நான் அஸ்திவாரக் கல்

லால் பகதூர் சாஸ்திரி லோக் சேவா மண்டலின் தலைவரானார். தன் பெயர் பத்திரிகைகளில் அச்சாவதையும், அதன் மூலம் மக்கள் தன்னைப் புகழ்வதையும், வரவேற்பதையும் அவர் விரும்பவில்லை.
நான் அஸ்திவாரக் கல்

லால் பகதூர் சாஸ்திரி லோக் சேவா மண்டலின் தலைவரானார். தன் பெயர் பத்திரிகைகளில் அச்சாவதையும், அதன் மூலம் மக்கள் தன்னைப் புகழ்வதையும், வரவேற்பதையும் அவர் விரும்பவில்லை. அதனால் அவர் லோக் சேவா மண்டலின் தலைவராக செய்திகள் வெளிவந்ததைக் கண்டு மிகவும் கூச்சமடைந்தார். ஒருநாள் சாஸ்திரியின் நண்பர்கள் அவரிடம் ""தாங்கள் இந்த அளவுக்கு பத்திரிகைகளில் தங்கள் பெயர் வரக் கூடாது என்று ஏன் நினைக்கிறீர்கள்'' என்று கேட்டார்கள். அதற்கு சாஸ்திரி, லாலாலஜபதிராய் லோக் சேவா மண்டல் செயல்முறைக்கு விளக்கம் அளித்த போது என்னிடம், ""லால்பகதூர், தாஜ்மஹாலில் இரண்டு வகையான கற்கள் இருக்கின்றன. ஒன்று விலை
யுயர்ந்த சலவைக் கற்கள். இவற்றை உலகம் முழுவதும் காண்கிறது. புகழ்கிறது. இரண்டாவது வகைக் கற்கள் தாஜ்மஹாலின் அஸ்திவாரத்திலுள்ளன. அவற்றின் வாழ்க்கையில் இருள் மட்டுமே இருக்கிறது. ஆனால் தாஜ்மஹாலை நிலைபெறச் செய்வது அவைதான் என்றார் லாலாஜி. அந்தச் சொற்கள் எப்போதும் என் நினைவில் இருக்கின்றன. நான் அஸ்திவாரக் கல்லாகவே இருக்க விரும்புகிறேன்'' என்றார் சாஸ்திரி!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com