2018-இல் 18-இன் சிறப்பு

2018-ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இதில் 18 தான் சிறப்பு. இந்த 18-ஐ சார்ந்து தான் எவ்வளவு நம்பிக்கைகள்!

2018-ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இதில் 18 தான் சிறப்பு. இந்த 18-ஐ சார்ந்து தான் எவ்வளவு நம்பிக்கைகள்!

முதலில் 18 என்ற எண்ணை 1,2,3,6 மற்றும் 9 ஆகிய எண்களால் வகுக்க முடியும். ஆச்சரியம் என்னவென்றால் 3+6=9. ஆனால், 18 முழுமையான எண் அல்ல.

இந்தியாவில் பெண்களுக்கு 18 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்ய முடியும்.

18 வயதில் ஓட்டுரிமை கிடைக்கும்.

18 வயதில் தான் வங்கியில் கணக்கு வைத்து கொள்ளலாம்; ஓட்டுநர் உரிமம் பெற முடியும்.

மொத்தமுள்ள 195 நாடுகளில் சுமார் 119 நாடுகளில் மது அருந்த குறைந்தபட்ச வயது 18.

யூதர்களின் நம்பிக்கைபடி, 18 என்பது வாழ்க்கையை குறிப்பதாகும். வாழ்வு வளமாக அமைய அன்பளிப்பு மற்றும் தானங்களை இவர்கள் 18 என்ற அடுக்கு எண்ணிக்கையிலேயே வழங்குவர்.

ரோமானியர்களின் பழக்க வழக்கப்படி ""18'' என்றால் ""நெருங்கிய உறவு'' எனப் பொருள்!

சீன மொழியில் 18 என்பது அதிர்ஷ்ட எண். 

அமெரிக்காவில் 18 மாகாணங்களில் திருமண வயது 18-ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மகாபாரத யுத்தம் மொத்தம் 18 நாள்கள் நடைபெற்றன. இந்தப் போரில் 18 படைகள் பங்கேற்றன (கெüரவர் சார்பில் 11 படைகள்; பாண்டவர்கள் சார்பில் 7 படைகள்) 

மகாபாரத இதிகாசம், மொத்தம் 18 அத்தியாயங்களைக் கொண்டது.

ராமாயணத்தில் ராமர் - ராவணன் யுத்தம் மொத்தம் 18 நாட்கள் நடைபெற்றது.

பகவத்கீதை மொத்தம் 18 அத்தியாயங்களைக் கொண்டது. 2005-இல் உண்ஞ்ட்ற்ங்ங்ய் என்ற பெயரில் ரிச்சர்ட் பெல்ஸ் இயக்கத்தில் ஓர் ஆங்கில படம் வெளிவந்தது. ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய பிரபல நாவல் உல்லிசஸ். இது 18 அத்தியாயங்களைக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com