சிரி... சிரி...

'இந்த ஹோட்டல் வித்தியாசமானதா, எப்படி?'' 'இங்கே எல்லா லாங்குவேஜ் பேப்பர் ரோஸ்ட்டும் கிடைக்குமாம்!''
சிரி... சிரி...
Published on
Updated on
1 min read

'இந்த ஹோட்டல் வித்தியாசமானதா, எப்படி?''

'இங்கே எல்லா லாங்குவேஜ் பேப்பர் ரோஸ்ட்டும் கிடைக்குமாம்!''



'இனிமே ஆபீசுக்கு லேட்டா வரமாட்டீங்கன்னு சொல்றீங்களே... டூ வீலர் வாங்கிட்டீங்களா?''

'பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிட்டார்... தினமும் அவர்கிட்ட லிப்ட் கேட்டு வந்துடுவேன், சார்!''



'திருடன் உன் மனைவியை பெயர் சொல்லிக் கூப்பிட்டானாமே?''

'ஆமா... 'கீதா கீதா'ன்னு அவ பெயரைச் சொல்லிக் கூப்பிட்டான். அப்புறம்தான் தெரிஞ்சது... அவன் பீரோ சாவியைத்தான் 'கீ... தா'ன்னு கேட்கிறான்னு!''



'சாப்பிட வந்தவர் கூட என்ன பிரச்னை?''

'பேப்பர் ரோஸ்ட் ஒரு ஸ்கொயர் கேட்கிறார், முதலாளி!''

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'பாகவதர் ரொம்ப நல்லாப் பாடுறார்...''

'அதுக்காக, என்னோட தொடையில நீங்க தாளம் போட்டு ரசிக்கிறது ரொம்பத் தப்பு, சார்!''



'சாதா இட்லி ஒரு பிளேட்!''

'அப்புறம்?''

'தட்டு இட்லி ஒரு தட்டு!''

-பர்வதவர்த்தினி, பம்மல்.



'பதுங்குக் குழியில் கூட

சிசிடிவி கேமரா அமைச்சிருக்காங்களே?''

'மன்னர் அங்கு என்ன கூத்தடிக்கிறார் என்று மானிட்டரில் கண்காணிக்க ராணியின் ஏற்பாடாம்!''



'ஒரே பையன்கிறதால செல்லமா வளர்த்துட்டோம்!''

'நேரடியா விஷயத்துக்கு வாங்க... உங்க பையனுக்குச் சமைக்கத் தெரியுமா, தெரியாதா?''



'நீ கோபப்படாமல் இருந்தா எவ்வளவு அழகாயிருக்கே... தெரியுமா?''

'எதையாவது பேசி என் கோபத்தைக் கிளறாதீங்க!''



'தூங்க அடம் பிடிச்ச என் குழந்தைகிட்ட ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன்... கண்ணை மூடிக்கிட்டுத் தூங்கிட்டான்!''

'அப்படி என்ன கேட்டீங்க?''

'தூங்கப் போறீயா... இல்ல பாட்டுப் பாடி நான் தூங்க வைக்கட்டுமான்னு!''

-வி.ரேவதி, தஞ்சை



'உன் கணவர் சண்டே பிறந்தவர்தானே?''

'என்கூட சண்டை போடணும்னே பிறந்தவர்!''

-கே.ஜி.எஃப்.பழனிசாமி, கிழக்குத் தாம்பரம்.



'கடன் தீர நான் எந்தக் கோயிலுக்குப் போகணும்?''

'கடன் தீரணும்னா முதல்ல நீ வேலைக்குத்தான் போகணும்!''

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'டார்லிங் ! நாம தனியா பிரிஞ்சுபோய் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றீயே, ஏன்?''

'நீங்கதானே கல்யாணத்துக்குப் பிறகும் நாம சந்தோஷமாக இருக்கணும்னு ஆசைப்படுறீங்க!''

-எம்.பி. தினேஷ், இடையர்பாளையம்.



'கல்யாணமானவங்க ஜாதகத்தைக் கொண்டு வந்திருக்கிறீங்களே, என்ன பார்க்கணும்?''

'இவங்க டைவர்ஸ் ஆகாம சேர்ந்து வாழ்வாங்களான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க!''

-கே.நாகலட்சுமி, உள்ளகரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com