10 பெண்கள்... 9 மாதக் கடல் பயணம்..!

இந்திய முப்படைகளைச் சேர்ந்த 10 பெண் அதிகாரிகள் உலகம் முழுவதும் சுற்றி வரும் நோக்கில் பாய்மரப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
10  பெண்கள்...  9  மாதக் கடல் பயணம்..!
Published on
Updated on
2 min read

இந்திய முப்படைகளைச் சேர்ந்த 10 பெண் அதிகாரிகள் உலகம் முழுவதும் சுற்றி வரும் நோக்கில் பாய்மரப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பயணம் செப்டம்பர் 11 அன்று மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா'விலிருந்து தொடங்கியது.

இந்தியப் படைகளின் மூன்று (கடல், விமானம், ராணுவம்) பிரிவுகளின் ஒற்றுமை, ஒருங்கிணைப்பை இந்தக் கடல் பயணம் அடையாளப்படுத்துகிறது. அடுத்த 9 மாதங்களில் சுமார் 26,000 கடல் மைல்கள் இந்திய ராணுவ பாய்மரக் கப்பலான திரிவேணி'யில் 10 பெண் அதிகாரிகள் பயணம் செய்கின்றனர்.

கங்கை, யமுனை, சரஸ்வதி என்னும் மூன்று நதிகளின் புனித திரிவேணி சங்கமத்தின் நினைவாகப் பெயரிடப்பட்ட ஐஏஎஸ்வி திரிவேணி' பாய்மரப் படகில் இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள், கடற்

படையைச் சேர்ந்த ஒருவர், விமானப்படையைச் சேர்ந்த நான்கு பெண் அதிகாரிகள் உள்ளனர். முதல் முறையாக முப்படையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் ஒன்றாக இணைந்து கடல் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த 10 பேர்கள் அடங்கிய குழு, கடல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற பல்வேறு துறைகளில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டது. இதில் சீஷெல்ஸ் தீவிற்கு சென்று வந்த

ஆயத்தப் பயணமும் அடங்கும். படகைச் செலுத்துதல், தகவல் தொடர்பு முதல் ஸ்கூபா டைவிங் வரையான விஷயங்கள், அடிப்படை மருத்துவ பராமரிப்பு, முதலுதவி வழங்குவதில் போதிய பயிற்சி எனப் பல அவர்களுக்குத் தரப்பட்டுள்ளது.

பூமத்திய ரேகையை இரண்டு முறை கடப்பதும், மூன்று பெரிய முனைகள்' கேப் லீவின் (ஆஸ்திரேலியா), கேப் ஹார்ன் (தென் அமெரிக்கா) மற்றும் கேப் ஆஃப் குட் ஹோப் (தென்னாப்பிரிக்கா) ஆகியவற்றைக் கடப்பதும் இந்த கடல்வழிப் பயணத்தின் முக்கிய அம்சங்களாகும். மே 2026 க்குள் திரிவேணி' படகு மும்பை வந்து சேரும். பயணத்தின் இடையே, நான்கு சர்வதேச துறைமுகங்களில் படகு தங்கும்.

50 அடி நீளமுள்ள ஐஏஎஸ் திரிவேணி' புதுச்சேரியில் கட்டப்பட்டது. படகை வழிநடத்த அதிநவீனக் கருவிகள் படகில் பொருத்தப்பட்டுள்ளன. துரித தகவல் தொடர்புக் கருவிகளும் படகில் உள்ளன. இந்தப் படகு சோதனை கடல் பயணங்களுக்காக 10,000 கடல் மைல்கள் பயணித்து, உலகளாவிய பயணத்திற்கு ஏற்றதாக தர நிர்ணயத் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளது.

வீரம், வல்லமை, சாகசத்தையும் தாண்டி, இந்தக் கடல் பயணம் இந்தியாவின் விரிவடைந்து வரும் கடல்சார் திறன்களையும், பெண்கள் எந்தத் துறையிலும் சாதிப்பார்கள்' என்ற நம்பிக்கையையும் நிரூபிக்கும். சர்வதேச அரங்கில் இந்தியப் பெண்களின் துணிவு, பாரம்பரியம், புதுமை, மீள்தன்மை போன்ற பன்முகத் திறமைகளை நிரூபிக்கும் கடல் பயணமாக இந்தப் பயணம் அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com