சிரி... சிரி...

'என்னை கைது பண்ணதுக்கு நாடு கொந்தளிக்கலையா?'
சிரி... சிரி...
Updated on
1 min read

'என்னை கைது பண்ணதுக்கு நாடு கொந்தளிக்கலையா?'

'ரிலீஸ் பண்ணா அது நடக்கும், தலைவரே!'

-அ.ரியாஸ், சேலம்.

'சர்வர், கெட்டிச் சட்னி வைக்கலியே?'

'டிப்ஸ் வைப்பீங்கன்னு சொன்னா கொண்டு வரேன், சார்!'



'போர்க்களத்தில் 'இந்த முறையும் வெற்றி' என்று மன்னர் ஆர்ப்பரிக்கிறாரே?'

'இந்தப் போரிலும் புறமுதுகு பாதை எந்தப் பக்கம் என்று எளிதில் கண்டுபிடித்து விட்டாராம்!'

-எம்.ஏ.ஆதம், அரக்கோணம்.



'பகல்ல தூங்குறப்பவும் கனவு வருதே, டாக்டர்?'

'வந்துட்டுப் போகட்டுமே... அது உங்க ஆபீஸ் ஸ்டாப்பை டிஸ்டர்ப் பண்ணப் போகுதா என்ன?'

-பேகம்பூர் ஷம்மு, திண்டுக்கல்.



'பொங்கலோ பொங்கல்னு எதிர் வீட்டு வாசல்ல யார் கூவுறது?'

'ஆன்லைன்ல ஆர்டர் பண்ணின பொங்கல் பார்சல் டெலிவரி மேன்!'

- பர்வதவர்த்தினி, பம்மல்.



' மீன் தொட்டியில் இருக்கும் மீனுக்கு இனிமேல் தீனிப் போடாதே!'

'எதுக்குங்க?'

'மீன் சாப்பிடுவதை நிறுத்தணும்னு டாக்டர் சொல்லி இருக்காரு !'

-ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.



'மாசம் எவ்வளவு சம்பாதிக்கிறீங்க?'

'செலவு போக பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கக் கூடிய அளவுக்கு சம்பாதிக்கிறேன்!'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'இளவரசருக்கு பைன் போட்டுவிட்டார்களா, ஏன்?'

'நோ ஹார்ன் ஜோனில், அவர் ஏறி வந்த குதிரை பயங்கரமாக கனைத்ததாம்!'

-மஞ்சுதேவன், பெங்களூரு.



'உங்க வீட்டு பிரிட்ஜில் மேலடுக்கில் இருந்து கீழடுக்கு வரைக்கும் கடந்த பத்து நாள் தேதியும் எழுதி வச்சிருக்கீயே, ஏன் ?'

'எந்தெந்தத் தேதியில எடுத்து வச்சதுன்னு மறந்து போகுது, அதான் !'

-எம்.பி.தினேஷ், கோவை - 25.



'பொண்டாட்டி ஊருக்குக் கிளம்பினா நான் ரொம்ப சோகமா இருப்பேன்!'

'அவ்வளவு பிரியமா அவுங்க மேல?'

'இல்ல... சந்தோஷத்தை வெளியே காட்டினா, உடனே பயணத்தை கேன்சல் பண்ணிடுவா!'



'உன் புருசன் உன்னை 'சாந்தா' ன்னு கூப்பிடாம, ஏன் 'சந்தா' ன்னு கூப்பிடறாரு?'

'மாசமாசம் எனக்காக நிறையப் பணம் செலவழிக்கிறாராம்; அதைத்தான் அப்படிச் சொல்றாரு!'



'ஸ்கூலுக்கு போகும்போது இப்படி அழுதுகிட்டேவா போவாங்க... நான் எப்படிச் சிரிச்சுக்கிட்டே வரேன் பாரு?'

'நான் படிக்கப்போறேன்... நீங்க மிஸ்ஸை பார்க்கல்ல வர்றீங்க?'



'என்னது.... மைக்ரோ இட்லியா... அப்படின்னா?'

'மினி இட்லியைவிட சின்னதா இருக்கும், சார்!'



'அவன் குடிக்கிறவன்தான், நேர்மையானவன்னு எப்படிச் சொல்றே?'

'சரக்கடிச்சிட்டு பஸ்சுல போகும்போது, தன் ஒருத்தனுக்கு மட்டுமே ரெண்டு டிக்கெட் வாங்கினான்னா பார்த்துக்க!'



'எல்லா விமர்சனங்களுக்கும் தலைவர் சாதுர்யமா பதில் சொல்லிச் சமாளிச்சிடுவாரு!'

'எப்படிச் சொல்றீங்க?'

'உங்களுக்கு இரட்டை நாக்குன்னு எதிர்க்கட்சித் தலைவர் சொல்றாரேன்னு கேட்டதுக்கு, ' ஆமாம். உள் நாக்கு ஒண்ணு, வெளி நாக்கு ஒண்ணு'ன்னு சொல்லிட்டாரே!'



'டி.வி. சீரியல்ல நான் 25-வருஷமா நடிச்சிட்டிருக்கேன்...!'

'சுமாரா எத்தனை சீரியல்ல நடிச்சிருப்பீங்க?'

'ஒரே ஒரு சீரியல் தாங்க ... அதுவே இன்னும் முடியலை!'



'ஒண்ணு போனா ஒண்ணு வரும்னு சொல்றது சரியாத்தான் இருக்கு!'

'எப்படிச் சொல்றே?'

'வடை ஊசிப்போனா, அதுல நூல் வருதே!'

-வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com