ஆட்டோக்காரர்...

'ஆண்டவா... இன்னைக்கு ஒரு நாளாச்சும் நல்லா ஓடணும், சாமி' என்று ஸ்டியரிங்கை பிடித்தபடியே கண்களை மூடி மனதுக்குள் வேண்டிக் கொண்டார் கணேசன்.
ஆட்டோக்காரர்...
Published on
Updated on
12 min read

அ. சுகந்தி அன்னத்தாய்

'ஆண்டவா... இன்னைக்கு ஒரு நாளாச்சும் நல்லா ஓடணும், சாமி' என்று ஸ்டியரிங்கை பிடித்தபடியே கண்களை மூடி மனதுக்குள் வேண்டிக் கொண்டார் கணேசன்.

சென்னையின் புறநகர்ப் பகுதியில் நெருக்கடியான தெருவில் இருந்து, பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட அவரின் பழைய மஞ்சள் ஷேர் ஆட்டோ, கதிர்வேல் நகர் பள்ளி வாசலில் என்ஜின் சத்தத்துடன் நின்றது.

பள்ளிச் சீருடையில் குழந்தைகள் கலகலவென ஆட்டோவில் இருந்து இறங்கிச் சென்றனர். அவர்களின் சிரித்த முகங்களைப் பார்க்கும்போது அவருக்குள் ஒரு நிம்மதி. அந்த நிம்மதி சில நிமிடங்களுக்குள்தான். காரணம், இந்தப் பள்ளிச் சவாரி மட்டுமே குறைவான நிரந்தர மாத வருமானம். அதன்பிறகு அவரது அன்றாடப் போராட்டத்தின் அத்தியாயம் ஆரம்பமாகும்.

இன்று கணேசனின் மகளுக்குப் பிறந்த நாள். புறப்படும்போதே, 'இந்தப் பிறந்த நாளுக்காவது, புது டிரெஸ் வாங்கித் தருவியாப்பா?' என்று கேட்டிருந்தாள். பள்ளியின் வாசலில் இருந்து ஆட்டோவை எடுத்த கணேசன், பிரதான நகரமான தாம்பரத்துக்குப் புறப்படத் தொடங்கினார்.

இனி பொதுப் பயணிகளை ஏற்ற வேண்டும். ஆனால், எங்கே? சாலைகள் மக்களின்றி காலியாக இருந்தன. பேருந்துகள் ஹாரன் ஒலியுடன் சீறிப் பாய்ந்தன. கார், பைக்குகளில் மக்கள் மின்னல் வேகத்தில் சென்றனர். ஷேர் ஆட்டோவை ஏறெடுத்துப் பார்க்கக்கூட யாருமில்லை. அதுவும் அவர் வைத்திருக்கும் மஞ்சள் ஆட்டோவை யாரும் கவனிக்கிறதே இல்லை.

நூற்றுக்கணக்கான வெள்ளை நிற டாடா மேஜிக் ஷேர் ஆட்டோக்கள் தாம்பரத்தில் வரிசை கட்டி நிற்கின்றன. அவற்றில் பல, நெருக்கியடித்து உட்கார்ந்திருக்கும் பயணிகளைச் சுமந்துகொண்டு அவரைத் தாண்டிச் சென்றன. 'இந்தக் காலத்துப் பசங்களுக்கு எல்லாம் ஸ்டைல்தான் முக்கியம். இந்தப் பழைய மஞ்சள் ஆட்டோன்னா ஓர் இளக்காரம்' என்று மனதுக்குள் அலுத்துக்கொண்டார்.

பயணிகள், குறிப்பாக இளசுகள் ஷேர் ஆட்டோக்களையே விரும்புவதை அவர் பலமுறை பார்த்திருக்கிறார். இடமே இல்லையென்றாலும், அதில் ஏறுவதற்கு அவர்கள் தயங்குவதில்லை. 'பழைய ஆட்டோ, மஞ்சள் வண்ணம் எல்லாம் தனது வருமானத்தைப் பாதிக்கிறது' என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். ஆனால், புது ஆட்டோ வாங்கவோ, பழையதை மாற்றி அமைக்கவோ அவரிடம் பணம் இல்லை. அன்றன்று சவாரிகள் கிடைப்பதில்தானே வீட்டில் அன்றன்று அடுப்பு எரிகிறது?

அடுத்து வந்த பேருந்து நிறுத்தத்தில் ஒரு கூட்டம் காத்திருந்தது. 'தாம்பரம்... தாம்பரம்...' என்று கணேசன் குரல் கொடுத்தார். யாரும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. பேருந்து ஒன்று பின்னாடி வருவதைக் கண்ணாடி வழியே கவனித்த கணேசன், ஒரு பெருமூச்சுடன் ஆட்டோவை நகர்த்தினார். வெயிலின் உக்கிரம் அதிகரிக்க, கணேசனுக்குக் காலையில் சாப்பிடவும் மனம் வரவில்லை.

ஒரு பாட்டில் தண்ணீரைக் குடித்துவிட்டு, மீண்டும் ஸ்டார்ட் செய்தார். ஒவ்வொரு தெருமுனையிலும், ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் கண்கள் சுழல, 'யாராவது கை காட்டுவார்களா?' என ஏக்கத்துடன் கடந்து கொண்டிருந்தார். பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள்கூட, பேருந்து வரும் தடத்தைப் போனில் பார்த்துவிட்டு, பேருந்தில் ஏறவே காத்து நிற்கின்றனர்.

பின்தொடரும் பேருந்து நெருங்கி வருவதைக் கண்ட கணேசன், அடுத்த நிறுத்தத்திலாவது பேருந்து வருவதைக் கவனிக்காமல் யாராவது ஆட்டோவில் ஏற மாட்டார்களா? என்ற எண்ணத்தில், ஆட்டோவை வேகமாக ஓட்டினார். பேருந்து நிறுத்தம் இல்லாத ஒரு தெருமுனையில் ஒரு பெண்மணி சிறு குழந்தையுடன் நின்று கைகாட்ட, நிறுத்தி ஏற்றினார்.

அந்தப் பெண்மணியோ இவர் அவசரம் புரியாமல், நிதானமாக குழந்தையை ஏற்றி, அவரும் ஏறி அமர்ந்தார். அதற்குள் பேருந்து அவரை முந்தி கடந்துபோக, இன்று ஒற்றைப் பயணியோடுதான் செல்ல வேண்டும் என்று எண்ணியவாறே அடுத்த நிறுத்தத்திலாவது, பேருந்திற்கு முன்னாடி சென்றுவிட வேண்டும் என வேகமாக வண்டியை அழுத்தினார்.

அதற்குள் ஏறிய பெண்மணி, அடுத்துவந்த வங்கி அருகே இறங்க வேண்டும் என்று கூற, வேகத்தைக் குறைத்து வங்கி அருகே வண்டியை நிறுத்தினார். இறங்கும்போதும் சாவகாசமாக, தான் இறங்கி, குழந்தையை இறக்கி, 'எவ்வளவு?' என்று கேட்டவாறு கைப்பையைத் துழாவ, 'இருபது' என்று கணேசன் கூறினார்.

'இந்தத் தூரத்துக்காக இருபதா? பத்து எடுத்துக்கோங்க?' என்றவாறு, ஐந்நூறு ரூபாய் நோட்டைப் பயணி நீட்ட, 'காலையிலே முதல் சவாரியே நீதான்மா! ஐந்நூறை நீட்டினா எப்படிம்மா?' என்று கணேசன் சற்று எரிச்சலுடன் கேட்டார்.

'நான் என்ன பண்றது... என்னிடமும் சில்லறை இல்லையே?' என்றவாறு, நீட்டிய ஐந்நூறைக் கைப்பையில் வைத்துவிட்டு, 'ஜீ-பே இருக்கா?' என்று போனை எடுத்தவாறு கேட்டார் அந்தப் பெண்மணி.

பத்து ரூபாய்க்காகக் காத்திருந்த இந்த நேரத்தில், அடுத்தப் பத்து நிறுத்தங்களில் ஆள்களை அள்ளிப் போட்டுக்கொண்டு பேருந்து சென்றிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, வேறு ஒரு பேருந்தும் அவரைக் கடந்து சென்றது.

'அம்மா தாயே... உன் பத்து ரூபாயை நீயே வைத்துக் கொள்' என்று கூறிவிட்டு, ஆளைவிட்டால்போதும் என்பதுபோல் அங்கிருந்து புறப்பட்டார் கணேசன்.

'ஆடி மாசம் வந்துட்டா? எல்லாத்துக்கும் ஒரு பஞ்சம் வந்து ஒட்டிக்கும்' என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டார். 'கேஸ் போடுறதுக்கே காசு போதாதது போல! போன வருஷமும் இதே கதைதான். இந்த வருஷமும் மாதம் பள்ளி சவாரி இரண்டு தவிர, வேறு எந்த வருமானமும் இல்லை. பள்ளி சவாரிகளே கூடுதலாகக் கிடைத்தால் தேவலாம் என்றால், பள்ளி நாள்களில் ஒரு நல்லது கெட்டதுகளில்கூட கலந்து கொள்ள முடியாது' என்ற கவலையால் ஏற்பட்ட ரேகைகள் அவர் முகத்தில் படிந்தன.

அன்றைய தினம் காலை பதினொரு மணி போல இருக்கும், தாம்பரம் நிறுத்தத்தில், 'குரோம்பேட்டை, ஈச்சங்காடு... குரோம்பேட்டை, ஈச்சங்காடு...' என ஆட்டோவில் ஏற, பயணிகளை அழைத்துக் கொண்டிருந்தார். முன் சீட்டில் மூன்று பெண்கள் அமர, டிரைவர் வலப்பக்கமும் இடப்பக்கமும் இரு ஆண் பயணியர் ஏறிக் கொள்ள மொத்தம் எட்டுப் பேரை ஏற்ற வேண்டியவர், ஐந்து பயணியரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

சானிட்டோரியத்தில் இரு ஆண் பயணிகளும் இறங்கிவிட மூன்று பெண் பயணியரோடு, ஆட்டோ குரோம்பேட்டை வழியாக ஈச்சங்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வழியில், குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே வந்தபோது, 'ஈச்சங்காடு... ஈச்சங்காடு...' எனக் குரல் கொடுத்தார்.

பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பயணியருள், நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் அடிக்கிற வெயிலில் காலில் செருப்புக் கூட இல்லாமல், வேகமாக வந்து இவர் ஆட்டோவில் ஏறி அமர்ந்தார். கணேசன் வண்டியை எடுத்தவாறே, தனது ஆட்டோவின் கண்ணாடியில் பின்னாகப் பார்த்தபோது, அந்தப் பெண் மெல்ல மயங்கி சரிவதைக் கண்டார். உடனடியாக ஆட்டோவை ஓரமாக நிறுத்தினார். கணேசனும், மற்ற பயணிகளும் பதற்றம் அடைந்தனர்.

'அம்மா... அம்மா...' என்று கூப்பிட்டுப் பார்த்தார் கணேசன்.

அந்தப் பெண் கண்களைத் திறக்கவில்லை. கணேசன், மற்ற பயணிகளின் உதவியுடன் அந்தப் பெண்ணுக்கு முதலுதவி செய்யத் தொடங்கினார். பயணிகளில் ஒருவர் தனது தண்ணீர் பாட்டிலைத் திறந்து அந்தப் பெண்ணின் முகத்தில் தெளித்தார்.

மற்றொரு பயணி தனது கைப் பையிலிருந்து ஒரு சிறிய கைக்குட்டையை எடுத்து, அதை நனைத்து அந்தப் பெண்ணின் நெற்றியில் வைத்தார். கணேசன் தனது ஆட்டோவை விட்டிறங்கி ஓடிச் சென்று, அருகிலிருந்த கடையில் குளிர்பானம் வாங்கி வந்தார். மற்றொரு பயணி அதனை வாங்கி அந்தப் பெண்மணியின் வாய் அருகே கொண்டு சென்றார்.

'அம்மா, கொஞ்சம் இதைக் குடிங்க... வெயில் அதிகம். களைப்பு போலிருக்கு' என்றார் பரிவுடன். இந்தச் சிறிய உதவிகள், அந்தப் பெண்மணியின் உடலில் மெல்ல அசைவைக் கொண்டு வந்தன. சில நிமிடங்களில், அந்தப் பெண் மெதுவாகக் கண்களைத் திறந்தார்.

'ஐயோ, என்னாச்சு எனக்கு?' என்று கேட்டார் தடுமாற்றத்துடன்.

'மயங்கிட்டீங்கம்மா... இப்ப பரவாயில்லையா?' என்றார் கணேசன்.

'கொஞ்சம் மயக்கமா இருக்கு. ரொம்ப நேரமா சாப்பிடலை' என்றார் அந்தப் பெண்மணி.

கணேசன் தனது சவாரியைப் பற்றியோ, நேரத்தைப் பற்றியோ ஒரு துளிகூடக் கவலைப்படாமல், அந்தப் பெண்மணி முழுமையாகத் தேறும் வரை அங்கேயே காத்திருந்தார். மற்ற பயணிகளும், கணேசனின் மனிதாபிமானத்தைப் புரிந்துகொண்டு பொறுமையாக இருந்தனர்.

'நீங்க எங்க போகணும்?' என்று கணேசன் கேட்க, 'தெரியல எங்கேயாவது போய் விடுங்க!' என்றார் அந்தப் பெண்மணி.

'இதென்ன சோதனை, ஈச்சங்காடு என்று கூப்பிட்டது தப்பா போச்சோ?' என்று அலுத்துக் கொண்டாலும், 'உங்க புருஷன் நம்பர் அல்லது பிள்ளை நம்பர் சொல்லுங்க. இல்ல வீட்டில உள்ள யார் நம்பராவது சொல்லுங்க. போன் பண்ணி வரச்சொல்லலாம்...' எனக் கேட்டார் கணேசன், அந்தம்மா ஆங்கிலத்தில் பத்து நம்பரைத் தெளிவாகச் சொல்ல, 'இது யாரு நம்பருமா?' என்று கேட்டார் கணேசன்.

'வருண் அப்பா, வருண் அப்பா நம்பர்' என்றார் பெண்மணி. உடனே கணேசன் 'வருண் யாரு? உங்க பையனா?' என்றவாறே அந்த எண்ணை அழைத்திருக்க, 'எங்கேஜ்டு' என்று வருத்தத்துடன் கூறினார். இதனால் சோர்ந்து போன பயணியர் நேரம் ஆவதாக முணுமுணுக்க ஆரம்பித்தனர்.

உடனே கணேசன், 'அம்மா, இவங்க எல்லாம் வேலைக்குப் போறவங்க, நேரம் ஆகுது. இவங்களைக் கொண்டு விடணும். நீங்க இங்க இருக்கிற மரத்தடி நிழலில் உட்காருங்க. நீங்க சொன்ன நம்பரில் இருந்து யாரும் திரும்பப் பேசினால், நீங்க இங்க இருப்பதாய்ச் சொல்லி அவங்கள வரச்சொல்லலாம்' என்றார்.

அரைமனதாகச் சம்மதித்து, ஆட்டோவை விட்டு இறங்க எத்தனித்தார் அந்தப் பெண்மணி.

சட்டென ஒரு பயணி, 'அண்ணாச்சி, இவங்க பேசுறது சரியில்லை. இங்கே விட்டுவிட்டுப் போனா, மறுபடியும் எங்கேயாவது போய்டுவாங்க. இங்கே பக்கத்துல இருக்கிற காவல் நிலையத்துல ஒப்படைச்சிடலாமா?' என்று ஆலோசனை கூறினார். கணேசன் சம்மதித்தார்.

அருகில் இருந்த காவல் நிலையம் அருகில் சென்று ஆட்டோவை நிறுத்தினார். ஆனால், அது ஒரு போக்குவரத்துக் காவல் நிலையம். அங்கு பணியில் இருந்த ஒரு பெண் காவலரிடம், கணேசன் விவரத்தைச் சொன்னதும், 'ஐயா, இது எங்க ஸ்டேஷன்ல வராது. இந்த மாதிரி நிலைமையில இருக்கறவங்களுக்கு, 108 ஆம்புலன்úஸா, இல்ல 100-க்கோ போன் பண்ணுங்க. அவங்கதான் சரியாக உதவி பண்ணுவாங்க.' என்று அறிவுறுத்தினார்.

கணேசன் போனை எடுத்து, 108-க்கு டயல் செய்தார். தொடர்பில் வந்தவரிடம் விவரம் கூற, சில நிமிடங்களில், ஒரு ஆம்புலன்ஸ் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தது. ஆம்புலன்ஸில் வந்த மருத்துவப் பணியாளர்கள், அந்தப் பெண்மணியைப் பரிசோதித்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சில நிமிடங்களில், அந்தப் பெண்மணி கூறி, டயல் செய்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. தொலைபேசியின் மறுமுனையில் இருக்கும் நபரிடம் நடந்த விவரங்களைக் கூறி, தற்போது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருப்பதைக் கூற, 'நானும் என் மகனும் உடனடியாகப் போறோம்' என்று பதில் வந்தது அவரிடம் இருந்து.

அந்தப் பெண்ணுக்கு உதவ முடிந்த மனநிறைவு கணேசனுக்கு இருந்தாலும், தனது அன்றைய வேலைப்பளுவில் இது ஒரு எதிர்பாராதத் திருப்பமாகத்தான் அமைந்தது.

அடுத்த நொடி மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார். ஈச்சங்காடு சிக்னலில் பயணிகளை இறக்கிவிட்டு, மீண்டும் சவாரி தேடியவாறு ஆட்டோவை ஓட்டினார். யாரும் ஏறின பாடில்லை. 'இன்று வெள்ளிக்கிழமை. பல்லாவரம் சந்தைக்குச் சென்றால், பெரிய சவாரி அமையும்' என்று எண்ணிய கணேசன், ஆட்டோவைச் சந்தைக்கு அழுத்தினார். அப்போது இரண்டு பெண்மணிகள் அதிகப் பொருள்களுடன் அவர் ஆட்டோவைக் கைகாட்டி தாம்பரம் அருகில் உள்ள முகவரியைக் கூறினர்.

'ஏறுங்க' என்றார் கணேசன். ஏறும்போதே ஒரு பெண், 'அண்ணா, எவ்வளவு?' என்று கேட்டார். கணேசனும் நியாயமான கட்டணத்தைச் சொன்னார்.

அதைக்கேட்டு மற்றொரு பெண்மணி, 'என்னண்ணா, ஓலா, ஊபர்ல எல்லாம் இதைவிட குறைவா வருமே? நீங்க ஏன் இவ்ளோ அதிகமா கேட்கிறீங்க?' என்று பேரம் பேச ஆரம்பித்தார்.

கணேசன் அமைதியாக, 'அம்மா, ஓலா, ஊபர்ல எல்லாம் எங்க மாதிரி ஆட்டோ டிரைவர்கள்தான் வண்டி ஓட்டுறோம். ஆனா, அவங்களுக்குக் கமிஷன் போகத்தான் எங்களுக்கு மிச்சம் கிடைக்கும். அதெல்லாம் போக எங்களுக்கு ஒண்ணும் மிஞ்சாது. அதனால்தான் அதை விட்டுட்டு, தனி சவாரிக்கு வந்துட்டேன். நீங்க சொல்ற மாதிரி குறைவா வந்தா, பெட்ரோல், கேஸ் விக்கிற விலையில நாங்க எப்படி குடும்பத்தை நடத்துறது?' என்று விளக்கினார்.

அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிவிட்டு, 'சரிண்ணா, நீங்க ஒரு ரேட் சொல்லுங்க, அப்புறம் பார்த்துக்கலாம்' என்று கூறினர்.

கணேசன், 'வேண்டாம்மா, ஓலா, ஊபர்ல பாருங்க, குறைவா வந்தா அதில் போங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது' என்று சொன்னார்.

'இல்லைங்கண்ணா, நீங்க சொன்ன கட்டணமே பரவாயில்லை. நாங்க வர்றோம்' என்று ஒருமித்தக் குரலில் கூறினர். கணேசனும் சந்தோஷமாக ஆட்டோவை ஸ்டார்ட் செய்து தாம்பரம் நோக்கிப் பயணத்தைத் தொடங்கினார். கணேசனின் முகம் பிரகாசமானது.

'மகளுக்குப் பிறந்தநாள் பரிசாகப் புதிய உடை வாங்கிவிடலாம்' என்று மனதுக்குள் கணக்குப் போட்டார்.

பல்லாவரம் சந்தையின் பரபரப்பான தெருக்களில் இருந்து, மெல்ல ஆட்டோவை நகர்த்தி, தாம்பரம் செல்லும் பிரதான சாலைக்கு வந்து சேர்ந்தார் கணேசன். நிதானமாகப் பயணிக்கத் தொடங்கி, மளிகைபோன்ற அந்த மாலை கடந்த சில நிமிடங்களில், 'ஸ்ஸ்ஸ்ஸ்' என்ற சத்தத்துடன் வண்டி ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டுபோய் நின்றது. கணேசன் வண்டியை நிறுத்திவிட்டு, இறங்கி பின்னால் சென்றபோது, ஆட்டோவின் பின் டயர் பஞ்சர் ஆகியிருந்தது.

'என்ன ஆச்சு?' என்று கேட்டார் ஒரு பெண்மணி.

'பஞ்சர் ஆயிருச்சுமா!' என்று பதிலளித்தார் சுரத்தின்றி கணேசன்.

'என்னையா வண்டி வச்சிருக்க? குறைச்சு வர முடியுமான்று கேட்டப்ப, வாய்க்கிழிய பேசின. இப்போ என்ன ஆச்சு பார்த்தில?' என்று பெரும் கூக்குரலிட்டனர் மாறி மாறி இருவரும்.

'அம்மா கொஞ்சம் பொறுமையாக இருங்கம்மா! என்கிட்ட ஸ்டெப்பினி இருக்கு. பத்து நிமிஷத்தில மாற்றிப் போட்டுக் கிளம்பிடலாம்' என்றார் பணிவாக.

அந்தப் பெண்மணிகளோ, 'இந்த வண்டிக்காகக் பத்து நிமிஷமா காத்திருப்பார்களாம். நாங்க வேற ஆட்டோ பாத்துக்கிறோம்' என்று கூறிவிட்டு அதுவரை பயணித்ததற்கும் பணம் தராமல், இறங்கி வேறு ஆட்டோவை நிறுத்தி ஏறினர்.

தன் நிலையை நினைத்து, மெளனமாகிப் போன கணேசன் ஓரமாகத் தனது ஆட்டோவை நிறுத்தினார். சற்று நேரத்தில் டயரை மாற்றி, வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு ஏதாவது தாகத்துக்குக் குடித்து விட்டுவரலாம் என அருகில் இருந்த கடைக்குள் நுழைந்தார்.

அந்த நேரத்தில், பைக்கில் வந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் அவரது ஆட்டோ அருகில் வந்து, 'யாரு வண்டியா இது? நோ பார்க்கிங் ஏரியான்னு, தெரியாதா? ஸ்டேஷன் வந்து ஃபைனைக் கட்டிவிட்டுச் சாவியை வாங்கிட்டுப் போகட்டும்' என்று கூறியவாறு, கணேசன் வண்டியிலேயே மறந்து வைத்திருந்த சாவியை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டார்.

சத்தம் கேட்டு, கடையிலிருந்து கணேசன் வெளியில் வர, நடந்தவற்றை அருகில் நின்றவர் விவரிக்க, 'ஆண்டவா, இது என்ன புதுசோதனை?' என்றவாறு காலையில் மயங்கிய பெண்ணுக்காகச் சென்றிருந்த அதே காவல் நிலையத்துக்கு ஓடினார்.

ஆட்டோ சாவியை வைத்துக் கொண்டு வாசலிலேயே நின்ற அந்தக் காவலரைப் பார்த்ததும், 'இன்னைக்கு அந்த அளவுக்குச் சவாரி கிடைக்கவில்லை. கிடைச்ச சவாரியும் வண்டி பஞ்சர் ஆனதால பாதியிலே இறங்கிட்டாங்க. பசியில இருந்தேன். தெரியாம நிறுத்திட்டேன்' என்று தன் நிலையை விளக்கிக் கொண்டிருந்தார்.

இவரது சத்தம் கேட்டு உள்ளிருந்த வெளியே வந்த பெண் காவலர், காலையில் நடந்துகொண்ட இவரது மனிதாபிமான செயலை அந்தக் காவலரிடம் விவரிக்க, 'அதுசரிதான். ஆனால் சட்டத்தை மதிச்சு நடக்கணும். விதிமுறைகளை மீறினதற்காக ஃபைன் போட்டுவிட்டேன். அதை மாற்ற முடியாது. ஃபைன் கட்டித்தான் ஆகணும்' என்று கூறி, ஃபைன் ரசீதைக் கையில் கொடுத்துவிட்டார்.

இருந்த கொஞ்சப் பணத்தையும் ஃபைனுக்காகக் கட்டிவிட்டு, 'கிடைத்த வருமானமும் போய்விட்டது. மகளிடம் என்ன சொல்வது?' என மனம் முழுக்க பாரத்துடன், தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

உரிய நேரத்தில் பள்ளி சவாரியை ஏற்றி, வீடுகளில் இறக்கி விட்டுவிட்டு, ஆட்டோவைத் தன் வீட்டு வாசலில் நிறுத்திய கணேசன், தயக்கத்துடன் வீட்டுக்குள் நுழைந்தார். மகள் புதிய உடைக்காகக் காத்திருப்பது அவர் மனக் கண்ணில் தெரிந்தது.

வெறுங்கையுடன் உள்நுழைந்த அவரை மனைவி, 'என்னங்க, மகளுக்குப் பிறந்தநாள் டிரெஸ் எடுத்து வரலையா?' என்று ஏமாற்றத்துடன் கேட்டாள். கணேசனோ, 'இல்லம்மா, காலையிலிருந்து சவாரிகள் சரியா அமையல. கிடைத்த பணமும், அபராதத்தில போய்விட்டது' என்று வருத்தத்துடன் நடந்தவற்றைக் கூறினார்.

அவர் மனைவி ஆறுதலாக, 'பரவாயில்லைங்க! நீங்க ஏன் உங்க நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ கொஞ்சம் பண உதவி கேட்கக் கூடாதா?' என்று கேட்டாள். கணேசனின் முகம் சுருங்கியது.

'இல்லைம்மா, இதுவரைக்கும் நான் யாரிடமும் பணம் கேட்டு நின்னதில்லை!' என்று வருத்தப்பட்டார்.

அந்த நேரத்தில் போன் ஒலித்தது. கணேசன் போனை எடுத்து, 'நான் கணேசன் பேசுறேன்' என்று பணிவுடன் பேசினார்.

மறுமுனையில் காலையில் உதவி செய்த பெண்மணியின் கணவரின் குரலாக அது இருந்தது.

அதில் பேசியவர், 'ஐயா, இப்போ என் மனைவி நல்லா இருக்கா. ஒரு சின்ன மன வருத்தத்தில காலையிலேயே வீட்டைவிட்டு வெளியே வந்துட்டார்! அவளைத் தேடி உறவினர்களுக்கு போனில் விசாரித்துக் கொண்டிருந்ததாலேயே முதலில் போனை அட்டன்ட் பண்ண முடியல. நீங்கள் அவருக்குச் செய்த உதவிக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. நீங்கள் எங்கிருக்கீங்க என்று சொல்லுங்க? நாங்கள் வந்து உங்களைக் கண்டிப்பாகச் சந்திக்கிறோம்!' என்று கூறினார்.

கணேசன், 'அதெல்லாம் வேண்டாம் ஐயா! ஒரு மனுஷனா என் கடமையைச் செஞ்சேன். அவ்வளவுதான்' என்றார்.

'இல்லை, நீங்கள் என் மனைவியைக் காப்பாற்றியிருக்கிறீர்கள். உங்களுக்கு நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும்' என்று கூறி போனை வைத்தார்.

அடுத்த நிமிடமே ஒரு தொகை ஜீபே மூலம் அவருடைய அக்கவுண்டுக்கு வந்து சேர்ந்தது. அது கணேசன் தன் மகளுக்கு உடை வாங்குவதற்குத் தேவையான தொகையாகவே இருந்தது. கணேசனின் உழைப்புக்கு மட்டுமல்லாமல் அவரது மனிதநேயத்துக்கும் கிடைத்த அங்கீகாரமாக அது அவருக்குத் தோன்றினாலும், தனது தேவைக்கு அந்தப் பணத்தை எடுக்கலாமா? என்ற எண்ணம் அவர் முன் கேள்வியாக எழுந்தது.

'ஆண்டவா... இன்னைக்கு ஒரு நாளாச்சும் நல்லா ஓடணும், சாமி' என்று ஸ்டியரிங்கை பிடித்தபடியே கண்களை மூடி மனதுக்குள் வேண்டிக் கொண்டார் கணேசன்.

சென்னையின் புறநகர்ப் பகுதியில் நெருக்கடியான தெருவில் இருந்து, பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட அவரின் பழைய மஞ்சள் ஷேர் ஆட்டோ, கதிர்வேல் நகர் பள்ளி வாசலில் என்ஜின் சத்தத்துடன் நின்றது.

பள்ளிச் சீருடையில் குழந்தைகள் கலகலவென ஆட்டோவில் இருந்து இறங்கிச் சென்றனர். அவர்களின் சிரித்த முகங்களைப் பார்க்கும்போது அவருக்குள் ஒரு நிம்மதி. அந்த நிம்மதி சில நிமிடங்களுக்குள்தான். காரணம், இந்தப் பள்ளிச் சவாரி மட்டுமே குறைவான நிரந்தர மாத வருமானம். அதன்

பிறகு அவரது அன்றாடப் போராட்டத்தின் அத்தியாயம் ஆரம்பமாகும்.

இன்று கணேசனின் மகளுக்குப் பிறந்த நாள். புறப்படும்போதே, 'இந்தப் பிறந்த நாளுக்காவது, புது டிரெஸ் வாங்கித் தருவியாப்பா?' என்று கேட்டிருந்தாள். பள்ளியின் வாசலில் இருந்து ஆட்டோவை எடுத்த கணேசன், பிரதான நகரமான தாம்பரத்துக்குப் புறப்படத் தொடங்கினார்.

இனி பொதுப் பயணிகளை ஏற்ற வேண்டும். ஆனால், எங்கே? சாலைகள் மக்களின்றி காலியாக இருந்தன. பேருந்துகள் ஹாரன் ஒலியுடன் சீறிப் பாய்ந்தன. கார், பைக்குகளில் மக்கள் மின்னல் வேகத்தில் சென்றனர். ஷேர் ஆட்டோவை ஏறெடுத்துப் பார்க்கக்கூட யாருமில்லை. அதுவும் அவர் வைத்திருக்கும் மஞ்சள் ஆட்டோவை யாரும் கவனிக்கிறதே இல்லை.

நூற்றுக்கணக்கான வெள்ளை நிற டாடா மேஜிக் ஷேர் ஆட்டோக்கள் தாம்பரத்தில் வரிசை கட்டி நிற்கின்றன. அவற்றில் பல, நெருக்கியடித்து உட்கார்ந்திருக்கும் பயணிகளைச் சுமந்துகொண்டு அவரைத் தாண்டிச் சென்றன. 'இந்தக் காலத்துப் பசங்களுக்கு எல்லாம் ஸ்டைல்தான் முக்கியம். இந்தப் பழைய மஞ்சள் ஆட்டோன்னா ஓர் இளக்காரம்' என்று மனதுக்குள் அலுத்துக்கொண்டார்.

பயணிகள், குறிப்பாக இளசுகள் ஷேர் ஆட்டோக்களையே விரும்புவதை அவர் பலமுறை பார்த்திருக்கிறார். இடமே இல்லையென்றாலும், அதில் ஏறுவதற்கு அவர்கள் தயங்குவதில்லை. 'பழைய ஆட்டோ, மஞ்சள் வண்ணம் எல்லாம் தனது வருமானத்தைப் பாதிக்கிறது' என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். ஆனால், புது ஆட்டோ வாங்கவோ, பழையதை மாற்றி அமைக்கவோ அவரிடம் பணம் இல்லை. அன்றன்று சவாரிகள் கிடைப்பதில்தானே வீட்டில் அன்றன்று அடுப்பு எரிகிறது?

அடுத்து வந்த பேருந்து நிறுத்தத்தில் ஒரு கூட்டம் காத்திருந்தது. 'தாம்பரம்... தாம்பரம்...' என்று கணேசன் குரல் கொடுத்தார். யாரும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. பேருந்து ஒன்று பின்னாடி வருவதைக் கண்ணாடி வழியே கவனித்த கணேசன், ஒரு பெருமூச்சுடன் ஆட்டோவை நகர்த்தினார். வெயிலின் உக்கிரம் அதிகரிக்க, கணேசனுக்குக் காலையில் சாப்பிடவும் மனம் வரவில்லை.

ஒரு பாட்டில் தண்ணீரைக் குடித்துவிட்டு, மீண்டும் ஸ்டார்ட் செய்தார். ஒவ்வொரு தெருமுனையிலும், ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் கண்கள் சுழல, 'யாராவது கை காட்டுவார்களா?' என ஏக்கத்துடன் கடந்து கொண்டிருந்தார். பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள்கூட, பேருந்து வரும் தடத்தைப் போனில் பார்த்துவிட்டு, பேருந்தில் ஏறவே காத்து நிற்கின்றனர்.

பின்தொடரும் பேருந்து நெருங்கி வருவதைக் கண்ட கணேசன், அடுத்த நிறுத்தத்திலாவது பேருந்து வருவதைக் கவனிக்காமல் யாராவது ஆட்டோவில் ஏற மாட்டார்களா? என்ற எண்ணத்தில், ஆட்டோவை வேகமாக ஓட்டினார்.

பேருந்து நிறுத்தம் இல்லாத ஒரு தெருமுனையில் ஒரு பெண்மணி சிறு குழந்தையுடன் நின்று கைகாட்ட, நிறுத்தி ஏற்றினார். அந்தப் பெண்மணியோ இவர் அவசரம் புரியாமல், நிதானமாக குழந்தையை ஏற்றி, அவரும் ஏறி அமர்ந்தார். அதற்குள் பேருந்து அவரை முந்தி கடந்துபோக, இன்று ஒற்றைப் பயணியோடுதான் செல்ல வேண்டும் என்று எண்ணியவாறே அடுத்த நிறுத்தத்திலாவது, பேருந்திற்கு முன்னாடி சென்றுவிட வேண்டும் என வேகமாக வண்டியை அழுத்தினார்.

அதற்குள் ஏறிய பெண்மணி, அடுத்துவந்த வங்கி அருகே இறங்க வேண்டும் என்று கூற, வேகத்தைக் குறைத்து வங்கி அருகே வண்டியை நிறுத்தினார். இறங்கும்போதும் சாவகாசமாக, தான் இறங்கி, குழந்தையை இறக்கி, 'எவ்வளவு?' என்று கேட்டவாறு கைப்பையைத் துழாவ, 'இருபது' என்று கணேசன் கூறினார்.

'இந்தத் தூரத்துக்காக இருபதா? பத்து எடுத்துக்கோங்க?' என்றவாறு, ஐந்நூறு ரூபாய் நோட்டைப் பயணி நீட்ட, 'காலையிலே முதல் சவாரியே நீதான்மா! ஐந்நூறை நீட்டினா எப்படிம்மா?' என்று கணேசன் சற்று எரிச்சலுடன் கேட்டார்.

'நான் என்ன பண்றது... என்னிடமும் சில்லறை இல்லையே?' என்றவாறு, நீட்டிய ஐந்நூறைக் கைப்பையில் வைத்துவிட்டு, 'ஜீ-பே இருக்கா?' என்று போனை எடுத்தவாறு கேட்டார் அந்தப் பெண்மணி.

பத்து ரூபாய்க்காகக் காத்திருந்த இந்த நேரத்தில், அடுத்தப் பத்து நிறுத்தங்களில் ஆள்களை அள்ளிப் போட்டுக்கொண்டு பேருந்து சென்றிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, வேறு ஒரு பேருந்தும் அவரைக் கடந்து சென்றது.

'அம்மா தாயே... உன் பத்து ரூபாயை நீயே வைத்துக் கொள்' என்று கூறிவிட்டு, ஆளைவிட்டால்போதும் என்பதுபோல் அங்கிருந்து புறப்பட்டார் கணேசன்.

'ஆடி மாசம் வந்துட்டா? எல்லாத்துக்கும் ஒரு பஞ்சம் வந்து ஒட்டிக்கும்' என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டார். 'கேஸ் போடுறதுக்கே காசு போதாதது போல! போன வருஷமும் இதே கதைதான். இந்த வருஷமும் மாதம் பள்ளி சவாரி இரண்டு தவிர, வேறு எந்த வருமானமும் இல்லை. பள்ளி சவாரிகளே கூடுதலாகக் கிடைத்தால் தேவலாம் என்றால், பள்ளி நாள்களில் ஒரு நல்லது கெட்டதுகளில்கூட கலந்து கொள்ள முடியாது' என்ற கவலையால் ஏற்பட்ட ரேகைகள் அவர் முகத்தில் படிந்தன.

அன்றைய தினம் காலை பதினொரு மணி போல இருக்கும், தாம்பரம் நிறுத்தத்தில், 'குரோம்பேட்டை, ஈச்சங்காடு... குரோம்பேட்டை, ஈச்சங்காடு...' என ஆட்டோவில் ஏற, பயணிகளை அழைத்துக் கொண்டிருந்தார். முன் சீட்டில் மூன்று பெண்கள் அமர, டிரைவர் வலப்பக்கமும் இடப்பக்கமும் இரு ஆண் பயணியர் ஏறிக் கொள்ள மொத்தம் எட்டுப் பேரை ஏற்ற வேண்டியவர், ஐந்து பயணியரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

சானிட்டோரியத்தில் இரு ஆண் பயணிகளும் இறங்கிவிட மூன்று பெண் பயணியரோடு, ஆட்டோ குரோம்பேட்டை வழியாக ஈச்சங்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வழியில், குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே வந்தபோது, 'ஈச்சங்காடு... ஈச்சங்காடு...' எனக் குரல் கொடுத்தார்.

பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பயணியருள், நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் அடிக்கிற வெயிலில் காலில் செருப்புக் கூட இல்லாமல், வேகமாக வந்து இவர் ஆட்டோவில் ஏறி அமர்ந்தார். கணேசன் வண்டியை எடுத்தவாறே, தனது ஆட்டோவின் கண்ணாடியில் பின்னாகப் பார்த்தபோது, அந்தப் பெண் மெல்ல மயங்கி சரிவதைக் கண்டார். உடனடியாக ஆட்டோவை ஓரமாக நிறுத்தினார். கணேசனும், மற்ற பயணிகளும் பதற்றம் அடைந்தனர்.

'அம்மா... அம்மா...' என்று கூப்பிட்டுப் பார்த்தார் கணேசன்.

அந்தப் பெண் கண்களைத் திறக்கவில்லை. கணேசன், மற்ற பயணிகளின் உதவியுடன் அந்தப் பெண்ணுக்கு முதலுதவி செய்யத் தொடங்கினார். பயணிகளில் ஒருவர் தனது தண்ணீர் பாட்டிலைத் திறந்து அந்தப் பெண்ணின் முகத்தில் தெளித்தார். மற்றொரு பயணி தனது கைப் பையிலிருந்து ஒரு சிறிய கைக்குட்டையை எடுத்து, அதை நனைத்து அந்தப் பெண்ணின் நெற்றியில் வைத்தார். கணேசன் தனது ஆட்டோவை விட்டிறங்கி ஓடிச் சென்று, அருகிலிருந்த கடையில் குளிர்பானம் வாங்கி வந்தார். மற்றொரு பயணி அதனை வாங்கி அந்தப் பெண்மணியின் வாய் அருகே கொண்டு சென்றார்.

'அம்மா, கொஞ்சம் இதைக் குடிங்க... வெயில் அதிகம். களைப்பு போலிருக்கு' என்றார் பரிவுடன். இந்தச் சிறிய உதவிகள், அந்தப் பெண்மணியின் உடலில் மெல்ல அசைவைக் கொண்டு வந்தன. சில நிமிடங்களில், அந்தப் பெண் மெதுவாகக் கண்களைத் திறந்தார்.

'ஐயோ, என்னாச்சு எனக்கு?' என்று கேட்டார் தடுமாற்றத்துடன்.

'மயங்கிட்டீங்கம்மா... இப்ப பரவாயில்லையா?' என்றார் கணேசன்.

'கொஞ்சம் மயக்கமா இருக்கு. ரொம்ப நேரமா சாப்பிடலை' என்றார் அந்தப் பெண்மணி.

கணேசன் தனது சவாரியைப் பற்றியோ, நேரத்தைப் பற்றியோ ஒரு துளிகூடக் கவலைப்படாமல், அந்தப் பெண்மணி முழுமையாகத் தேறும் வரை அங்கேயே காத்திருந்தார். மற்ற பயணிகளும், கணேசனின் மனிதாபிமானத்தைப் புரிந்துகொண்டு பொறுமையாக இருந்தனர்.

'நீங்க எங்க போகணும்?' என்று கணேசன் கேட்க, 'தெரியல எங்கேயாவது போய் விடுங்க!' என்றார் அந்தப் பெண்மணி.

'இதென்ன சோதனை, ஈச்சங்காடு என்று கூப்பிட்டது தப்பா போச்சோ?' என்று அலுத்துக் கொண்டாலும், 'உங்க புருஷன் நம்பர் அல்லது பிள்ளை நம்பர் சொல்லுங்க. இல்ல வீட்டில உள்ள யார் நம்பராவது சொல்லுங்க. போன் பண்ணி வரச்சொல்லலாம்...' எனக் கேட்டார் கணேசன், அந்தம்மா ஆங்கிலத்தில் பத்து நம்பரைத் தெளிவாகச் சொல்ல, 'இது யாரு நம்பருமா?' என்று கேட்டார் கணேசன்.

'வருண் அப்பா, வருண் அப்பா நம்பர்' என்றார் பெண்மணி. உடனே கணேசன் 'வருண் யாரு? உங்க பையனா?' என்றவாறே அந்த எண்ணை அழைத்திருக்க, 'எங்கேஜ்டு' என்று வருத்தத்துடன் கூறினார். இதனால் சோர்ந்து போன பயணியர் நேரம் ஆவதாக முணுமுணுக்க ஆரம்பித்தனர்.

உடனே கணேசன், 'அம்மா, இவங்க எல்லாம் வேலைக்குப் போறவங்க, நேரம் ஆகுது. இவங்களைக் கொண்டு விடணும். நீங்க இங்க இருக்கிற மரத்தடி நிழலில் உட்காருங்க. நீங்க சொன்ன நம்பரில் இருந்து யாரும் திரும்பப் பேசினால், நீங்க இங்க இருப்பதாய்ச் சொல்லி அவங்கள வரச்சொல்லலாம்' என்றார்.

அரைமனதாகச் சம்மதித்து, ஆட்டோவை விட்டு இறங்க எத்தனித்தார் அந்தப் பெண்மணி.

சட்டென ஒரு பயணி, 'அண்ணாச்சி, இவங்க பேசுறது சரியில்லை. இங்கே விட்டுவிட்டுப் போனா, மறுபடியும் எங்கேயாவது போய்டுவாங்க. இங்கே பக்கத்துல இருக்கிற காவல் நிலையத்துல ஒப்படைச்சிடலாமா?' என்று ஆலோசனை கூறினார். கணேசன் சம்மதித்தார்.

அருகில் இருந்த காவல் நிலையம் அருகில் சென்று ஆட்டோவை நிறுத்தினார். ஆனால், அது ஒரு போக்குவரத்துக் காவல் நிலையம். அங்கு பணியில் இருந்த ஒரு பெண் காவலரிடம், கணேசன் விவரத்தைச் சொன்னதும், 'ஐயா, இது எங்க ஸ்டேஷன்ல வராது. இந்த மாதிரி நிலைமையில இருக்கறவங்களுக்கு, 108 ஆம்புலன்úஸா, இல்ல 100-க்கோ போன் பண்ணுங்க. அவங்கதான் சரியாக உதவி பண்ணுவாங்க.' என்று அறிவுறுத்தினார்.

கணேசன் போனை எடுத்து, 108-க்கு டயல் செய்தார். தொடர்பில் வந்தவரிடம் விவரம் கூற, சில நிமிடங்களில், ஒரு ஆம்புலன்ஸ் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தது. ஆம்புலன்ஸில் வந்த மருத்துவப் பணியாளர்கள், அந்தப் பெண்மணியைப் பரிசோதித்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சில நிமிடங்களில், அந்தப் பெண்மணி கூறி, டயல் செய்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. தொலைபேசியின் மறுமுனையில் இருக்கும் நபரிடம் நடந்த விவரங்களைக் கூறி, தற்போது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருப்பதைக் கூற, 'நானும் என் மகனும் உடனடியாகப் போறோம்' என்று பதில் வந்தது அவரிடம் இருந்து.

அந்தப் பெண்ணுக்கு உதவ முடிந்த மனநிறைவு கணேசனுக்கு இருந்தாலும், தனது அன்றைய வேலைப்பளுவில் இது ஒரு எதிர்பாராதத் திருப்பமாகத்தான் அமைந்தது.

அடுத்த நொடி மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார். ஈச்சங்காடு சிக்னலில் பயணிகளை இறக்கிவிட்டு, மீண்டும் சவாரி தேடியவாறு ஆட்டோவை ஓட்டினார். யாரும் ஏறின பாடில்லை. 'இன்று வெள்ளிக்கிழமை. பல்லாவரம் சந்தைக்குச் சென்றால், பெரிய சவாரி அமையும்' என்று எண்ணிய கணேசன், ஆட்டோவைச் சந்தைக்கு அழுத்தினார். அப்போது இரண்டு பெண்மணிகள் அதிகப் பொருள்களுடன் அவர் ஆட்டோவைக் கைகாட்டி தாம்பரம் அருகில் உள்ள முகவரியைக் கூறினர்.

'ஏறுங்க' என்றார் கணேசன். ஏறும்போதே ஒரு பெண், 'அண்ணா, எவ்வளவு?' என்று கேட்டார். கணேசனும் நியாயமான கட்டணத்தைச் சொன்னார்.

அதைக்கேட்டு மற்றொரு பெண்மணி, 'என்னண்ணா, ஓலா, ஊபர்ல எல்லாம் இதைவிட குறைவா வருமே? நீங்க ஏன் இவ்ளோ அதிகமா கேட்கிறீங்க?' என்று பேரம் பேச ஆரம்பித்தார்.

கணேசன் அமைதியாக, 'அம்மா, ஓலா, ஊபர்ல எல்லாம் எங்க மாதிரி ஆட்டோ டிரைவர்கள்தான் வண்டி ஓட்டுறோம். ஆனா, அவங்களுக்குக் கமிஷன் போகத்தான் எங்களுக்கு மிச்சம் கிடைக்கும். அதெல்லாம் போக எங்களுக்கு ஒண்ணும் மிஞ்சாது. அதனால்தான் அதை விட்டுட்டு, தனி சவாரிக்கு வந்துட்டேன். நீங்க சொல்ற மாதிரி குறைவா வந்தா, பெட்ரோல், கேஸ் விக்கிற விலையில நாங்க எப்படி குடும்பத்தை நடத்துறது?' என்று விளக்கினார்.

அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிவிட்டு, 'சரிண்ணா, நீங்க ஒரு ரேட் சொல்லுங்க, அப்புறம் பார்த்துக்கலாம்' என்று கூறினர்.

கணேசன், 'வேண்டாம்மா, ஓலா, ஊபர்ல பாருங்க, குறைவா வந்தா அதில் போங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது' என்று சொன்னார்.

'இல்லைங்கண்ணா, நீங்க சொன்ன கட்டணமே பரவாயில்லை. நாங்க வர்றோம்' என்று ஒருமித்தக் குரலில் கூறினர். கணேசனும் சந்தோஷமாக ஆட்டோவை ஸ்டார்ட் செய்து தாம்பரம் நோக்கிப் பயணத்தைத் தொடங்கினார். கணேசனின் முகம் பிரகாசமானது.

'மகளுக்குப் பிறந்தநாள் பரிசாகப் புதிய உடை வாங்கிவிடலாம்' என்று மனதுக்குள் கணக்குப் போட்டார்.

பல்லாவரம் சந்தையின் பரபரப்பான தெருக்களில் இருந்து, மெல்ல ஆட்டோவை நகர்த்தி, தாம்பரம் செல்லும் பிரதான சாலைக்கு வந்து சேர்ந்தார் கணேசன். நிதானமாகப் பயணிக்கத் தொடங்கி, மளிகைபோன்ற அந்த மாலை கடந்த சில நிமிடங்களில், 'ஸ்ஸ்ஸ்ஸ்' என்ற சத்தத்துடன் வண்டி ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டுபோய் நின்றது. கணேசன் வண்டியை நிறுத்திவிட்டு, இறங்கி பின்னால் சென்றபோது, ஆட்டோவின் பின் டயர் பஞ்சர் ஆகியிருந்தது.

'என்ன ஆச்சு?' என்று கேட்டார் ஒரு பெண்மணி.

'பஞ்சர் ஆயிருச்சுமா!' என்று பதிலளித்தார் சுரத்தின்றி கணேசன்.

'என்னையா வண்டி வச்சிருக்க? குறைச்சு வர முடியுமான்று கேட்டப்ப, வாய்க்கிழிய பேசின. இப்போ என்ன ஆச்சு பார்த்தில?' என்று பெரும் கூக்குரலிட்டனர் மாறி மாறி இருவரும்.

'அம்மா கொஞ்சம் பொறுமையாக இருங்கம்மா! என்கிட்ட ஸ்டெப்பினி இருக்கு. பத்து நிமிஷத்தில மாற்றிப் போட்டுக் கிளம்பிடலாம்' என்றார் பணிவாக.

அந்தப் பெண்மணிகளோ, 'இந்த வண்டிக்காகக் பத்து நிமிஷமா காத்திருப்பார்களாம். நாங்க வேற ஆட்டோ பாத்துக்கிறோம்' என்று கூறிவிட்டு அதுவரை பயணித்ததற்கும் பணம் தராமல், இறங்கி வேறு ஆட்டோவை நிறுத்தி ஏறினர்.

தன் நிலையை நினைத்து, மெளனமாகிப் போன கணேசன் ஓரமாகத் தனது ஆட்டோவை நிறுத்தினார். சற்று நேரத்தில் டயரை மாற்றி, வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு ஏதாவது தாகத்துக்குக் குடித்து விட்டுவரலாம் என அருகில் இருந்த கடைக்குள் நுழைந்தார்.

அந்த நேரத்தில், பைக்கில் வந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் அவரது ஆட்டோ அருகில் வந்து, 'யாரு வண்டியா இது? நோ பார்க்கிங் ஏரியான்னு, தெரியாதா? ஸ்டேஷன் வந்து ஃபைனைக் கட்டிவிட்டுச் சாவியை வாங்கிட்டுப் போகட்டும்' என்று கூறியவாறு, கணேசன் வண்டியிலேயே மறந்து வைத்திருந்த சாவியை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டார்.

சத்தம் கேட்டு, கடையிலிருந்து கணேசன் வெளியில் வர, நடந்தவற்றை அருகில் நின்றவர் விவரிக்க, 'ஆண்டவா, இது என்ன புதுசோதனை?' என்றவாறு காலையில் மயங்கிய பெண்ணுக்காகச் சென்றிருந்த அதே காவல் நிலையத்துக்கு ஓடினார்.

ஆட்டோ சாவியை வைத்துக் கொண்டு வாசலிலேயே நின்ற அந்தக் காவலரைப் பார்த்ததும், 'இன்னைக்கு அந்த அளவுக்குச் சவாரி கிடைக்கவில்லை. கிடைச்ச சவாரியும் வண்டி பஞ்சர் ஆனதால பாதியிலே இறங்கிட்டாங்க. பசியில இருந்தேன். தெரியாம நிறுத்திட்டேன்' என்று தன் நிலையை விளக்கிக் கொண்டிருந்தார்.

இவரது சத்தம் கேட்டு உள்ளிருந்த வெளியே வந்த பெண் காவலர், காலையில் நடந்துகொண்ட இவரது மனிதாபிமான செயலை அந்தக் காவலரிடம் விவரிக்க, 'அதுசரிதான். ஆனால் சட்டத்தை மதிச்சு நடக்கணும். விதிமுறைகளை மீறினதற்காக ஃபைன் போட்டுவிட்டேன். அதை மாற்ற முடியாது. ஃபைன் கட்டித்தான் ஆகணும்' என்று கூறி, ஃபைன் ரசீதைக் கையில் கொடுத்துவிட்டார்.

இருந்த கொஞ்சப் பணத்தையும் ஃபைனுக்காகக் கட்டிவிட்டு, 'கிடைத்த வருமானமும் போய்விட்டது. மகளிடம் என்ன சொல்வது?' என மனம் முழுக்க பாரத்துடன், தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

உரிய நேரத்தில் பள்ளி சவாரியை ஏற்றி, வீடுகளில் இறக்கி விட்டுவிட்டு, ஆட்டோவைத் தன் வீட்டு வாசலில் நிறுத்திய கணேசன், தயக்கத்துடன் வீட்டுக்குள் நுழைந்தார். மகள் புதிய உடைக்காகக் காத்திருப்பது அவர் மனக் கண்ணில் தெரிந்தது. வெறுங்கையுடன் உள்நுழைந்த அவரை மனைவி, 'என்னங்க, மகளுக்குப் பிறந்தநாள் டிரெஸ் எடுத்து வரலையா?' என்று ஏமாற்றத்துடன் கேட்டாள். கணேசனோ, 'இல்லம்மா, காலையிலிருந்து சவாரிகள் சரியா அமையல. கிடைத்த பணமும், அபராதத்தில போய்விட்டது' என்று வருத்தத்துடன் நடந்தவற்றைக் கூறினார்.

அவர் மனைவி ஆறுதலாக, 'பரவாயில்லைங்க! நீங்க ஏன் உங்க நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ கொஞ்சம் பண உதவி கேட்கக் கூடாதா?' என்று கேட்டாள். கணேசனின் முகம் சுருங்கியது.

'இல்லைம்மா, இதுவரைக்கும் நான் யாரிடமும் பணம் கேட்டு நின்னதில்லை!' என்று வருத்தப்பட்டார்.

அந்த நேரத்தில் போன் ஒலித்தது. கணேசன் போனை எடுத்து, 'நான் கணேசன் பேசுறேன்' என்று பணிவுடன் பேசினார்.

மறுமுனையில் காலையில் உதவி செய்த பெண்மணியின் கணவரின் குரலாக அது இருந்தது.

அதில் பேசியவர், 'ஐயா, இப்போ என் மனைவி நல்லா இருக்கா. ஒரு சின்ன மன வருத்தத்தில காலையிலேயே வீட்டைவிட்டு வெளியே வந்துட்டார்! அவளைத் தேடி உறவினர்களுக்கு போனில் விசாரித்துக் கொண்டிருந்ததாலேயே முதலில் போனை அட்டன்ட் பண்ண முடியல. நீங்கள் அவருக்குச் செய்த உதவிக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. நீங்கள் எங்கிருக்கீங்க என்று சொல்லுங்க? நாங்கள் வந்து உங்களைக் கண்டிப்பாகச் சந்திக்கிறோம்!' என்று கூறினார்.

கணேசன், 'அதெல்லாம் வேண்டாம் ஐயா! ஒரு மனுஷனா என் கடமையைச் செஞ்சேன். அவ்வளவுதான்' என்றார்.

'இல்லை, நீங்கள் என் மனைவியைக் காப்பாற்றியிருக்கிறீர்கள். உங்களுக்கு நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும்' என்று கூறி போனை வைத்தார்.

அடுத்த நிமிடமே ஒரு தொகை ஜீபே மூலம் அவருடைய அக்கவுண்டுக்கு வந்து சேர்ந்தது. அது கணேசன் தன் மகளுக்கு உடை வாங்குவதற்குத் தேவையான தொகையாகவே இருந்தது. கணேசனின் உழைப்புக்கு மட்டுமல்லாமல் அவரது மனிதநேயத்துக்கும் கிடைத்த அங்கீகாரமாக அது அவருக்குத் தோன்றினாலும், தனது தேவைக்கு அந்தப் பணத்தை எடுக்கலாமா? என்ற எண்ணம் அவர் முன் கேள்வியாக எழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com