நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

புள்ளிகள்

திருநெல்வேலியில் அன்னிபெசன்ட் அம்மையார் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :2 மே 2026, 10:41 pm

திருநெல்வேலியில் அன்னிபெசன்ட் அம்மையார் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த இடத்தில் இருந்து ஒரு மைல் தூரத்தில் அன்னிபெசன்ட் அம்மையார் தங்கியிருந்தார். நடந்து போனால் 25 நிமிடங்கள்தான். இரவு 8 மணிக்கு கூட்டம் தொடங்க இருந்தது. 7.35 மணி வரை வாகனம் அவரை அழைத்துச் செல்ல வரவில்லை. ஆனால் அவர் சற்றும் கவலைப்படவில்லை.

'கூட்டத்துக்கு நான் தாமதமாகப் போவது மன்னிக்க முடியாத குற்றம். மற்றவர்களின் நேரத்தை வீணாக்க எனக்கு உரிமையில்லை' என்று கூறியபடியே நடக்க ஆரம்பித்தார்.

உலகிலேயே தன் வரலாற்றை முதன்முதலில் கவிதை வடிவில் எழுதியவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. ஆங்கிலேயர் ஆட்சியில் இதை வெளியிட யாரும் முன்வரவில்லை. ஆனால், முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் அது நூல் வடிவமாக வெளிவந்தது.

திரைப்படப் பாடல்களில் முதல் வரிசையை வைத்து, படத் தலைப்பாக உருவாக்கும் பழக்கம் 1955-ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது, பத்மநாப ஐயர் என்பவர், உடுமலை நாராயண கவியின் பாடலான 'எல்லாம் இன்ப மயம்' என்ற பாடலின் முதல் வரியை வைத்து, முதலில் படம் எடுத்தார்.

-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

நடிகர் சிவாஜி கணேசன் நடித்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படம் 1959-ஆம் ஆண்டில் வெளியானது. ஆனால், 1955-ஆம் ஆண்டிலேயே வடக்கு எல்லைப் போராட்ட நிதிக்காக நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் அவ்வேடம் ஏற்று நடிகர் சிவாஜி கணேசன் நடித்தார்.

நாட்டிலேயே மே தின முதல் கூட்டம் சென்னை மெரீனா கடற்கரையில் ம.சிங்காரவேலரால் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 1958-இல் மெரீனா கடற்கரையில் உழைப்பாளர் சிலையை நிறுவ அப்போதைய முதல்வர் காமராஜர் விரும்பினார்.

சென்னை ஓவியக் கல்லூரியில் முதல்வராகவும், அகில இந்தியச் சிற்பிகளில் ஒருவருமான தேவி பிரசாத் ராய் சௌத்ரி உழைப்பாளர் சிலை ஒன்றைப் படைத்திருப்பதாக காமராஜர் அறிந்தார். அந்தச் சிற்பத்தை காமராஜர் விலைக்கு வாங்கி, மெரீனா கடற்கரையில் நிறுவினார். இச்சிலை 1959-இல் ஜனவரி 25-இல் திறந்துவைக்கப்பட்டது.

உண்மையில், ராய் சௌத்ரி இத்தாலியச் சிற்பியிடம் மேலைநாட்டு சிற்பக்கலை பயின்றவர். ஒரு மல்யுத்த வீரரான ராய் சௌத்ரிக்கு தசை திரட்சியை வார்க்கும் வகையில், ஒரு சிற்பம் செய்யும் எண்ணம் வந்தது. அப்போது ஓவியக் கல்லூரியில் காவலராக, தோட்டக்காரராக இருந்த சீனிவாசன், ஓவியர் ராமு ஆகியோரை மாதிரியாகக் கொண்டு, ஒரு கல்லைப் புரட்டிப் போடுமாறு நிற்க வைத்து, இந்தச் சிற்பத்தை உருவாக்கினார். இந்தச் சிலையை வாங்கிய காமராஜர் இதற்கு 'உழைப்பின் வெற்றி' எனப் பெயரிட்டார். மெரீனா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலையையும் ராய் சௌத்ரியே நிறுவினார்.

'கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் பிளவுபட்ட காலத்தில் இன்றுவரை தோழர் வழக்குரைஞர் மோகன் குமாரமங்கலத்தின் அரசியல் வாழ்வில் நான் முக்கியமான சகாவாக இருந்து வந்திருக்கிறேன். பல ஆண்டுகள் மோகனோடு இந்தோ- சோவியத் பண்பாட்டுக் கழகத்தில் நான் வேலை செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் காணாத புதிய அரசியல் மோகனை இந்த 4 ஆண்டு காலத்தில்தான் கண்டேன். இந்தியாவுக்குக் கிடைத்த பொக்கிஷம் என்றே நான் மோகனை கருதினேன். பிரகாசமான எதிர்காலத்தைக் கண்ணுக்குக் காட்டிவிட்டு மோகனை நம்மிடம் இருந்து பிரித்துவிட்டது விதி'' என்று மோகன் குமாரமங்கலம் மறைவு குறித்து 1973-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியான 'கண்ணதாசன்' மாத இதழில் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

'திருக்குறளார் முனுசாமியின் பேச்சு திருக்குறள் விளக்கங்கள் கூடியதாக இருக்கும். கி.ஆ.பெ.விசுவநாதம் சொல்லும் புள்ளிவிவரங்கள் ஊருக்கு ஊர் மாறுபடும். அறிஞர் அண்ணாவின் பேச்சுகள் கவர்ச்சிகரமானவை. கரகரத்த குரலில் கிளைக்கதைகள், மேற்கொள்கள் சொல்லி பிரமிக்க வைப்பார். குன்றக்குடி அடிகளாரின் பேச்சு தமிழருவியைப் போல் கொட்டும். ம.பொ.சி.யின் பேச்சு ஒரே தலைப்பில் பேச்சுக்குப் பேச்சு வேறுபட்டு அமையும். நாவலர் நெடுஞ்செழியன் பேச்சில் ஏற்ற, இறக்கங்கள் நிரம்ப இருக்கும். தோழர் ஜீவானந்தத்தின் பேச்சில் எரிமலை வெடிக்கும். அவர் பேச்சில் கம்பன் இடம்பெறுவார். கூடவே பாரதியின் அனல் தெறிக்கும்'' என்று 'இது கதை அன்று வாழ்க்கை' எனும் நூலில் கவிக்கோ ஞானச்செல்வன் கூறியுள்ளார்.

நடிகர் எம்.ஆர்.ராதாவின் 'விமலா அல்லது விதவையின் கண்ணீர்' எனும் நாடகத்துக்கு பெரியார், அண்ணா ஆகிய இருவரும் தாங்களாகவே நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு சென்று நாடகம் பார்த்தனர். நாடகம் முடிந்தவுடன் இருவரும் மேடையில் ஏறிப் பேசினர். 'நாங்கள் நூறு மாநாடுகள் நடத்துவது, ராதா ஒரு நாடகம் நடத்துவதற்குச் சமம்'' என்று அண்ணா புகழ்ந்தார். அன்றைய நாளில் இருந்து தி.க. பற்றாளராக எம்.ஆர். ராதா மாறினார்.

எம்.ஆர். ராதாவுக்கு தொண்டை கட்டி இருந்ததால் சுயமான குரலால் பேச முடியவில்லை. அப்போதுதான் அவர், 'தொண்டை கட்டிய இந்தக் குரலில் பேசினால் ரசிகர்கள் ரசிக்கின்றனர்' என்பதை அறிந்தார். அன்றைய நாளில் இருந்து செகன்ட் வாய்ஸையும் டயலாக்கையும் ஏற்றி, இறக்கிப் பேசத் தொடங்கினார்.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.