'குளு குளு' சிமென்ட்...

இனி ஏ.சி.யே தேவையில்லை. குளுமை தரும் சிமென்ட் வந்துவிட்டது.
'குளு குளு' சிமென்ட்...
Published on
Updated on
1 min read

இனி ஏ.சி.யே தேவையில்லை. குளுமை தரும் சிமென்ட் வந்துவிட்டது.

சிமென்ட் கட்டடங்கள் சூரிய ஒளியில் இருக்கும் அகச்சிவப்பு கதிர்வீச்சை உறிஞ்சி வெப்பமாகச் சேமித்து உள்ளும் புறமும் உமிழுகிறது. அதனால் அறை சூடாகி அறைக்கு உள்ளிலும் வெளியிலும் வெப்பமான சூழலை உருவாக்குகிறது.

எங்கு பார்த்தாலும் காங்கிரீட் அடுக்கு மாடி கட்டடங்கள் பெருகி விட்டதினால், நகர்ப்பகுதிகளில் பொதுவாகவே வெப்பம் அதிகமாக இருக்கும். இன்றைய சந்தையில் விற்கப்படும் சிமென்ட் வெப்பத்தை உள்ளுக்குள் வாங்கும். கடத்தும். வெளியே பிரதிபலிக்காது.

இந்த நிலையில், கட்டடங்களைக் குளிர்விக்கக் கூடிய புது ரக சிமென்ட்டை சீனாவின் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.

இதனால் வெப்பநிலையையும் அதிகரிக்கும்.

'எட்ரிங்கைட்' எனப்படும் ஒரு கனிமத்தை சிமென்ட்டில் கலந்தால், அத்தகைய சிமென்ட்டின் மேற்பரப்பு சூரிய ஒளியைப் பெறும்போது, அகச்சிவப்பு ஒளியை சேமிப்பதற்குப் பதிலாக வெப்பத்தை வெளியேற்றும். இதனால் சிமென்ட்டின் மேற்புறம் வெப்பத்தை விரைவாக இழக்கிறது.

சூரிய ஒளியை பிரதிபலித்து வானத்துக்கு வெப்பத்தை அனுப்பும். இதன் காரணமாக, கட்டடம் எந்த ஏர் கண்டிஷனிங் அல்லது மின்சாரம் இல்லாமல் குளிர்ச்சியாக இருக்க முடியும் என்று சீன விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

புதிய ரக சிமென்ட் உற்பத்திச் செலவும் குறைவுதான். புது சிமென்ட் உறுதியிலும் அதிக சக்தி வாய்ந்தது. விரைவில் நீர்த்துப் போய் வலிமை, உறுதியை இழக்காது. உறைபனி, அரிப்புத் தன்மையை எதிர்கொள்ளும். கார்பன் உமிழ்வை கணிசமாகக் குறைக்கும். அத்தனைக்கும் மேல் ஏ.சி.பயன்பாடு குறையும் என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com