ஐந்து பேர் ஐந்து செய்தி

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு, கேரளத்தில் உள்ள அவரது சொந்த ஊரான எலபுள்ளி என்னும் கிராமத்தில் நினைவு மண்டபம் கட்டவிருக்கிறார்கள்.
ஐந்து பேர் ஐந்து செய்தி

• நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாடகத்தில் முதன் முதலாக நடித்த பாத்திரம்} சீதை. அது மட்டுமல்ல. பரதன், தசரதன், லட்சுமணன், ராவணன், சூர்ப்பணகை, மண்டோதரி ஆகிய பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

• இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு, கேரளத்தில் உள்ள அவரது சொந்த ஊரான எலபுள்ளி என்னும் கிராமத்தில் நினைவு மண்டபம் கட்டவிருக்கிறார்கள்.

• தயாரிப்பாளரும், இயக்குநருமான காரைக்குடி நாராயணன், நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். படத்தின் தலைப்பு: "எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை'. இக்கால இளைஞர்களையும் தன் வசனங்களால் ஈர்க்க முடியும் என்கிறார் இந்த 70 வயது இளைஞர்.

• கவிஞர் அறிவுமதி மீண்டும் "தை' கவிதை இதழைக் கொண்டு வருகிறார். கவிதைகள் மாத்திரமே இடம்பெறும் இந்த சிற்றிதழ் தமிழ் இலக்கிய வெளியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

• பிரபலங்களின் பெயர்களை நகருக்கும், சாலைகளுக்கும் சூட்டுவதுண்டு. ஆனால், வித்தியாசமாக "தாய்' வார இதழ் ஆசிரியரும், முன்னாள் எம்.பி.யுமான வலம்புரி ஜானின் பெயர் சென்னை, பெரியார் பாதையில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மருக்கு (மின்மாற்றி) சூட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com