பிடித்த பத்து: தேசம் எனக்கு தெய்வம்!

நடனத்தில் உள்ள எல்லா பிரிவுகளிலும் பாண்டித்யம் உடையவர்.  நடன குரு, நடனத்தைப்  பற்றிய புத்தகம் எழுதியவர். டாக்டர் பட்டத்திற்காக உழைத்து படித்து  பின்னர் அந்தப்  பட்டத்தைப் பெற்றவர்.
பிடித்த பத்து: தேசம் எனக்கு தெய்வம்!


நடனத்தில் உள்ள எல்லா பிரிவுகளிலும் பாண்டித்யம் உடையவர்.  நடன குரு, நடனத்தைப்  பற்றிய புத்தகம் எழுதியவர். டாக்டர் பட்டத்திற்காக உழைத்து படித்து  பின்னர் அந்தப்  பட்டத்தைப் பெற்றவர்.  "பத்மஸ்ரீ' பட்டம் 1981 -ஆம் ஆண்டிலும்,  "பத்மபூஷன்' பட்டம் 2003-  ஆம்  ஆண்டிலும்  இவருக்கு கிடைத்தது. சுமார் 100 பட்டங்களும், பாராட்டுகளும், இவருக்கு இதுவரை கிடைத்துள்ளன. அதில் சங்கீத நாடக அகாதெமி விருதும் அடக்கம்.  ஜப்பான், ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகள் இவரை பற்றிய டாக்குமெண்டரி படங்களை எடுத்து கௌரவப்படுத்தியுள்ளனர்.  டாக்டர். பத்மா சுப்ரமணியம் தனக்கு "பிடித்த பத்து' பற்றி இங்கு கூறுகிறார்:

மாதா, பிதா, குரு, தெய்வம், தேசம்: அன்னையும் பிதாவும் மற்றும் குருவும், கண்கண்ட தெய்வம் தான்.  அதுபோன்று என் தேசமும் எனக்கு தெய்வம்தான். குடும்ப மரபு, தேச மரபு, மனிதநேயம்: குடும்ப மரபு பெருமைக்குக்குறியது. இது ஒரு பல் கலைக் கழகம். கூட்டுக் குடும்பம்: கூட்டுக் குடும்பத்தில்தான் மனித நேயம் பயில முடியும். இயற்கை வளம்: இயற்கை வளம்தான் நம் அகங்காரத்தை நீக்கி சாந்தியை தரும். 

இலக்கிய வளம்: இலக்கியம்தான் ஒரு கலாசாரத்தின் பிரதிபலிப்பு. அதனை ரசித்து உயர முடியும். 

நுண்கலை-சாஸ்த்ரீயம் மற்றும் பாமர: சிறு வயது முதல் எனக்கு எல்லா நுண்கலைகளிலும் ஈடுபாடு உண்டு.  எனது பள்ளிப் பருவத்தில் பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேருவை சிறுவர்கள் பேட்டி கண்டோம். அவரிடம்,  நான் எந்த நுண்கலை அவருக்குப் பிடிக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர் ""குழந்தாய், வாழ்க்கையை வாழ்வதே நுண்கலை என்று ஒரு நாள் நீ புரிந்து கொள்வாய்'' என்று கூறினார்.

ஆலயங்கள்: ஆலயங்கள் நமது கலாசார சின்னமாகும்.  மானுட வளர்ச்சியின் உச்சி எனலாம்.  நமது கோயில்கள் வெறும் கட்டடங்கள் அல்ல;  அண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் பிரதிபலிப்பவை.  இது அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு கிடைக்கும் அனுபவம்.  நிலையாய் நிலைத்து கலையாத கலையாய் திகழும்.

கண்ணியம்: கண்ணியம் மரியாதையை தரும்.  இது சுயமரியாதையையும் தரும் என்பது திண்ணம்.

சரித்திரம்: சரித்திரம் படிப்பது என்னை காலம் கடந்து வாழ உதவுகிறது.  இதில் நல்லது, கெட்டது என்ற தீர்மானங்களுக்கு அப்பால், என்னை  ஓர் அங்கமாக ஆக்கிக் கொண்டு ரசிக்கிறேன்.  நம் இதிகாசங்கள், சரித்திரங்கள்தான், கட்டு கதைகள் அல்ல.

வேதாந்தம்: வேதாந்த நூல்கள், சொற்பொழிவுகள், ஹரிகதை, உபன்யாசம் இவையாவும், ஒரு மனிதனின் குணசித்திரத்திற்கு உத்வேகம் கொடுப்பவை. மகா பெரியவாளின் "தெய்வத்தின் குரல்'  மற்றும்  சுவாமி தயானந்த சரஸ்வதியின் சொற்பொழிவுகள் என்னை உருவாக்கியப் பல்கலைக்கழகங்கள். இந்த அபூர்வ கல்லூரிகளில் நான் சேர்ந்து திளைத்தது என் பெற்றோர் காட்டிய வழி என்பேன்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com