சிரி... சிரி...

'ஏம்பா... இந்த பிளாட்பாரம் இல்லைன்னா என்ன பண்ணுவே?'' 'வாங்கிப் போட்ட ஏதாச்சும் ஒரு ஃபிளாட்ல தங்கியிருப்பேன், தாயி!''
சிரி... சிரி...
Published on
Updated on
1 min read

'ஏம்பா... இந்த பிளாட்பாரம் இல்லைன்னா என்ன பண்ணுவே?''

'வாங்கிப் போட்ட ஏதாச்சும் ஒரு ஃபிளாட்ல தங்கியிருப்பேன், தாயி!''



'என்ன டாக்டர்... மாத்திரைகளை ஸ்நாக்ஸ் டப்பால போட்டுக் கொடுக்குறீங்க?''

'தினமும் சாப்பிட நீங்க மறக்க மாட்டீங்களே!''



'ரெண்டு டீ கேட்கிறீங்களே... இன்னொன்னு யாருக்கு?''

'அதுவும் எனக்குத்தான்... டீ விலை ஏறிப்போறதுக்குள்ள சுதாரிச்சுக்கணுமில்லே!''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

'நமக்குள்ள கருத்து வேற்றுமையே வராது, டார்லிங்!''

'எதை வச்சுச் சொல்றீங்க?''

'உன் கருத்தே என் கருத்தா இருக்கும்போது எப்படிக் கருத்து வேற்றுமை வரும்?''



'இந்தப் புத்தகத்தை ஒரு தடவை படிச்சா போதும்... நம்ம கவலையில பாதித் தீர்ந்திடும்!''

'அப்ப ரெண்டு தடவை படிச்சா... முழுக்கவலையும் தீர்ந்திடும்னு சொல்லுங்க!''



'ஜவுளிக்கடை வளாகத்துல பார்க் ஒண்ணு கட்டுறாங்களே, எதுக்கு?''

'லேடீஸ் ஜவுளி செலக்ட் பண்ணி முடியிற வரைக்கும் புருஷன்காரங்க குழந்தைகளோட விளையாடி அவங்களைப் பார்த்துக்கவாம்!''



'கிச்சன்ல ராத்திரி திருடன் பாத்திரங்களை உருட்டுற சத்தம் கேட்டும் ஏன் என்னை எழுப்பலை?''

'நீங்கதான் நாளைய சமையலுக்குக் கொண்டைக்

கடலை ஊறவைக்கிறீங்கன்னு நினைச்சுட்டேன்!''



'மாஸ்டரை கூப்பிட்டு ஹோட்டல் முதலாளி வறுத்து எடுக்கிறாரே, ஏன்?''

'பொரியல் சரியா வருபடலைன்னு ஏகப்பட்ட கம்ப்ளெயிண்டாம்!''



'அந்த சாமியார்கிட்ட வயசானம்மா ஏதோ சொல்லிட்டுப் போகுதே... யாருங்க அது?''

'சாமியாரோட மாமியாராம்!''



'டான்ஸ் தெரிஞ்ச பொண்ணை கட்டிக்கிட்டது தப்பாப் போச்சு!''

'என்னாச்சு சார்?''

'வீட்டுல ஒரே ஆட்டமா ஆடுறா!''

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

'என் புருஷன் பேசுற அத்தனை கெட்ட வார்த்தைகளையும் என் மகன் பேசுறான்டி!''

'அது கெட்ட வார்த்தை இல்லடி... உன் புருஷனிடம் கேட்ட வார்த்தைங்க!''

-எம். அசோக் ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

'காதை கடிச்சிட்டுப் போறாளே... என்ன மேட்டர்?''

'நான் நகம் கடிப்பது தப்புங்கறா!''

-பர்வதவர்த்தினி, பம்மல்.

'நாயோட வாக்கிங் போன என் கணவரைக் காணலை!''

'அடப் பாவமே! ரெண்டுமே வாயில்லா ஜீவன்களாச்சே!''



'வீட்டுல காத்து வசதி எல்லாம் எப்படி?''

'என்ன அப்படிக் கேட்டுட்டீங்க... சுவிட்ச் போடாமலே ஃபேன் வேகமா சுத்துமுன்னா பாருங்களேன்!''



'டாக்டருக்குத்தான் ஒரு பேஷண்ட்கூட வரலையே... அப்புறம் எதுக்கு நர்ஸ் பேஸின்ல தண்ணி எடுத்துக்கிட்டுப்போறாங்க?''

'டாக்டர் முகத்தைக் கழுவிக்கிட்டு வீட்டுக்குப் போகப்போறாராம்!''

-தீபிகா சாரதி, சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com