அதிசயமே அசந்து போகும்...

உலகில் பல்வேறு நிகழ்வுகள், சம்பவங்கள் கேள்விப்படவே ஆச்சரியப்பட வைக்கும். பல அதிசயமாகவும் இருக்கும்.
அதிசயமே அசந்து போகும்...
Published on
Updated on
1 min read

உலகில் பல்வேறு நிகழ்வுகள், சம்பவங்கள் கேள்விப்படவே ஆச்சரியப்பட வைக்கும். பல அதிசயமாகவும் இருக்கும்.

அப்படி சில நிகழ்வுகள்:

நார்வே தீவுக் கூட்டமான ஸ்வால்பார்டில் உள்ள 'லாங்கியர்பைன்', உலகின் மிகவும் குளிரான இடங்களில் ஒன்றாகும். இங்கு அதிகபட்ச குளிர் மைனஸ் 46.3 டிகிரி செல்சியஸ் ஆகும். இங்குள்ள குளிர், உறைபனி, குளிரான வானிலை போன்றவை உடல்கள் சிதைவதைத் தடுக்கிறது.

'இந்த நகர எல்லைக்குள் இறப்பது சட்ட விரோதம்' என 1950-ஆம் ஆண்டில் நார்வே அரசு சட்டம் இயற்றி, இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. இதனால் இறக்கும் தருவாயில் உள்ள மக்கள் சில ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள நிலப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

டென்மார்க் அரசின் பட்டியலில், 15 ஆயிரம் பெயர்கள் இருக்கின்றன. அந்தப் பெயர்களில் ஒன்றை மட்டும்தான் குழந்தைகளுக்கு சூட்ட முடியும்.

ஜெர்மனியில் குழந்தைகளுக்கு வைக்கப் போகும் பெயரை முன்னதாகவே உள்ளாட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து அனுமதி வாங்க வேண்டும்.

தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் ஆகியவற்றில்தான் நெல்லிக்காய் அதிகமாக விளைகின்றன. பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த இந்த நெல்லிக்காயில் நட்சத்திர நெல்லிக்காய் என்றொரு வகை உண்டு. பார்ப்பதற்கு நட்சத்திரம் போன்ற தோற்றம் கொண்டிருப்பதால் இந்தப் பெயர். இது 'அரை நெல்லிக்காய்' என்று அழைக்கப்படுகிறது.

உலகிலேயே இரு கைகளுடன் காணப்படும் விநாயகர் சிலைகள் இரண்டு மட்டுமே. ஒன்று பிள்ளையார்பட்டியிலும், மற்றொன்று ஆப்கானிஸ்தானிலும் உள்ளவை ஆகும்.

உலகிலேயே முதல் முதலாக ஒரு ரோபோவுக்கு குடியுரிமையை சவூதி அரேபியா அரசு வழங்கியது. அந்த ரோபோவின் பெயர் 'சோபியா'.

அரேபியக் கடலில் உள்ள லட்சத்தீவுகளில் உள்ள எவரும் திரைப்படங்களைப் பார்ப்பது கிடையாது. காரணம் அங்கு திரையரங்குகள் கிடையாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com