சிரி... சிரி...

'சார்... என் பக்கத்து வீட்டுக்காரியைக் காணலை...' 'அதுக்கு நீங்க வந்து ஏன் புகார் கொடுக்கறீங்க?'
சிரி... சிரி...
Published on
Updated on
1 min read

'எங்க வீட்டைப் பற்றி நல்லா தெரிஞ்சவங்கள்தான் திருடியிருப்பாங்கன்னு தோணுது சார்...'

'எப்படிச் சொல்றீங்க?'

'பீரோவையெல்லாம் திறக்காமல், துவரம் பருப்பு டப்பாவுல வச்சிருந்த நகைகளை மட்டும் எடுத்திட்டுப் போயிருக்காங்களே!'



'எந்த ஏரியாவில் பிக் பாக்கெட் நடந்தது?'

'ஷர்ட் பாக்கெட்டில்தான், சார்!'



'பட்டப் பகலில் உங்க பேங்கில் புகுந்து நகைகளைத் திருடிட்டுட்டுப் போயிருக்காங்களே?'

'என்ன பண்றது... பெரிய தொழிலதிபர்

களுக்கு லோன் கொடுத்ததா நினைக்க வேண்டியதுதான்!'



'பீரோ சாவி கேட்டு உன் மனைவியைத் திருடன் மிரட்டினப்போ நீ எதுவும் சொல்லவில்லையா?'

'ஏன் சொல்லலை... 'சாவியை கொடுத்துடும்மா'ன்னு சொன்னேனே!'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

'சார்... என் பக்கத்து வீட்டுக்காரியைக் காணலை...'

'அதுக்கு நீங்க வந்து ஏன் புகார் கொடுக்கறீங்க?'

'சார்... அவங்க என்னோட தங்க நகையை வாங்கிப் போட்டுக்கிட்டுப் போயிட்டாங்க!'

-தீபிகா சாரதி, சென்னை.



'ஒரே நாளில் இப்படி பல வீடுகளில் திருடறீயே... எப்படி முடியுது கபாலி?'

'ஒரு நாளைக்கு இரண்டு ஷிப்ட் வேலை பார்க்கிறேன்... சார்!'

-எம்.பி.தினேஷ், கோவை-25.

'பைக் திருடு போனதுக்கு ஒரு மாசம் கழிச்சு புகார் தர்றீங்களே... இதுவரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தீங்க ?'

'பக்கத்து ஏரியாவுல ஒரு பைக்கை திருடி ஓட்டிக்கிட்டிருந்தேன்... சார்!'



'பூட்டை உடைக்காமல் அந்த வீட்டில் எப்படித் திருடினே?'

'பூட்டிட்டதா நினைச்சு அந்த வீட்டுக்காரங்க பூட்டுப் போடாமலேயே ஊருக்குப் போயிருக்காங்க , சார்!'

-பர்வீன் யூனுஸ், சென்னை.

'சார்... பக்கத்து வீட்டுக்காரன் என்னைத் தினமும் திட்டுறான்...'

'பதிலுக்கு நீயும் திட்ட வேண்டியதுதானே... இதுக்கெல்லாம் புகார் தர்ற வந்துட்டியா?'

'இல்லை சார்... அவன் கையில் தடியோட நின்று திட்டுறானே!'

-பர்வதவர்த்தினி, பம்மல்.



'பக்கத்து வீட்டிலே நேத்துதான் புதுசா வைர நெக்லஸ் வாங்கி வந்திருக்காங்க!'

'உங்க வீட்டில் திருடிட்டு அங்கேதான் போகப் போறேன்மா...'

'அப்படியா... இந்தா பீரோ சாவி... எங்க வீட்டில் திருடிட்டு அங்கே சீக்கிரமா போ!'



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com