கிழக்கு முகமாக சங்கு சக்கரத்துடன் காக்கும் கடவுள்

சென்னை பிராட்வே பகுதியில் உள்ள ஏராளமான கோயில்களில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலில் கூறப்படும் மரபின்படி, கோயில் கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும்
கிழக்கு முகமாக சங்கு சக்கரத்துடன் காக்கும் கடவுள்

சென்னை பிராட்வே பகுதியில் உள்ள ஏராளமான கோயில்களில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலில் கூறப்படும் மரபின்படி, கோயில் கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும் பிரசன்ன வெங்கடேச பெருமாள், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு, விஷ்ணுவின் பக்தரான அல்லூரி வெங்கடாத்ரி சுவாமி (கி.பி.1806-1877)க்கு காட்சியளித்தார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள "அல்லூரி' என்ற கிராமத்தைச் சேர்ந்த அல்லூரி வெங்கடாத்ரி சுவாமி, முறையாகக் கல்வி பயிலாமலேயே சாஸ்திரங்களில் சிறந்து விளங்கினார். தெலங்கானாவில் உள்ள பத்ராசலத்தில் வசித்து வந்தவர், மெட்ராஸுக்கு (சென்னை) வருகை தந்தார். கிழக்கு முகம் பார்த்த பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலின் நுழைவில் ஐந்து நிலைகள் கொண்ட உயரமான ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தில் பரமபத நாதன், விஸ்வரூப தரிசனம் என விஷ்ணுவின் பல்வேறு நிலைகளில் ஏராளமான சிற்ப வடிவங்கள் உள்ளன.

பிரதான விக்ரகத்தின் மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும் கீழ் வலது கரம் பக்தர்களுக்கு அபயம் அளிப்பது போலவும் கீழ் இடது கரம் இடுப்பில் வைத்தபடியும் இருக்கின்றன. கோபுரத்தின் அருகில் மேற்கு முகமாகப் பார்த்து பக்த ஆஞ்சநேயரின் சிறிய விக்ரகம் இருக்கிறது. கோபுரத்தின் இடது புறமாக உள்பக்கத்தில் பெரிய மண்டபமும் நேராகப் பார்த்தபடி அலர்மேல்மங்கை என்ற பெயரில் லட்சுமி தேவியின் சந்நிதியும் உள்ளன. அதன் அருகிலேயே பன்னிரு ஆழ்வார்கள் விக்ரகங்கள், வைஷ்ணவ ஆச்சாரியர்களான ராமானுஜாச்சாரியர், அவரது ஆசிரியரான திருக்கச்சி நம்பி, மணவாள மாமுனி ஆகியோரின் விக்ரங்களும் உள்ளன. 

தாயாரின் சந்நிதியில் இடது புறத்தில் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான, திருமலையில் (திருப்பதி) சந்நிதி கொண்டுள்ள வராக மூர்த்தியின் விக்ரகமும் மறுபுறத்தில் கோதண்ட ராமரின் விக்ரகமும் உள்ளன. மேலும், இந்தக் கோயில் வளாகத்தில் சந்தான கிருஷ்ணன் (தமிழில் "ஆல் இலை கிருஷ்ணன்'), ஆண்டாள், சுதர்சனா ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன. 

பண்டிதர்-பக்தர்: 19-ஆம் நூற்றாண்டில் வசித்த இசை அறிஞரான அல்லூரி வெங்கடாத்ரி சுவாமிக்கு (கி.பி.1806-1877) சம்பந்தம் உடைய கோயில்.
வழிபாடு முறை: வைகாசன ஆகமத்தைப் பின்பற்றி ஏராளமான பண்டிகைகள் இந்தக் கோயிலில் கொண்டாடப்படுகின்றன.
தாயாரின் பெயர்: லட்சுமி தேவி.
இக்கோயிலில் "அலர்மேல்மங்கை தாயார்' என வழிபடப்படுகிறார்.
அமைவிடம்: இந்தக் கோயில், சென்னை பிராட்வே தேயப்ப முதலி தெருவில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகே ஆச்சாரப்பன் கோயில் தெருவில் ஆதி கேசவ பெருமாள் கோயிலும் வரதமுத்தியப்பன் தெருவில் வரதராஜ பெருமாள் கோயிலும் உள்ளன.
கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர், 
கோயில் - சிற்பங்கள் ஆராய்ச்சியாளர்.
தமிழில்: பிரவீண் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com