நம்பிக்கை மிகுந்த இடத்தில் ஒரு கோயில்

மயிலாப்பூரில் உள்ள ஏழு சிவன் கோயில்களில் வாலீஸ்வரர் கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலும், "வாலீஸ்வரர்' என்ற பெயரில் வீற்றிருக்கும் சிவலிங்கம்
நம்பிக்கை மிகுந்த இடத்தில் ஒரு கோயில்

மயிலாப்பூரில் உள்ள ஏழு சிவன் கோயில்களில் வாலீஸ்வரர் கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலும், "வாலீஸ்வரர்' என்ற பெயரில் வீற்றிருக்கும் சிவலிங்கம் வீற்றிருக்கும் கர்ப்பகிரமும் கிழக்கு முகத்தை நோக்கி அமைந்துள்ளன. இக்கோயில் தல வரலாற்றின்படி, வானர அரசனான வாலியும், அவரது சகோதரர் சுக்ரீவனும் இந்த சிவலிங்கத்தை வழிபட்டதால் இப் பெயர் பெற்றது.
இந்த வரலாற்றை உறுதிப்படுத்தும் வகையில், கர்ப்பகிரகத்துக்கு அருகில், பணிவை வெளிப்படுத்தும் விதமாக வாலியின் விக்ரகம் அமைந்துள்ளது. "பெரிய நாயகி' என்ற பெயரில் வழிபடப்படும் பார்வதி தேவியின் சந்நிதி, இக்கோயிலின் தெற்கு முகத்தைப் பார்த்தவாறு, கர்ப்பகிரகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. 
சிவன், பார்வதி சந்நிதிகளை இணைக்கும் வகையில் ஒரு கல் மண்டபம் அமைந்துள்ளது. கணேசர், சுப்பிரமணியர், பைரவர், ஐயப்பன், நவகிரகங்கள், சனீஸ்வரன், சிவ பக்தர்கள் என அனைத்துக் கடவுள்களும் இந்த சிறிய கோயிலில் வீற்றிருக்கின்றன.
இங்கு சுமார் 20 கல்வெட்டுகள் தொல்பொருள் ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து கல்வெட்டுகளும் சோழர் காலத்தில் பொறிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகளாகும். கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழைமையான கல்வெட்டுகள், தென்னிந்தியாவின் பெரும் பகுதியை சோழர்கள் பெரும் புகழோடு ஆட்சி புரிந்த காலத்துடன் தொடர்புடையவை ஆகும்.
இங்குள்ள பெரும்பாலான கல்வெட்டுகள், கி.பி. 13-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 15-ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டவை. உள் மண்டபத்தில் உள்ள ஒரு கல்வெட்டு, அநேகமாக முதலாம் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்துடன் (கி.பி. 985-1014) தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது. மேலும், முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1071-1122) காலத்தைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகளும், இரண்டாம் ராஜராஜ சோழனின் (கி.பி. 1146-1173) காலத்தைச் சேர்ந்த ஒரு கல்வெட்டும் உள்ளன.
13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டில் மதுராந்தக பொத்தபி சோழன் என்ற அரசன் பற்றிய குறிப்பும், அதே நூற்றாண்டைச் சேர்ந்த வேறொரு கல்வெட்டில் பல்லவ வம்சத்தின் வாரிசும், மறக்கப்பட்ட வீரருமான கோப்பெருஞ்சிங்கன் பற்றிய குறிப்பும் உள்ளன. இந்தக் கல்வெட்டுகள், இக்கோயிலுக்கும், மற்ற கோயில்களுக்கும் அளிக்கப்பட்ட நன்கொடைகள் பற்றி தெரிவிக்கின்றன. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை குறித்தும் ஒரு குறிப்பு காணப்படுகிறது.
கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர் 
- கோயில் சிற்பங்கள் ஆய்வாளர்
தமிழில்: பிரவீண்

வாலியின் விக்ரகம்
இக்கோயிலில் வாலியின் அரிய விக்ரகம் காணப்படுகிறது.

முக்கிய கல்வெட்டுகள்
சோழர் காலத்தின் பல்வேறு கல்வெட்டுகள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருவான்மியூர் பற்றிய குறிப்பு
திருவான்மியூர் சிவன் கோயிலைப் பற்றிய குறிப்பு இங்கு உள்ளது.

தேவியின் பெயர்
பார்வதி தேவி இங்கு பெரிய நாயகி என்று வழிபடப்படுகிறார்.

அமைவிடம்
புகழ்பெற்ற கோலவிழி அம்மன் கோயில் அருகில் வாலீஸ்வரர் கோயில் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com