
இலையுதிர் காலம் பல நாடுகளில் நெருங்கி வருகிறது. அழகான நிலப்பரப்புகளைக் கொண்ட இந்நாடுகளில் நல்ல குளிரும் நிலவிவருகிறது.
இலையுதிர் காலங்களில் காடுகள் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் தங்க நிறங்களுடன் திகைப் பூட்டும் காட்சிகளை வழங்குகின்றன. குறிப்பாக கனடா, ஜப்பான், ஜெர்மனி, ஸ்லோவேனியா, பின்லாந்து, இத்தாலி மற்றும் தென் கொரியா நாடுகள் இலையுதிர் காலத்தில் வண்ணமயமாகக் காட்சி தரும் ஏழு நாடுகளாகும்.
ஸ்லோவேனியா
இலையுதிர் காலத்தில் பார்க்க வேண்டிய இடம் ஏரி பிஹெட். அதன் நீர் பரப்பில் சுற்றியுள்ள பீச் மேப்பிள் மற்றும் லண்டன் மரங்களின் வெண்கலம், தங்கம் மற்றும் கருஞ்சிவப்பு நிறங்களில் உமிழும் வண்ணங்கள் அழகோ அழகு. ஜுலியஸ் ஆல்ப்ஸ் முழுவதும் பரந்து விரிந்திருக்கும் டிரிக்லாவ் தேசிய பூங்கா அக்டோபர் மாதத்திற்குள் தங்க நிறத்தில் மாறி விடும்.
கனடா
கிழக்கு மாகாண காடுகள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் தங்க நிறங்களின் கலைடாஸ்கோப்பாக மாறுகின்றன. கியூபெக்கின் லாரன்ஷியன் மலைகள், கோன்குயின் மாகாண பூங்கா, நோவா ஸ்கோஷியாவில் உள்ள கபோட் பாதை கடலோரப் பாறைகள் மற்றும் கடின மரக்காடுகள் வழியாகச் சென்று அட்லாண்டிற்கு எதிராக கருஞ் சிவப்பு மற்றும் தங்கத்தின் பரந்த காட்சிகளை வழங்குகிறது. செப்டம்பர் மத்தியிலிருந்து அக்டோபர் நடுப்பகுதி வரை இந்த அழகிய காட்சிகளைக் காணலாம்.
ஜப்பான்
இலையுதிர்காலம் கொயோ என அழைக்கப்படுகிறது. இது ஓர் இயற்கை நிகழ்வு. மேப்பிள் மரங்கள் கருஞ்சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற நிழல்களில் காட்சியை வழங்குகின்றன. கியாட்டோல் கவனமாகப் பராமரிக்கப்படும் தோட்டங்கள் ஜப்பானிய மேப்பிள்களுக்கு பிரபலம். ஹொக்கைடோவில் சீசன் செப்டம்பர் மாத இறுதியில் தான் தொடங்குகிறது.
ஜெர்மனி
ஜெர்மனியின் இலையுதிர் காலம் என்பது தங்கம், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களைக் கொண்டது. குறிப்பாக கருப்பு வனப் பகுதி மற்றும் பாவரியன் ஆல்ப்ஸில். பீச் ஓக் மற்றும் ஏல் மரங்களால் நிரம்பிய கருப்பு வனத்தின் அடர்ந்த வனப்பகுதிகள் பசுமையான பைன்களுடன் வண்ணமயமான காட்சிகளைத் தரும். ரசிக்கலாம். ஜெர்மனியில் இலையுதிர் காலம் முனிச் நகரில் நடைபெறும் அக்டோபர் பெஸ்ட்டுடன் இணைந்து கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
பின்லாந்து
இங்கு ருஸ்கா பருவம். லாப்லாந்தில் இலையுதிர் காலம் துடிப்பான கொண்டாட்டத்தைத் தருகிறது. வெள்ளி, பிர்ச், மலை சாம்பல் மற்றும் ஆஸ்பென் காடுகள் சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறமாக மாறும். ஓலங்கா தேசிய பூங்கா இந்தக் கால கட்டத்தில் சூப்பர். மலைகள், நதி, பள்ளத்தாக்குகள் வண்ணத்தால் ஜொலிப்பதைக் காணலாம். பருவம் குறுகியது. செப்டம்பர் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் உச்சத்தைத் தொடும்.
இத்தாலி
இதன் இலையுதிர் காலம் ஒரு பொன்னான நிகழ்வு. டஸ்கனி மற்றும் லாம்பார்டி போன்ற பகுதிகள் துடிப்பான காட்சிகளை வழங்குகின்றன. ஓ டஸீகனில் சியாண்டி பிராந்தியத்தின் திராட்சைத் தோட்டங்கள் சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் மாறும். யுனெஸ்கோ உலக மற்றும் பாரம்பரிய தலமான வால்டி ஒர்சியாவின் ஓக் காடுகள் இலையுதிர் கால சூரியனின் கீழ் பிரகாசிக்கின்றன. ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு டோலோமைட்டுகளைப் பார்வையிடவும். அங்கு லார்ச் காடுகள் பொன்னிறமாக மாறும்.
தென் கொரியா
சியோலின் நம்சன் பூங்கா மற்றும் ஒலிம்பிக் பூங்காவில் கருஞ்சிவப்பு மற்றும் தங்க நிறமாக மாறும் மேப்பிள்கள் மற்றும் ஜின் கோக்குகள் உள்ளன. அதே நேரத்தில் கியோங் போகுங் அரண்மனை மைதானம் பண்டைய கட்டடங்களுடன் கூடுதலாக வண்ண மயமான மரங்களைக் கொண்டுள்ளன. அக்டோபர்நவம்பர் சீசன் உச்சம். சியோல் விளக்கு விழா அல்லது அறுவடை விழாக்கள் இதனை மேலும் மெருகூட்டுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.