ஓட்டம், நீளம் தாண்டுதல், கல்வி ஆகிய மூன்றிலும் ஜொலிக்கிறார் செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி கா.ஹாஷினி.
அவரிடம் பேசியபோது:
'திருச்சி உறையூர் எனக்கு சொந்த ஊர். தற்போது கிராப்பட்டி பகுதியில் வசிக்கிறோம். எனது அப்பா கார்த்திக் தனியார் நிறுவனத்திலும், அம்மா இந்துமதி தனியார் பள்ளியிலும் பணிபுரிகின்றனர். அண்ணன் தன்வீன் தேவேஷ், பத்தாம் வகுப்பு படிக்கிறார். நான் அந்தப் பகுதியில் உள்ள செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறேன். படிப்பில் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்களைப் பெற்றுவருகிறேன்.
கரோனா காலத்தின்போது, இணைய முறையில் கல்வி பயின்றாலும் கலை சார்ந்த பயணத்தைத் தொடங்குமாறு என் அம்மா அறிவுறுத்தியதால் பரத நாட்டியம் கற்றேன்.
சில மாதங்களிலேயே சலங்கை பூஜையும் முடித்தேன்.
தொலைக்காட்சியில் ஓட்டப்பந்தயத்தைப் பார்த்தபோது, எனக்குள் ஆர்வம் பிறந்தது. அப்பாவிடம் தெரிவித்தேன். அவரும் தனியார் பயிற்சிக் கூடத்தில் என்னைச் சேர்த்தார். அங்கே ஓட்டம், நீளம் தாண்டுதலைப் பிடிப்புடனும், துடிப்புடனும் கற்றேன். எனது முன்னேற்றத்தைக் கண்ட பயிற்சியாளர்கள் என்னை மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளுக்கும் அனுப்பி வைத்தனர்.
நீளம் தாண்டுதல் பயணமானது தொடக்கம் 3.80 மீட்டராகவும், அதிகபட்சமாக 4.40 மீட்டராகவும் இருந்தது. 5 மீட்டரை குறிக்கோளாகக் கொண்டு பயிற்சி செய்து வருகிறேன்.
தற்போது பள்ளிகள், மாவட்ட, மாநில அளவிலும், பல்வேறு அமைப்புகள் நடத்திய போட்டிகள் என நாற்பதுக்கும் மேற்பட்ட சான்றிதழ்களும், பதக்கங்களும் பெற்றுள்ளேன்' என்கிறார் ஹாஷினி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.