கோலிவுட் ஸ்டூடியோ!

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகள் திரைப் பயண நிறைவைக் கொண்டாடும் விதமாக, தமிழ்நாடு அரசு விழா ஒன்றை நடத்தியது.
கோலிவுட் ஸ்டூடியோ!
Published on
Updated on
2 min read

இளையராஜா சுயசரிதைக்கு திரைக்கதை வசனம் எழுதுவேன் ரஜினி!

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகள் திரைப் பயண நிறைவைக் கொண்டாடும் விதமாக, தமிழ்நாடு அரசு விழா ஒன்றை நடத்தியது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஜினிகாந்த், திடீர் என்று ஒரு இசையமைப்பாளர் வந்தார்.

நான் உட்பட அனைவருமே அவர் பக்கம் சாய்ந்தோம். ஆனால், இளையராஜா அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அவரது வண்டி ரெக்கார்டிங்கிற்காக சரியாக 6.30 மணிக்கு பிரசாத் ஸ்டுடியோவிற்குப் போய்விடும். நான் அதிசய மனிதர்கள் பற்றி புராணங்களிலும், இதிகாசங்களிலும் படித்திருக்கிறேன். ஆனால், கண்களால் நேரில் பார்த்த அதிசய மனிதர் இளைய

ராஜாதான். அப்போது இருந்த அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கும் இளையராஜா இசையமைத்தார். எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் இசையமைப்பேன் என்று இளையராஜா கூறுவார். ஆனால், அது உண்மை இல்லை. அவர் கமலுக்கு மட்டும் நல்ல பாடல்களைத் தருவார். இதை நான் முதல்வர் முன்னிலையில் பதிவு செய்கிறேன்.

இளையராஜா மீது விவாதம் இருக்கலாம்... வாதம் இருக்கலாம். ஆனால், தனிமனித தாக்குதல் இருக்கக்கூடாது. நீதி, நியாயம், கடின உழைப்பு இருந்தால், அனைத்துமே உங்கள் பக்கம் வந்துவிடும். அதைத்தான் இளையராஜா செய்தார். இளையராஜாவிற்கு இல்லாத திமிர் வேற யாருக்கு இருக்கும்?

இதை வேறு யாராவது ஒத்துக்கொள்வீர்களா? அவர் அதற்கு தகுதியானவர். கமல்ஹாசன் நான்கு வரிகளைப் பாடினதும், நான் இவ்வளவு பேசினதும் ஒன்று. இது தான் இசையின் பவர். இளையராஜாவின் சுயசரிதை படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். என்னை விட்டால் நானே திரைக்கதை எழுதிவிடுவேன்' என்று பேசினார்.

தனுஷ்
தனுஷ்

கருங்காலி மாலை ரகசியம் உடைத்த தனுஷ்!

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை' திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே எனப் பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு படத்தைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தனுஷ் அணிந்திருக்கும் கருங்காலி மாலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தனுஷ், நான் அணிந்திருப்பது என்ன மாலை என சத்தியமாக எனக்குத் தெரியவில்லை.

ஒரு நாள் என் பாட்டியைப் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது என் தாத்தாவின் புகைப்படத்தில் இந்த மாலை இருந்தது. அந்த மாலையைப் பற்றி நான் என் பாட்டியிடம் விசாரித்தேன். அவர் இது உங்க தாத்தா 30 வருஷம் ஜெபம் பண்ணின மாலை' எனச் சொன்னார். அதை நான் எடுத்துக் கொள்ளட்டுமா?' எனக் கேட்டதும், என் பாட்டி தாத்தா புகைப்படம் முன் சென்று, இங்க பாருங்க, இந்தப் பேரன்தான் வந்து மாலையைக் கேட்கிறான்'னு சொல்லி எனக்கு விபூதி வைத்து அந்த மாலையையும் அணிவித்தார்.

அன்று முதல் என் முன்னோர்களும், அவர்களுடைய ஆசிர்வாதமும் என்னுடன் இருப்பதாகவும் என்னைப் பாதுகாப்பதாகவும் எனக்குத் தோன்றும். பலரும் இதைப் போட்டால் அது நடக்கும், இது நடக்கும் எனச் சொல்கிறார்கள். இது என்னுடைய தாத்தாவுடையது. எனக்கு ஒன்றும் ஆகாது.' எனப் பேசினார்.

அமீர்கான்
அமீர்கான்

ரஜினி படத்தை விமர்சிக்கவில்லை அமீர்கான்!

ரஜினியுடன் அமீர்கான் நடித்த கூலி படம் சமீபத்தில் திரைக்கு வந்திருந்தது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்திருந்தன. இந்நிலையில் கூலி' திரைப்படத்தைப் பற்றி அமீர்கான் விமர்சித்துப் பேசியதாக ஒரு செய்தித்தாளில் வந்த தகவல் இணையத்தில் வைரலானது. அந்தச் செய்தித்தாளில் உள்ளடங்கியிருந்த விஷயங்கள் காட்டுத்தீயாய்ப் பரவியது.

தற்போது அப்படியொரு விஷயத்தை அமீர்கான் பேசவில்லை என்றும், சுற்றி வரும் செய்தித்தாள் செய்தி போலியானது எனவும் அமீர்கானின் தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைத்தளக் கணக்கின் மூலம் அறிவித்திருக்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமீர்கான் கூலி' திரைப்படம் குறித்து எந்தப் பேட்டியும் அளிக்கவில்லை.

சமூக வலைத்தளங்களில் அமீர்கான் கூலி' திரைப்படத்தை விமர்சித்ததாக ஒரு போலி பேட்டி பரவி வருகிறது. அமீர்கான் தான் செய்யும் அனைத்து பணிகள் மீதும் மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்திருக்கிறார். அமீர்கான் இன்னும் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கவில்லை. அமீர்கான் படத்தைப் பார்க்கும்போது தானும் உடனிருக்க வேண்டும் என லோகேஷ் கனகராஜ் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.

ஆனால் அது இதுவரை நடக்கவில்லை. கூலி' திரைப்படத்தின் அபாரமான வெற்றி, அதில் ஈடுபட்ட அனைவரின் புரிதலையும், கடின உழைப்பையும் பறைசாற்றுகிறது' எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com