தமிழ்நாடு சுற்றுலா விருது

காமராஜர் அரங்கம் விழாக்கோலம் பூண்டது. ஏதோ கண்காட்சிக்கு வந்தது போல் மக்களை நினைக்க வைத்து விட்டார்கள். உள்ளே நுழையும்போதே மேளதாளத்துடன் வரவேற்பு. நடுநாயகமாக திருவள்ளுவரின் பெரிய சிலை. 
தமிழ்நாடு சுற்றுலா விருது

காமராஜர் அரங்கம் விழாக்கோலம் பூண்டது. ஏதோ கண்காட்சிக்கு வந்தது போல் மக்களை நினைக்க வைத்து விட்டார்கள். உள்ளே நுழையும்போதே மேளதாளத்துடன் வரவேற்பு. நடுநாயகமாக திருவள்ளுவரின் பெரிய சிலை. 
உள்ளே நுழைந்த உடன் பல்வேறு சிறு சிறு ஸ்டால்கள் இருந்தன. அங்கு நாம் போக விரும்பும் ஊருக்கு, அங்கேயே டிக்கெட்டும் வழங்கப்படுகிறது. இவை மட்டுமல்லாமல் உள்ளே சுற்றுலாவை போற்றும் விதமாக பட்டிமன்றம், வில்லுப் பாட்டு, நடனம் என்று இயல், இசை, நாடகம் என்று முத்தமிழும் இணைந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. ஓடிக்கொண்டிருந்த இளைஞர் ஸ்ரீஹரனை நிறுத்தி கேட்டபோது, ""இதெல்லாம் என் தந்தையரின் ஆசை. அதை நாங்கள் எல்லோரும் செயல் வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.
மற்றொரு ஓரத்திலே வெள்ளை வேட்டி, சட்டை சகிதம் நின்றிருத்த வி.கே.டி.பாலன் யாருடனோ தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். முடித்தவுடன் அவருடன் பேசினோம்: ""இந்திய 
சுற்றுலாவில் தமிழ்நாடுதான் மிகப்பெரிய பங்களிப்பை நல்கி உள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் ஓரிரு விருதுகள்தான் நம்மால் பெற முடிகிறது. இங்கே சுற்றுலாத் துறையை சேர்ந்த பலர் உள்ளனர். அவர்களை அங்கீகரிக்கும் முகமாக ஒரு விருது விழாவை ஏற்பாடு செய்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவுதான் தமிழ் நாடு சுற்றுலா விருது. இந்த விருது வழங்கும் விழா "மதுரா வெல்கம்' என்ற எங்கள் புத்தகம் மூலம் செய்தால் அது சிறப்பாக இருக்கும் என்று நினைத்து செய்கிறோம். இந்திய சுற்றுலாத் துறையின் அங்கீகாரத்துடன், தமிழக சுற்றுலாத் துறையின் துணையுடன் விருது வழங்கும் விழாவை மூன்றாவது ஆண்டாக விமரிசையாக நடத்தி வருகிறோம்'' என்றார்.
பேச்சரங்கம், பட்டிமன்றம், இலக்கிய அரங்கம் என சுற்றுலா மேம்பாடு குறித்து பேசப்பட்டது. தவிர, காலை முதல் மாலை வரை கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் போன்றவை நடைபெற்றன. பின்னர் பாடகி பி.சுசீலாவின் கரங்களால் சுமார் 118 விருதுகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா முதலாளியும் விருது பெற்றார். மதுராவின் "மாமனிதர் விருது', இந்த ஆண்டு மதுரையை சேர்ந்த "தியாகம் பெண்கள் டிரஸ்ட்'டை சேர்ந்த எஸ்.ஜெ.அமுதசாந்திக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுடன் ரூபாய் ஒரு லட்சம் காசோலையும் வழங்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com