பாந்தியன் சாலை

இன்றைய சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றாகத் திகழ்வது பாந்தியன் சாலை. PANTHEAN என்றால் எல்லா தேவதைகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட கட்டடம் என்று பொருள். 1778-இல் ஆளுநராக இருந்த
பாந்தியன் சாலை

இன்றைய சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றாகத் திகழ்வது பாந்தியன் சாலை. PANTHEAN என்றால் எல்லா தேவதைகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட கட்டடம் என்று பொருள். 1778-இல் ஆளுநராக இருந்த தாமஸ் ராம் போல்ட், பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரரான ஹால் புளூமர் என்பவருக்கு பாந்தியன் எஸ்டேட் என்ற இந்த இடத்தை இனாமாகக் கொடுத்தார்.
அவர் அதில் தோட்டத்துடன் கூடிய ஒரு வீட்டைக் கட்டி 24 பேர் கொண்ட ஓர் அமைப்பிடம் அதை ஒப்படைத்தார். இப்படி பல கைகளுக்கு மாறி மீண்டும் அரசே அதை 28 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக மாற்றியது. பிறகு அதுவே அருங்காட்சியகமாக மாறியது.
சென்னையின் அப்போதைய ஆளுநர் கன்னிமாரா கட்டடம் கட்டினார். அங்கு அமைக்கப்பட்டதுதான் கன்னிமாரா நூலகம். சுமார் 43 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாந்தியன் எஸ்டேட் அருகில் அமைந்த சாலை பாந்தியன் சாலை என்று இன்று வரை அழைக்கப்படுகிறது.
ஆதாரம்: பிரிட்டீஷ் இந்தியாவின் ஆவணம்

(பெரியோர் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் எனும் நூலில் இருந்து...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com