அற்புதங்கள் நிகழ்த்தும் ஆலமரம்...

ஆலமரத்தில் இருந்து வரும் ஆக்சிஜன் உடலை உற்சாகப்படுத்தி மனதை அமைதிப்படுத்துவதால்தான், கிராமங்களில் ஆலமரத்தின் கீழ் பஞ்சாயத்துகள் நடைபெற்றன.
ஆலமரம்
ஆலமரம்
Published on
Updated on
2 min read

ஆலமரத்தில் இருந்து வரும் ஆக்சிஜன் உடலை உற்சாகப்படுத்தி மனதை அமைதிப்படுத்துவதால்தான், கிராமங்களில் ஆலமரத்தின் கீழ் பஞ்சாயத்துகள் நடைபெற்றன.

அந்தக் காலத்தில் சரியாக படிக்காத மாணவ, மாணவியர்களை ஆலமரத்தின் அடியில் உட்கார வைத்து பாடம் கற்றுத் தருவார்கள். இதனால் அந்தக் குழந்தைகளுக்கு எதிர்மறையான எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஞாபகச் சக்தியும் அதிகப்படுத்தும். முந்தைய காலத்தில் சித்தர்

களும் ஞானிகளும் தங்களது மனநிலையை ஒருமுகப்படுத்தி நிலைநிறுத்த ஆலமரத்தின் அடியில்தான் தியானம் செய்துள்ளனர். இந்த ஆலமரம் அறிவியல் பூர்வமாகவும் பல நன்மைகளைச் செய்கிறது.

அதிக ஆண்டுகள் வளரும் ஒரே மரம் ஆலமரம். இதன் ஆயுள்காலம் 5 ஆயிரம் ஆண்டுகளாகும்.

கருமேகங்களைச் சுண்டி இழுக்கக் கூடிய மரங்களில் ஆலமரம் முதல் இடத்தில் உள்ளது. இதனால்தான் ஆலமரங்கள் அதிகமுள்ள மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் அதிகமாக மழை பொழிகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயர் ஒருவர் வரலாற்றுப் புத்தகத்தில், இந்தியாவில் ஓர் அதிசய மரம் இருப்பதாகவும், அந்த மரம் தனது வேர்களை வானத்தில் இருந்து கீழே இறக்கி தன்னைத்தானே நடவு செய்து கொள்வதாகவும் எழுதியுள்ளார்.

மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வந்தபோது, அவருடைய 7 ஆயிரம் படை வீரர்கள் ஒரே ஆலமரத்தின் கீழ் அமர்ந்து இளைப்பாறி உள்ளனர். இதை கிரேக்க நாட்டு ஆசிரியர் ஒருவர், சிறிய மீன் முட்டையைவிட சிறியதாக இருக்குமாம் ஆலமரத்தின் விதை. அந்த மிகச் சிறிய விதையிலிருந்து இவ்வளவு பெரிய ஆலமரம் உருவாகி இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த ஆலமரத்தின் கீழ் தான் மன்னர்களின் நாற்படை வீரர்களும் தங்கி ஓய்வு எடுப்பார்கள்' என்று எழுதியுள்ளார்.

போருக்குச் சென்று வந்த வீரர்கள் ஆலம் பழத்துடன் இளம் தளிர்களையும் மென்று தின்பார்கள். இதனால் உடம்பு வலியைக் குறைத்துவிடும். பிறகு வீரர்கள் நன்றாக உறங்குவார்கள்.

ஆலமரக் கட்டைகளை தண்ணீரில் போட்டால் அது நாளுக்கு நாள் ஊறி எடை கூடும்.

கேம்ப் போகும்போது டென்ட் கொட்டகை போடுவதற்கும் ஆலமரக் கட்டைகளைப் பயன்படுத்தி உள்ளனர்.

மாடுகளும், நாய்களும், குட்டி போட்ட பின் விழும் நஞ்சுகொடி விஷத்தன்மை கொண்டது. அவற்றை புதைத்தாலும் மண்ணே கெட்டுப் போய்விடும். எனவே அவற்றை வைக்கோல் சேர்த்து ஒரு துணியால் கட்டி ஆலமரக் கிளைகளில் தொங்க விடுவார்கள். இதனால் அந்த நஞ்சுக்கொடியில் உள்ள விஷம் கூடிய விரைவில் அழிந்து, துர்நாற்றம் வீசுவதும் நின்றுவிடும். இது தமிழர்களின் அரிய கண்டுபிடிப்பாகும்.

கிராமத்தில் உள்ள ஆடு, மாடுகளை வாங்க வரும் வியாபாரிகள் முதலில் ஆலமரத்துக்குச் சென்று, அங்கு எத்தனை நஞ்சுக்கொடிகள் உள்ளன என்பதை கணக்கிட்டு அதன் பிறகே ஆடுகள், மாடுகளை வாங்குவர்.

எறும்பு, தேனி , பல்லி , பாம்புகள், பறவை இனங்கள் என எல்லாமே ஒரே இடத்தில் வசித்து வரும் இடம்தான் ஆலமரம். இருப்பினும் கழுகுகளும், கோட்டான்களும் உட்காருவதற்குக் கூட ஆலமரம் இடம் கொடுப்பதில்லை.

ஆலமரத்தின் கீழ் சுமைதாங்கி கருங்கல்லை முன்னோர்கள் வைத்திருப்பார்கள். சாலைகளோ, வாகனங்களோ இல்லாத அந்தக் காலத்தில் வழிப்போக்கர்களும், வியாபாரிகளும் தங்கள் சுமைகளை இறக்கி வைத்து ஓய்வெடுப்பார்கள். அப்போது ஆலமரத்தில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சக்கூடிய சக்தி அந்த கருங்கல்லுக்கு மட்டுமே உண்டு. எனவே அந்தக் கல் அவர்களை உற்சாகப்படுத்தி களைப்பை விரட்டிவிடும்.

சிறப்புகள் கொண்ட ஆலமரத்தை இந்தியாவிலிருந்து கொண்டு சென்று அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் வளர்க்கிறார்கள்.

மரங்களுக்கு தலைவனாக இருக்கும் இந்த ஆலமரம் மருத்துவத்திலும் சிறந்து விளங்குகிறது. லேப்டோ பேசுலஸ், செப்டோ காக்கஸ் போன்ற பாக்டீரியாக்கள் பற்களில் பற்சிதை ஏற்படுத்துகிறது.

ஆலம் விழுதினால் பல் துலக்கும்பொழுது அதில் உள்ள துவர்ப்பு தன்மை பற்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து ஈறுகளையும் வலிமைப்படுத்தும்.

அதனால் தான் ஆலும் வேலும் பல்லுக்குறுதி' என்ற பழமொழியைக் கூறுவார்கள்.

பஞ்ச கவ்யத்திலும் ஆலம் விழுதுகளின் நுனியைச் சேர்ப்பதால், மகசூல் மிக அதிகமாகக் கிடைக்கும். ஆலம் விழுதின் நுனியில் அசோடாஃபேக்டர்' என்ற நுண்ணுயிர் உள்ளது. எனினும் ஆலமரத்தின் கீழ் எந்த ஒரு செடியும் முளைக்காது. அப்படியே முளைத்தாலும் அது பூக்காது, காய்க்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com