நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

தமிழ் கற்பதைத் தவமாய் கருதியவர்...

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 2017-ஆம் ஆண்டு மார்ச் 22-இல் நடைபெற்ற செவ்வியல் இலக்கியங்களில் சமயங்களின் ஆளுமைகள் கருத்தரங்கில், நான் பங்கேற்றேன்.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 2:27 pm

நடிகர் சிவகுமார்

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 2017-ஆம் ஆண்டு மார்ச் 22-இல் நடைபெற்ற செவ்வியல் இலக்கியங்களில் சமயங்களின் ஆளுமைகள் கருத்தரங்கில், நான் பங்கேற்றேன்.

விழாவில் தெ.ஞா. பேசுகையில், 'திருமுருகாற்றுப்படை', 'திருப்புகழ்' மற்றும் சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றை உணர்ச்சிகரமாகப் பேசி கூட்டத்தில் பங்கேற்றோரிடம் கரவொலியைப் பெற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் பேசுகையில், 'தமிழ் கற்பதைத் தவமாகக் கருதியவர் தெ.ஞா.'' என்று உரையாற்றியது என் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் மிகப் பெரிய ஆளுமை. அவர் என் மீது பெரிதும் அன்பு கொண்டவர்.

'திருக்குறள்' தொடர்பாக நான் எழுதிய நூலுக்கு தெ.ஞா. அளித்த அணிந்துரையை வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாது.

'தமிழ் ஆர்வலர்கள் திருக்குறளைப் பல்வகையில் பரப்பி வருகின்றனர். சிலர் சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர். சிலர் கட்டுரை எழுதுகின்றனர்.

சிலர் முற்றோதல் நடத்துகின்றனர். சிலர் உரை வரைகின்றனர். நண்பர் சிவகுமார் அணுகுமுறை இவற்றில் வேறானது. எளிதில் மக்களைச் சென்றடைவது. அவர் இலக்கணத்துக்குத் தெளிவு தருபவை எடுத்துக்காட்டுகளே என்பதை உணர்ந்துள்ளார்.

தம் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள், திரையுலகப் பெருமக்கள், வரலாறு படைத்த பெருமக்கள் ஆகியோர் வாழ்வு நிகழ்ச்சிகள் இவற்றை எடுத்துக் கூறித் திருக்குறளோடு பொருத்திக் காட்டுகிறார். கி.ரா.வின் மனைவி கணவதியம்மா, படத்தயாரிப்பாளர் தேவர், பெரியார், இராஜாஜி போன்றோரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கதை போலச் சொல்லி குறள் கருத்துகளைப் புரிய வைக்கிறார்.

கதை கேட்பதில் யாருக்குத்தான் விருப்பம் இருக்காது? படித்தாரைப் பிணிக்கும் நூறு கதைகள்! எளிய நடை! அரிய முயற்சியின் விளைச்சல்! இந்த நூல் குறள் நெறி பரப்புவதில் ஒரு மைல்கல்'' என்று தனது அணிந்துரையில் தெ.ஞா. குறிப்பிட்டிருப்பதை என்றென்றும் நினைத்துப் பார்ப்பேன்.

ஒருமுறை தெ.ஞா. தனது மனைவியோடு எனது வீட்டுக்கு வந்து சில மணி நேரம் இருந்து பேசி உரையாடியபோது, வாழ்க்கையில் எல்லையில்லா இன்பத்தைப்பெற்றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.