'நரகாசுரனுக்குப் பிடிச்சது மைசூர் பாக்கும் அல்வாவும்தானா?'
'ஏன் கேக்குறே?'
'பெரும்பாலான அம்மாக்கள் தீபாவளிக்கு அதைத்தானே செய்யறாங்க!'
'தீபாவளிக்கு மறுநாள் தலைவர் பிரசாரம் வைச்சது ரொம்ப தப்பாப் போச்சு! '
'என்ன சொல்றீங்க?'
'தலைவர் மீது யாரோ மைசூர் பாக்கை வீசி மண்டையை உடைச்சிட்டாங்களாம்!'
'மன்னருக்குப் பிடிச்ச வெடி வாங்கிட்டு வந்திருக்கேன்!'
'அது என்ன வெடி?'
'ஓலை வெடிங்க!'
'தீபாவளி இனிப்பெல்லாம் உன் தயாரிப்பா? உன் வீட்டுக்காரர் தயாரிப்பா?'
'இரண்டு பேர் தயாரிப்பும் இல்லை. கடைக்காரர் தயாரிப்பு!'
'இன்ஸ்பெக்டர் சார்... இரண்டு நாளா என் மனைவியைக் காணலை. தேடிக் கண்டுபிடிங்க?'
'கவலைப்படாதீங்க! தீபாவளி நேரமில்லை... எந்த ஜவுளிக்கடையிலாவது புடவைக் குவியலுக்குள்ளே இருப்பாங்க!'
ஆர்.ஜெயலட்சுமி,
திருநெல்வேலி.
'என்னது... இதோட பேரு 'கோழை வெடி'யா? ஏன்?'
'பதுங்குக் குழியில் வச்சிதான்
வெடிக்கணுமாம்... மன்னா!'
பர்வீன் யூனுஸ், சென்னை.
'தீபாவளிக்கு ஓவியர் என்ன பட்டாசு வாங்குவார்?'
'தெரியலையே... என்ன வாங்குவார்?'
'பென்சில்!'
'குருவி வெடி கேள்விப் பட்டிருக்கேன்... இது என்ன மீன்கொத்திக் குருவி வெடி?'
'கொளுத்தி தண்ணீரில் போட்டாலும் வெடிக்கும்!'
'தாத்தா படுக்கையில் பாம்பு மாதிரி நெளியறாரே... ஏன்டா?'
'தலைவலின்னு பாம்பு மாத்திரையைப் போட்டுட்டாரோ, என்னவோ?'
'என்னங்க... வெடிவெடிச்சா மரக்கிளையில் உட்கார்ந்துக்குது?'
'அது குருவி வெடி!'
'கடனா உங்களிடம் வாங்கின வெடி வெடிக்கவே இல்லை... ஏன்?'
'கடனைத் திருப்பிக் கொடுக்கும்போதுதான் வெடிக்கும்!'
'விட்டுவிட்டு வெடிக்குதே... அது என்ன வெடி?'
'அது 'கேப்' வெடி!'
'பாக்கு வெடியை எப்படி வெடிக்கணும்?'
'உரலில் போட்டு இடிச்சால் வெடிக்கும்!'
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.