்றன. இதனால் சிறுநீரகங்கள் சிதையத் தொடங்குகின்றன.

2. உயர் இரத்த அழுத்தம்: இரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால், சிறுநீரக இரத்தக் குழாய்கள் சேதமடைந்து புரதம் வெளியேறும்.

3. இதய செயலிழப்பு, நீர்க்கட்டுதல் போன்றவை சிறுநீரக செயல்பாட்டைப் பாதிக்கலாம்.

4. நீண்ட கால வலி நிவாரணிகள், சில ஆன்டிபயாடிக்ஸ் கீமோ தெரபி மருந்துகள்.

அல்புமினூரியாவின் அறிகுறிகள்:

கை, கால்களில் வீக்கம்

முகத்திலும், கண் சுற்றிலும் வீக்கம்

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை

உடல் சோர்வு, உணவு விருப்பம் குறைதல்

இந்நோயினால் ஏற்படும் சிக்கல்கள்:

நிரந்தர சிறுநீரக செயலிழப்பு டயாலிசிஸ் தேவைப்படலாம்.

உயர்இரத்த அழுத்தம் மேலும் மோசமாகுதல்

புரதம் இழப்பதால், இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

இதயக் கோளாறுகள், மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது.

ஊட்டச்சத்து குறைபாடு புரதம் இழப்பு காரணமாக உடல் பலவீனம், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு.

தடுப்பு வழிகள் :

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதிக உப்பு, அதிக புரதம் கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடல் எடையை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி நீண்ட நாள்கள் உபயோகிக்கக் கூடாது.

சீரான பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்

ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரை :

இந்துப்பை வறுத்துப் பொடித்து அரை உப்பு அளவில் சாப்பிடலாம்.

தானிக்காயின் கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பை அம்மியிலிட்டு அரைத்து பதனியுடன் சாப்பிடுவதால் மூத்திரத்திலுள்ள கலங்கல் நிறமெல்லாம் நீங்கி சுத்தமாகும்.

அரிசிக்குப் பதில் கோதுமையைச் சாப்பிடுவது நல்லது. பார்லி கஞ்சி போன்ற திரவமானதும் சிறுநீரை தாராளமாக வெளியேற்றும் பொருள்களும் நல்லது.

நெரிஞ்சிமுள்ளைச் சூரணமாகவோ கஷாயமாகவோ சாப்பிடுவது நல்லது.

தண்ணீர் விட்டான் கிழங்கு, சதாவரீ என்று பெயர். இதிலிருந்து தயாராகும் 'சதாவரீகிருதம்' எனும் நெய் மருந்தை, ஐந்து மில்லி லிட்டர் எடுத்து சிறிது சூடான பாலுடன் கலந்து காலை, மாலை உணவிற்கு முன் சாப்பிட்டு வர, சிறுநீர் தாராளமாகப் போகும். சிறுநீரில் வெளியேறும் அல்புமின் எனும் மாவுச்சத்து நின்று விடும். 'தாத்ரீகிருதம்' எனும் ஆயுர்வேத மருந்தையும் இது போல சாப்பிடலாம்.

இளசான முள்ளங்கியின் சாறு முப்பது மில்லி லிட்டர் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, அல்புமின் வெளியேற்றத்தைத் தடுத்து விடலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com