'தொழில்முறையாக பந்தயத்தில் ஈடுபடுவதை ஒருபோதும் கற்பனை செய்து பார்க்காத நான் 'ஃபார்முலா 1' ரசிகையாகியுள்ளேன். அதற்கு அஸ்திவாரம் போட்டது அப்பாதான். எனக்குப் பயிற்சி அளிக்க பல இடங்களைத் தேடி அலைந்தார். கடைசியில் குடுகாவ்ன்வில் உள்ள ஒரு கார்ட்டிங் டிராக்கில் பயிற்சிக்காக என்னைச் சேர்த்துவிட்டார். அங்கு ஐந்து மாத பயிற்சியில் நான் திறமையாக கார் ஓட்டி அசத்தினேன்!'' என்கிறார், அரியானாவைச் சேர்ந்த அர்ஷி குப்தா.
ஏழரை வயதில் 'கார்ட்டிங்' எனப்படும் குழந்தைகள் கார் பந்தயத்தில் கலந்து கொள்ளும் உரிமம் பெற்று இளைய ஓட்டுநரான அவர் 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'ஸில் இடம் பிடித்தார். அண்மையில், தமது 9 -ஆம் வயதில் அர்ஷி குப்தா, 'ஃபார்முலா 1' அகாதெமியின் திட்டத்தில் 'மிகக் குறைந்த வயதில்' இணைந்த கார் ரேஸர் ஆகியுள்ளார். அதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
'பொம்மை கார்களை ஓட்டியவாறு எங்கள் வீட்டைச் சுற்றி வரும்போது, கட்டுப்பாடுடன் வேகமாக ஓட்டுவது எனக்குப் பிடித்திருந்தது. வேகத்தின் மீதான அந்த ஈர்ப்பு என்னை விரைவு கார் பந்தய விளையாட்டின் பக்கம் அழைத்துச் சென்றது.
2023-இல் எனது பயிற்சியாளர் தொழில்முறை கார்களை என்னை ஓட்டச் செய்து திறமையை பரீட்சித்துப் பார்க்க விரும்பினார். அதற்காக என்னை பெங்களூரு அழைத்துச் சென்றார். இப்படித்தான் எனது தொழில்முறை விரைவு கார் ரேஸ் அனுபவம் தொடங்கியது . இன்றுவரை இந்தியாவால் உயர்மட்ட பந்தய வீரர் ஒருவரை உருவாக்க முடியவில்லை என்பதற்குக் காரணம் கார் ரேஸ் சாகச விளையாட்டு வளரும் சூழல் இங்கு இல்லை என்பதுதான்.
'பெங்களூரு, சென்னைக்குச் சென்றாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அல்லது ஐரோப்பாவில் அல்லது இங்கிலாந்தில் உள்ள வசதிகளுடன் ஒப்பிடும்போது இங்குள்ள வசதிகள் ஒன்றுக்கும் உதவாது' என்று எனது பயிற்சியாளர் அடிக்கடி சொல்வார்.
நான் பயிற்சியைத் தொடங்கியபோது, தொழில்முறை கார்ட்டிங் டிராக் பயிற்சிக்காக தில்லியிலிருந்து நான் பெங்களூருக்கு பயணம் செய்யவேண்டி வந்தது. அதில் பல சிரமங்கள் இருந்தன . எனவே எனது பெற்றோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்குக் குடிபெயர்ந்தனர். ஐ.ஏ.எம். தொடர் மற்றும் ரோடாக்ஸ் மேக்ஸ் சேலஞ் பந்தயத்தில் பங்கு கொண்டேன். ஜனவரி 2025-இல் தர வரிசையில் முதல் பத்து இடங்களில் என்னைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.
தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப்பில் போட்டியிட இந்தியா திரும்பும் முன்பு, பிரிட்டனில் ஏழு வாரப் பயிற்சி பெற்றேன். இங்கு நடந்த பந்தயங்களில் ஆசியாவின் ஒரே பெண் தேசிய கார்டிங் சாம்பியன் என்ற பெருமையைப் பெற்றேன். சிறார்களில் மிகக்குறைந்த வயதில் சாம்பியன் ஆனேன். ஜனவரி 2026-இல், எனது திறமை அனுபவங்களை பரிசீலனை செய்து, என்னை 'ஃபார்முலா 1' அகாதெமியின் திட்டத்தில் சேர்த்துக் கொண்டனர்.
ஃபார்முலா ஒன் அகாதெமி ஓட்டுநர் திட்டத்தின் கீழ் எனக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்கும் . 'பிரிட்டிஷ் சாம்பியன்ஸ் ஆஃப் தி ஃபியூச்சர் அகாதெமி' திட்டத்திலும் எனக்குப் பயிற்சி அளிக்கப்படும். உலகின் பிரபல ஜூனியர் ஓட்டுநர்களுக்கு எதிராக இங்கிலாந்தில் நான்கு சுற்றுகளில் பந்தயத்தில் ஈடுபடும் வாய்ப்பும் கிடைக்கும்.
அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தூக்கமில்லா இரவுகள், அதிகாலை விமானப் பயணங்கள் என்று வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சிரமங்கள் எனது முன்னேற்றத்துக்குத் தடையில்லை. பயணத்தின்போது உறங்கிக் கொள்வேன். அதுபோல, படிப்பிலும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நேரத்தை நிர்வகிக்கக் கற்றுக்கொண்டேன்''என்கிறார் அர்ஷி குப்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உயர்ந்த நிலைக்குச் சென்றாலும்...

கோலிவுட் ஸ்டூடியோ!
சவாலே சமாளி...
கிருஷ்ணன் பஞ்சு - நான் சந்தித்த பிரபலங்கள் - 50
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

