ஐந்து பேர் ஐந்து செய்தி

ஐந்து பேர் ஐந்து செய்தி

ஒவ்வொரு ஆண்டும் தனக்கு வெற்றிப்படம் கொடுத்தவர்களுக்கு ஒரு படம் செய்து கொடுக்க முடிவெடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதற்கான திரைக்கதைகளைத் தயார்படுத்த அவர்களிடம் சொல்லியிருக்கிறார்.

* தமயந்தி, உமா மகேஸ்வரி, பிரேமா ரேவதி உள்பட மலேசியா மற்றும் தமிழ்நாட்டின் 100 பெண் கவிஞர்களின் சங்கமம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு, அவர்களின் படைப்பிலக்கிய அனுபவம் குறித்து பேசப்பட்டது. பெண் கவிஞர்களின் நேர்காணல்கள் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டு "அநுராகம்' மூலம் வெளியாகிறது.

* எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் "எழுத்தே வாழ்க்கை', "நாலவெனும் சிம்பொனி' என தனது ஐந்து புத்தகங்களை வெளியிட்டு, தேசாந்திரி பதிப்பகம் என்ற சொந்த பதிப்பகத்தை கிறுஸ்துமஸ் தினத்தன்று தொடங்குகிறார்.

* ஒவ்வொரு ஆண்டும் தனக்கு வெற்றிப்படம் கொடுத்தவர்களுக்கு ஒரு படம் செய்து கொடுக்க முடிவெடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதற்கான திரைக்கதைகளைத் தயார்படுத்த அவர்களிடம் சொல்லியிருக்கிறார்.

* "நிலம்' என்ற அமைப்பை திருவண்ணாமலையில் தொடங்கியிருக்கிறார் பவா செல்லத்துரை. காலம் பற்றிய உறுதி இல்லாமல் வாய்ப்பு உள்ளபோது நடக்கும் அந்தக் கூட்டத்தில் இலக்கியவாதிகள், களப் பணியாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்கிறார்கள்.

* சாகித்ய அகாதெமியின் இந்த ஆண்டு விருத்துக்குப் பரிசீலனையில் உள்ளவர்கள்: ஜெயமோகன், பெருமாள்முருகன், எஸ்.ராமகிருஷ்ணன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com