அந்த ஆறு ஆண்டுகள்!

உலக நாடுகளால் 'பெரியண்ணன்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நாட்டின் ரகசியம் ஒன்று இருக்கிறது.
அந்த ஆறு ஆண்டுகள்!
Published on
Updated on
1 min read

உலக நாடுகளால் 'பெரியண்ணன்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நாட்டின் ரகசியம் ஒன்று இருக்கிறது. 1783-இல் அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது. ஆனால், ஜார்ஜ் வாஷிங்டன் 1789 ஏப்ரல் 30-இல்தான் அதிபராகப் பதவியேற்றார். இடைப்பட்ட ஆறு ஆண்டுகள் குறித்து சரித்திர ஆவணங்களிலோ, வெள்ளை மாளிகையிலோ, மற்ற எதிலும் இடம்பெறவில்லை. நடந்தது என்ன?

சுதந்திரம் அடைந்தவுடன் அதிபராக பதவியேற்க மனம் இல்லாத ஜார்ஜ் வாஷிங்டன், தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். அதனால் அமெரிக்க காங்கிரஸ் கூடி விவாதித்து, சுதந்திரத்துக்காகப் போராடிய ஜான் ஹான்ஸன் என்பவரை அதிபராகத் தேர்வு செய்தது.

இவருக்கு சட்ட அறிவு, நிர்வாகத் திறன் இல்லாததால் நிதித் தட்டுப்பாடு பெருமளவில் ஏற்பட்டு, உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டது. ராணுவ வீரர்களுக்கே ஊதியம் அளிக்க முடியாத மோசமான நிலையும் ஏற்பட்டதால், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனால் இலியாஸ் பவுடினாட், தாமஸ் மிஃப்லின், ரிச்சர்ட் ஹென்றி, நாதன்கோர்மென், ஆர்தர் க்ளேர், க்ரிஃபின் என ஆண்டுக்கு ஒருவர் அடுத்தடுத்து அதிபர்களாயினர். ஆனால், இவர்களாலும் அமெரிக்காவின் பொருளாதாரத்தைச் சீராக்க முடியவில்லை.

நிலைமை மோசமாகியதால், அமெரிக்க காங்கிரஸ் கூடி விவாதித்தது. ஜார்ஜ் வாஷிங்டனை அதிபராக்கியது. அதுதான் அமெரிக்க வரலாற்றின் தொடக்கமாகக் கணக்கிடப்பட்டது. அவரது சீரிய நிர்வாகத்தால் பொருளாதார நிலைமையும் கட்டுக்குள் வந்தது.

அந்த ஆறு ஆண்டுகள் நாட்டு நடப்புகள் கரும்புள்ளியாக இருந்ததால், சரித்திரத்தில் இருந்து அழிக்கப்பட்டது. இதை அவர்கள் யாரும் பேசுவதில்லை. அப்படிப் பேசினாலும் அதை உறுதி செய்ய ஆதாரம் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com