
'உங்க மனைவிகிட்ட நீங்க எந்த வேலையும் சொல்றதில்லையா... ஏன்?''
'எது சொன்னாலும் செய்யாதவகிட்ட எதுக்குச் சொல்லணும்னுதான்!''
'ஜோக் போட்டியில் எனக்கு முதல் பரிசா ஒரு லட்சம் கிடைச்சிருக்கு!''
'அப்ப 'ஜோக்பாட்' அடிச்சிருக்குன்னு சொல்லுங்க!''
'உனக்கு கை, கால், உடம்பெல்லாம் நல்லாத்தானே இருக்கு... எதுக்கு நீ பிச்சை எடுக்கிறே?''
'கை , கால் நல்லபடியா இருந்தாத்தானே சாமி ஓடியாடி பிச்சை எடுக்க முடியும்!''
'பொண்ணு பேரு மின்னல்னு சொன்னதும் பையன் வேண்டாம்னு சொல்லிட்டானாமே, ஏன்?''
'அவனுக்கு மின்னல்ல கண்டம்னு ஜோசியர் சொல்லி இருக்கிறாராம்!''
-வி.ரேவதி, தஞ்சை.
'உங்க ராசிக்கு நீங்க இன்னைக்கு அமைதியா இருக்கணும்!''
'நான் கல்யாணம் ஆன நாளிலிருந்து அமைதியாதானே இருக்கேன்!''
'என்னம்மா! மொபைல்ல என் பெயரை ஃபயர் சர்வீஸ்னு பதிவு பண்ணி வச்சிருக்கே?''
'நீங்கதானே கூப்பிட்டா உடனே வருவீங்க, அதான்!''
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
'இந்தக் கதையில உப்பு சப்பே இல்ல!''
'புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தா... உங்களை யாரு டேஸ்ட் பண்ணிப் பார்க்கச் சொன்னது?!''
'அந்த டாஸ்மாக் கடையைச் சுத்தி தண்ணி வந்துருச்சு!''
'அப்ப கடைக்கு வெளியேயும் தண்ணி... உள்ளேயும் தண்ணின்னு சொல்லுங்க!''
'ரெண்டு கிளியையும் ஒரே கூண்டுல போட்டது தப்பாப்போச்சா, ஏன்?''
'இப்ப ரெண்டும் சீட்டு விளையாடுதுங்க!''
'இன்னைக்கு எங்க 'ஹெட்' ஆபீஸ்ல இருந்து ஆளுங்க வர்றாங்க!''
'அப்ப ஆபீஸ்ல எல்லாருக்கும் 'தலைவலி'ன்னு சொல்லுங்க !''
-வி.சாரதி டேச்சு , சென்னை-5.
'மன்னர் போர் முனையில் அரண்டு போய்விட்டாராமே, ஏன்?''
'எதிரி மன்னன் உடைவாளுக்குப் பதிலா பிஸ்டல் எடுத்துக்காட்டிட்டானாம்!''
-என்.ஷாகிதா, ஈரோடு.
'இந்தப் படம் பார்ட்-2 வரப்போகுது!''
' நீ எப்படிச் சொல்றே?''
'கடைசி வரை வில்லன் திருந்தலையே!''
'அவர் ஞாபக மறதி பேர்வழின்னு எப்படிச் சொல்றே?''
'படம் நல்லா இல்லைன்னு நேத்து பேட்டி கொடுத்துட்டுப் போனவர் இன்னைக்குத் திரும்ப படம் பார்க்க வந்திருக்காரே!''
அ.ரியாஸ், சேலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.