சிரி... சிரி...

டாக்டர்... எனக்கு அடிக்கடி தும்மல் வருது!' உடனே ஏன் இங்கு வரலை?' இருமலும் வரட்டும்னு வெய்ட் பண்ணேன், அதான்!'
சிரி... சிரி...
Published on
Updated on
1 min read

டாக்டர்... எனக்கு அடிக்கடி தும்மல் வருது!'

உடனே ஏன் இங்கு வரலை?'

இருமலும் வரட்டும்னு வெய்ட் பண்ணேன், அதான்!'

பர்வதவர்த்தினி, பம்மல்.



உங்க வீட்டுக்காரருக்கு நிம்மதி தேவை. அதனால் இந்த மாத்திரையைச் சாப்பிட வேண்டும்!'

அவருக்கு அதை எப்போது தரணும், டாக்டர்?'

இந்த மாத்திரை அவருக்கு இல்லை... உங்களுக்குத்தான்!'

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.



டாக்டர்... ரொம்ப நாளைக்கு முன்னால் நடந்த விஷயங்கள் ஞாபகத்துக்கு வர்ற ஏதாவது மாத்திரை இருக்கா?'

நானும் எம்.பி.பி.எஸ். முடிச்சு ரொம்ப வருஷம் ஆச்சு... இருங்க யோசிச்சு எழுதித் தர்றேன்!'

எம்.சுப்பையா, கோவை.



சர்க்கரை 140 இருக்கிறது நார்மலா டாக்டர்?'

இணையத்தில் செக் பண்ணிப் பாருங்களேன்!'

-அ.ரியாஸ், சேலம்.



அவர் ஒரு போலி டாக்டர்...'

எப்படிச் சொல்றே?'

அடிக்கடி மயக்கம் வருதுன்னு சொன்னா... நடந்து வருதா? தவழ்ந்து வருதா'ன்னு கேட்கிறாரு!'



தூக்கத்துல உங்க கணவர் நடக்

கிறார். அது வியாதி. அதுக்கு நீங்க ஏன் கோபப்படுறீங்க, மேடம்?'

என்னையும் துணைக்கு வரச் சொல்லிப்படுத்தாரு, டாக்டர்!'

என்.ஷாகிதா, ஈரோடு.



அந்த பேஷண்டுக்கு பல்ஸ் பார்த்தீங்களே... எப்படி இருக்குது?'

பார்த்தேன் டாக்டர்... ஒரேயொரு சிங்கப்பல் இருக்கு!'



அந்த கண் டாக்டர் ஏன் மிருகங்கள் படத்தை சுவர்ல மாட்டி வைச்சிருக்காரு?'

படிக்கத் தெரியாத ஆளுங்க வந்தா... மிருகங்

களைக் காண்பிச்சு கண் டெஸ்ட் பண்ணுவாரு!'

தீபிகா சாரதி, சென்னை5.



உங்களுக்கு உடம்பு சரியில்லையா... என்ன ஆச்சு உங்களுக்கு?'

அதை ஏன் டாக்டர் கேக்கறீங்க?'

உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா சொல்ல வேண்டாம்... விடுங்க!'



கோபம் வந்துட்டா எனக்கு கை, காலெல்லாம் நடுங்க ஆரம்பிக்குது, சார்?'

எனக்கு அப்படியில்லை... என் பெண்டாட்டிக்கு கோபம் வந்தால்தான் எனக்கு உடம்பே நடுங்கும்!'

வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com